பயலுக்கு களவு அதிமாயிட்டு. சொந்த வீட்டுல திருடுன பய, அக்கம் பக்கம் வீட்டுல கையை வைக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு நாளு காலையில சுவரு முட்டி விக்கிற, கொட்டை கடைகிட்ட நல்ல கூட்டம். கடையில இருந்த ஒரு 45 ரூவாயையும் பெரிய சுவர் கடிகாரத்தையும் காணலை. கொட்டை கடை கதவுங்கறது ஈசியா திறந்துட கூடியதுதான். இதுவரை இபப்டியொரு சம்பவம் நடக்காத ஊர்ல, நல்லா பூட்டிட்டு போவணும்னு அவரும் நினைப்பாரா என்ன?
கடைக்குள்ள அழுக்குபுடிச்ச, செவப்பு நிற சீசன் துண்டு மட்டும் கெடக்கு. கொட்டை, கடைக்குள்ள வேற என்னலாம் காணாம போயிருக்குன்னு பார்க்குறாரு. கொட்டை மவனுவோ, 'கடையில கைய வச்ச நாயி மட்டும் கெடச்சது, இங்கயே பொலி போட்டுர வேண்டியதான்"னு குதிக்காவோ.
துண்டை பார்த்ததும் கொட்டைக்கு புடிபட்டு போச்சு. நேத்து சாய்ங்காலமா, சைலு பயதான் இந்த மாதிரி துண்டை போட்டுட்டு வந்து சுவருமுட்டி குடிச்சுட்டு போனாம்னு. மவனுவோட்ட சொல்லாம, ஏல, கடைய பாத்துக்கன்னு சொல்லிட்டு நேரா, கிட்னம்மா வீட்டுக்கு வந்தாரு.
வாசல்ல உக்காந்து குறுணையை பொடச்சுட்டு இருந்தா கிட்னம்மா.
' உம் மவன் இருக்கானா?
'ராத்திரில இருந்தே காணலையே... எங்க குடிச்சுட்டு எங்க கெடக்கானோ தெரியலையே. ஏம்யா எதுவும் வேலையா?"
'வந்தாம்னா, நான் தேடுனன்னு சொல்லு'ன்னுட்டு கொட்டை திரும்புனதும், தூரத்துல தெரியுத ராமசாமி பண்டுவன் தொழுவுல, ஒரு தலை குணிஞ்சு குணிஞ்சு எந்திரிக்கதை பாத்துட்டாரு.
அவரு சந்தேகம் சரியாயிட்டு. இந்தப் பயதான் வந்துருக்காம்னு. அவன கவனிக்காத மாதிரி பின் பக்கம் இருக்குத கருவ மூட்டுக்குள்ள ஒண்ணுக்கு இருக்குத மாதிரி உக்காந்துகிட்டாரு. இவரு இங்ஙன இருக்கது கிட்னம்மா மவன் சைலுக்கு தெரியலை. மெதுவா அங்க இங்கன்னு பார்த்துட்டு வீட்டு வாசல்ல நின்னவனை, 'ஏம்ல, கொட்டை வந்து தேடிட்டு போனாரு. என்னத்தையும், எழவை இழுத்துட்டு வந்தியா"ன்னா கிட்னம்மா.
'ஒரு எழவையும் இழுக்கலை. நீத்தண்ணி இருந்தா கொடு'ன்னான்.
டமார்னு முள்ளுக்கம்பை வச்சு பொத்துன்னு ஒரு அறை அவன் முதுவுல விழுந்ததும் அம்மான்னு கீழ விழுந்தாம்.
கிட்னம்மா பதறிட்டு வெளிய வந்தா.
கொட்டை, கம்பை தூக்கிட்டு திரும்பவும் மண்டையில ஒரு போடு போட்டாரு.
'எய்யா எய்யா அடிக்காதீங்கய்யா... எம்புள்ள என்னய்யா பண்ணுனா... அவன விட்டுருங்கய்யா'ன்னு கெஞ்சுதா கிட்னம்மா.
ஆத்திரம் தீரலை. கொட்டைக்கு. கிட்னம்மாவை தள்ளிவிட்டு, சைலு இடுப்புல ஒரு மிதி.
யம்மான்னு அழுதாம்.
அக்கம் பக்கத்து வீட்டுலயிருந்து ஆட்கள் வந்துட்டாவோ.
'ஏம், அந்த ஏலுவத்த பயலை போட்டு அடிக்கீரு... அந்த பய என்ன பண்ணுனாம்"ன்னு கேக்காவோ.
கொட்டை, கம்பை தூர போட்டுட்டு, ' ஏல, மேல தெரு பக்கம் இனும பாத்தேன். சங்கை அறுத்துருவேன்"ன்னுட்டு, பக்கத்துல நின்னவோட்ட, விஷயத்தை சொன்னாரு.
