Sunday, March 28, 2010

முன்னாள் கவிதைகள்-1

0

யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.

0
தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!

...............................

சாமிகள்

0
பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?

0
வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.

0
எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது

0
வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின் மனைவி

0
பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

30 comments:

Unknown said...

/தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!/

Nice.

meenamuthu said...

//இது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம். முங்கினால் உங்கள் முகம் காணலாம்.//

நிஜம்!

// யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.//

அருமை!

// எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது //

நச்..!

பத்மா said...

எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது


இதை இப்பொழுது எழுதிருந்தால் நிறைய எழுதிருக்கலாம் :)

எல்லா கவிதைகளும் அருமை .பகிர்வுக்கு நன்றி

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.//

//வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.//

//பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.//

அனைத்திலும் அருமை.

முன்னாள் கவிதைகள்
முத்தான கவிதைகள்.

வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

நாடோடி said...

அனைத்து க‌விதைக‌ளும் அருமை...

ஆடுமாடு said...

//இதை இப்பொழுது எழுதிருந்தால் நிறைய எழுதிருக்கலாம் :)//

கரெக்டா சொன்னீங்க...

நன்றி மேடம்.

காமராஜ் said...

இந்தக்கவிதைகள் என்வீட்டுக்கு,எனது தெருவுக்கு,நான்விலையாண்ட மாடன் கோவிலுக்குசில விமரிசனங்களோடும் கூட்டிப்போகிறது.சொக்கவைக்கிற சொற்கட்டும்,கருவும் அழகு.தோழா.

ஆடுமாடு said...

மீனா முத்து வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

செல்வராஜ் ஜெகதீசன் சார் வருகைக்கு நன்றி.

இரசிகை said...

nalllaayirukke......yellaamum!

:)

மணிஜி said...

நேட்டிவிட்டி!!

நேசமித்ரன் said...

//எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது//

அருமை அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ஆடுமாடு. ஆனா, நீங்க கவிதைக்குன்னு தனியா வேற ஒரு வலைப்பதிவு வச்சிருந்தீங்கல்ல?

இனியாள் said...

நல்ல கவிதைகள்.

Chitra said...

முன்னாள் கவிதைகள், இந்நாளிலும் நல்லா இருக்குங்க. :-)

ஆடுமாடு said...

//முன்னாள் கவிதைகள்
முத்தான கவிதைகள்//

நன்றி ராஜா அண்ணாச்சி.

ஆடுமாடு said...

//அனைத்து க‌விதைக‌ளும் அருமை...//

நன்றி நாடோடி அண்ணேன்.

ஆடுமாடு said...

//இந்தக்கவிதைகள் என்வீட்டுக்கு,எனது தெருவுக்கு,நான்விலையாண்ட மாடன் கோவிலுக்குசில விமரிசனங்களோடும் கூட்டிப்போகிறது//

நன்றி தோழர் காமராஜ்.
..............

ரசிகை நன்றி.

ஆடுமாடு said...

நன்றி மணீஜி, நேட்டிவிட்டியை தவிர வேறென்ன தெரி்யும் எனக்கு?

நன்றிஜி.

ஆடுமாடு said...

நேசமித்ரன் சார் நன்றி.
.........

//நல்லாயிருக்கு ஆடுமாடு. ஆனா, நீங்க கவிதைக்குன்னு தனியா வேற ஒரு வலைப்பதிவு வச்சிருந்தீங்கல்ல//

சுந்தர்ஜி, அது காலாவதியாயிடுச்சு.

ஒண்ணே போதும்னுதான் இதை தொடர்றேன். நன்றிஜி.

ஆடுமாடு said...

இனியாள் நன்றி.

சித்ராக்கா நன்றி.

க.பாலாசி said...

//வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.//

நடைமுறை உண்மையை அவிழ்த்துவிட்டிருக்கும் இக்கவிதை நன்று....

ஆடுமாடு said...

நன்றி பாலாசி.

vidivelli said...

பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?

0
வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.
supper .........

ஆடுமாடு said...

நன்றி விடிவெள்ளி.

Balakumar Vijayaraman said...

தென்தமிழகத்து சிறு தெய்வங்களை அழகா காட்சிப்படுத்தியிருக்கீங்க.

ஆடுமாடு said...

பாலகுமார் நன்றி.

பா.ராஜாராம் said...

சாமிகள் கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு மக்கா!

ஆடுமாடு said...

நன்றி பாரா.

ஹேமா said...

உங்க கவிதைகளிலும் உங்க கிராமத்து வாசனை.நிறைவாய் பிடித்தமாய் வாசித்தேன்.