0
அம்மாவின் வேப்ப மர ஆத்தா
இப்போதும் பயமுறுத்துகிறார்
அருகில் போகும்போது
நள்ளிரவில்
நொடிச்சான் மகன்
பாம்பு கடித்து
இறந்ததிலிருந்து
அதிகரிக்கிறது
ஆத்தா பற்றிய பயம்.
ஆத்தாவுக்கும்
பாம்புக்குமான உறவு பற்றி
இதுவரை அம்மா சொன்னதில்லை
எப்போதாவது
எதிர்படும் பாம்புகளை
ஆத்தாவாகவும்
வேப்பமரங்களை
பாம்பாகவும் பார்க்கின்ற
குழப்பத்தில்
இரவுகள் நீர்த்துபோகின்றன.
இரண்டு முட்டைகளை திருடி
முந்தா நாள் குடித்ததற்காக
அடிக்கிறாள் அம்மா.
ஆத்தா அடிப்பதாகவே
படுகிறதெனக்கு.
.................
0
'நீயில்லையின்னா
செத்துருவேன்' என்ற நீ,
உன் கணவனுடனும்
நான் என் மனைவியுடனும்
அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
காதல், கல்யாணத்தில் முடிய
பூக்கட்டிப் பார்த்ததில்
சாதக பதில் தந்த
வடக்குவா செல்வி அம்மன்
அப்படியே இருக்கிறாள்
ஆக்ரோஷமாக.
கோயில் சுற்ற வரும் இளசுகள்
நம்மைப்போலவே இன்றும்
காதலிக்கிறார்கள்
பூக்கட்டுகிறார்கள்.
அம்மனும் தயாராகவே
இருக்கிறாள்
அருள்பாலிக்க.
.............................
0
தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்
ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்.
இன்று அவர் குடிக்கவில்லை.
26 comments:
உங்களுக்கு வேப்பமரம், எனக்கு தென்னமரம்... பயம் ஒன்றுதான்... தென்னையில் வரையப்பட்ட பாம்புப்படத்திற்கு மகுடியில்லாமல் ஊதியிருக்கிறேன் இரவொன்றை..
எதோவொரு கோவிலுல எவளுக்காகவோ வேண்டினேன். என்னோட சேத்துவச்சா வெள்ளியில கண்ணடக்கம் செஞ்சிவைக்கிறன்னு...
கொஞ்சநாளு கழிச்சி பாத்தப்போ புதுசாவொரு கண்ணடக்கம் இருந்துச்சு.. அவளோட ஆச நிறைவேறிடுச்சு...
கடைசிவொன்று.. மிக யதார்த்தம்...
க்ளாஸ்....
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மூன்று கவிதைகளும் அருமை..... மூன்றாவதுக்கு சொல்ல வார்த்தை இல்லை..
முத்துக்கள் மூன்று. அருமை.அருமை.
//எதோவொரு கோவிலுல எவளுக்காகவோ வேண்டினேன். என்னோட சேத்துவச்சா வெள்ளியில கண்ணடக்கம் செஞ்சிவைக்கிறன்னு...
கொஞ்சநாளு கழிச்சி பாத்தப்போ புதுசாவொரு கண்ணடக்கம் இருந்துச்சு.. அவளோட ஆச நிறைவேறிடுச்சு..//
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
நன்றி பாலாசி.
'நீயில்லையின்னா
செத்துருவேன்' என்ற நீ,
உன் கணவனுடனும்
நான் என் மனைவியுடனும்
அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
.......எல்லா கவிதைகளிலும் எதார்த்தம் கொஞ்சுகிறது. அருமை.
இதுபோல புற்றிலும் பாம்பிலும் பெரும் நம்பிக்கை இல்லாமலிருந்தாலும் ஒரு கலாச்சாரம் என்ற முறையில் அது அழகு தானே ...
மற்ற நாடுகளில் இது போன்ற பழக்க வழக்கங்களை அந்த்ரோபோலோஜி என்று படிக்கும் நாம் என் இவற்றை ஒரு பழக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது?
எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்றால் வாழ்க்கையில் வண்ணம் வேண்டுமல்லவா
?
