Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Monday, June 2, 2008

மண்ணில் முளைத்த கதைகள்

ரகசியங்களைப் புதைத்துக்கொண்டு
அப்பாவியாக நிற்கிறது கிராமம்.
அதன் நீள அகலங்களில் ஏராளமான கதைகள்
மண்ணாகவும் கல்லாகவும் விரவி கிடக்கின்றன.
அள்ளி அருந்தவும், அடிமனதில் சொருகவும்
சுகமான சுவாரஸ்யங்களை மடித்து
வைத்திருக்கிறது அந்த பொட்டல் மண்.
அந்த வேர்தேடி போகப் போக நம்
முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது. நவீனம் எட்டிப்பார்க்காத
அந்த வயக்காடுகள் வானத்தை மட்டுமே
நம்பிக்கொண்டிருக்கிறது.
மழையும் நீருமே உறவாகியிருக்கிற
அந்த வரப்புகளில் பூத்துக்குலுங்குகிறது
ஆயிரக்கணக்கான கதைகள். ஒரு கையால்
உருவ உருவ உங்களாலோ என்னாலோ
பிடித்துவிட முடியாத அளவுக்கு அவை
வந்துகொண்டேயிருக்கிறது.
அவற்றை கட்டுக் கதைகள் என்று
ஒதுக்கி விடமுடியாது. விளிம்பு நிலை மக்களின்
நம்பிக்கைகளின் அடிப்படையான
இந்த கதைகள் சாகாவரம் பெற்றவை.
இதற்கான மூலம் என்ன? எப்படி வந்திருக்க முடியும்
என்கிற ஆராய்ச்சியெல்லாம் நாட்டார் வழக்காற்றியல்
களப்பணியாளர்களின் கையில் இருக்கிறது.
இந்த மண்ணில் முளைத்த
அந்த (நான் கேள்விபட்ட)
வாய்மொழிகதைகளை எழுத இருக்கிறேன்.
விரைவில்.