உங்கள் கவிதை படித்த பொது ஜஸ்ட் தோன்றிய எண்ணங்கள் .
மற்றபடி கவிதை வழக்கம் போல மிக அருமை ...
என் மகனுக்கு நீ பலூனும் உன் மகளுக்கு நான் ரிப்பனும் வாங்கி தருவது ப்ரியம் இருபதாலே தானே ?
என்று நான் படித்திருக்கிறேன்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
//தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்
ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்.
இன்று அவர் குடிக்கவில்லை.//
ரொம்ப அழகா வந்திருக்கு இது...
//க்ளாஸ்...//
நன்றி பைத்தியக்காரன்.
கிராமத்து எதார்த்தத்தை கண் முன்னே உலவ விடுகிறீர்கள்.
//அங்கே வருவது
அப்பாதான்.
இன்று அவர் குடிக்கவில்லை.//
நிதர்சனம்.
நாடோடி சார் நன்றி.
துபாய் ராஜா, நன்றி.
.............
//எல்லா கவிதைகளிலும் எதார்த்தம் கொஞ்சுகிறது. அருமை//
நன்றி சித்ராக்கா.
//நாம் ஏன் இவற்றை ஒரு பழக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது?
எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்றால் வாழ்க்கையில் வண்ணம் வேண்டுமல்லவா//
ஆமா, பத்மா மேடம். உண்மைதான். நானும் அதை நம்பிக்கைகள் என்ற அடிப்படையிலேயா பார்க்கிறேன். அதற்காகவே எழுதுகிறேன்.
நன்றி மேடம்.
ரவுத்ரன் சார் நன்றி.
வி.பாலகுமார்ஜி நன்றி.
:) அருமைங்க..
//காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்//
வார்த்தை அணிவகுப்பு அருமை. Mr...........
{எனக்கென்னவோ உங்களை இந்த பெயரில் அழைக்க இயலவில்லை. உங்கள் புனைப்பெயரை மாற்ற முயற்சிக்கலாமே....}
மிக அருமை.... வாழ்த்துக்கள்.
தோழா.. முதல் கவிதை
உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படுத்துகிறது.
இரண்டாவது வடக்குவாச்செல்லியம்மாளை
உண்டு இல்லையென
சண்டைக் கிழுக்கிறது.
இது க்ளாஸ்.அப்படியே ஆளைச்சுருட்டுகிற கவிதை
//தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்
ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்.
இன்று அவர் குடிக்கவில்லை.//
முத்துலட்சுமி நன்றி.
................
//{எனக்கென்னவோ உங்களை இந்த பெயரில் அழைக்க இயலவில்லை. உங்கள் புனைப்பெயரை மாற்ற முயற்சிக்கலாமே....}//
ஒண்ணு்ம் பிரச்னையில்லை அஹமது. நானே விரும்பி வைத்த பெயர்தானே. இதே பெயரில் நீங்கள் அழைக்கலாம்.
...........
//தோழா.. முதல் கவிதை
உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படுத்துகிறது//
ஆமா, தோழர். கவிதையிலிருந்து கதையாக்கப்பட்டதுதான் 'வேப்பமரமும் ஆத்தாவும்'.
நன்றிஜி.
கவிதைகள் ஏ1
வாவ்!
எங்கு ஒளிச்சு வச்சுருந்தீங்க,இவ்வளவு நல்ல கவிதைகளை?
(ஒளிச்சு வைக்க முடியுமா,கவிதைகளை?) :-)
பிரசன்னா, டாக்டர் ஸ்ரீஜித் நன்றி.
...........
(ஒளிச்சு வைக்க முடியுமா,கவிதைகளை?) :-)
அதெப்படி முடியும்?
நன்றி ராஜாராம்.
வாவ்....இண்ணைக்குத்தானே உங்க கவிதை பாத்தேன்.இயல்பா அசத்தலா இருக்கு.எது முன்னுக்கு எது அடுத்ததுன்னு சொல்ல முடியல.மூன்றுமே யதார்த்தம்.
மூன்றாவது அப்படியே வாழ்வு !
Post a Comment