கிட்னம்மாவுக்கு தூக்கி வாரி போட்டு. ஒப்பாரியை ஆரம்பிச்சுட்டா. இதுக்கா நான் புள்ளை வளர்த்தேன். ஊர்க்காரன் என் கண்ணு முன்னால அடிச்சு மிதிக்கிற மாதிரி வச்சுட்டியே... இன்னும் நான் உயிரோட இருக்கணுமா?
இதுக்குப் பெறவு கிட்னம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சொகமில்லாம போவும். மவன் கவலையிலே பாதி உசுரு போயிட்டு. மருவகாரியும் இங்க வார மாதிரியும் தெரியல. இவனும் திருந்துத மாதிரி தெரியல.
ஒத்தப்பனைகிட்ட சாராயம் வடிக்குத மாரிகிட்ட அஞ்சாறு பாட்டிலை வாங்கி போட்டுக்கிட்டு, கருத்த பிள்ளையூர்ல விக்குத வேலையை பாத்தான் சைலு. ஒரு நாளு போலிசு பிடிச்சுட்டு போன பெறவுதான் கிட்னம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சுது. அன்னைக்கு படுத்தவதான். ஒரேடியா கெடயில கெடந்துட்டா.
அவ இபப்டி கெடந்தாலும் இந்தப் பய, தன்னோட குடியை நிறுத்தலை. சொந்தகாரவோ எல்லாம் வந்து எவ்வளவோ புத்தி சொல்லியும் திருந்தலை இந்த ப்ய.
இன்னா, உயிரு அந்தா இந்தான்னு இழுத்துக்கிட்டு கெடக்கு. பொட்டுன்னு அவ உசுரு போனாலும், 'ஏ ஆத்தா போயிட்டியே"ன்னு ஓங்கி அழதுக்கு அவாட்ட ஒரு பொட்டப்புள்ள கூட இல்லை.
15 comments:
//ஒரு நாளு காலையில சுவரு முட்டி விக்கிற, //
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த பெயரை கேள்விப்படுகிறேன்.........
அதை டிரை பண்ணி பாத்திருக்கீங்களா அண்ணே..........
கிட்னம்மாக்கள் மேல படைச்சவனுக்கு என்ன பகை இருக்க முடியும்? எத்தனை உசிரை பிறந்ததும் அழவிட்டு பிழைக்க வைத்தவளுக்கு இறந்தால் அழ ஒரு நாதியில்லாம போச்சா:((
அப்படின்னா என்ன?
வருத்தமாக இருக்குதுங்க.... ம்ம்ம்ம்......
//ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த பெயரை கேள்விப்படுகிறேன்.........
அதை டிரை பண்ணி பாத்திருக்கீங்களா அண்ணே...//
டிரை பண்ணி, சுவத்துல முட்டுற மாதிரி விழுந்து நாளு பூரா சிரிச்சி... ஒரே காமெடிதான் போங்க.
நன்றி அத்திரி முனிவரே!.
வானம்பாடிகள் ஐயா, என்னத்த சொல்ல?
நன்றி.
அப்படின்னா என்ன?
பத்மா மேடம், சுவரு முட்டிய கேட்கிறீங்களா?
அதுவும் சாராயம் மாதிரிதான். குடிச்சா சுவத்துல முட்டுற மாதிரியே வரும். பக்கத்துல சு்வரு இருந்தா அதை புடிச்சுக்கிட்டு நிற்கத் தோணும். பாதி பேரு குடிச்சுட்டு, சுவத்துல முட்டிட்டுதான் நிப்பாங்க. இப்ப டாஸ்மாக் வந்து அந்த பிரச்னையை போக்கிருச்சு.
//வருத்தமாக இருக்குதுங்க.... ம்ம்ம்ம்...//
ஆமாக்கா. நன்றி.
அது என்னமோ தெரியலைங்க.. பல தாய்களுக்கு இப்படித்தான் பொறக்குறானுங்க மகனுங்க... ஆனாலும் இதுபோன்ற கிட்னம்மாக்கள் மட்டும் இந்தமாதிரி மகனுங்கள விட்டுக்கொடுக்கறதேயில்ல... என்னமோ போங்க...
நல்ல இருந்துச்சு...சின்னதா முடிச்சுட்டீங்கலே
நன்றி பாலாசி,
நன்றி ராசராச சோழன்
எப்பிடி இருந்தாலும் பெத்த பாசம்தான் எங்கயும் அழுவுது.
சுவரு முட்டி, கொட்டை நல்ல பெயர்த் தெரிவுகள்.ஊரை அல்லது சாதியை அடையாளம் காட்டும் பெயர்களா ?
//சுவரு முட்டி, கொட்டை நல்ல பெயர்த் தெரிவுகள்.ஊரை அல்லது சாதியை அடையாளம் காட்டும் பெயர்களா?//
இல்லை, சுவரு முட்டி, சாராயம் மாதிரியான
போதை வஸ்து. கொட்டை, ஒருத்தரோட பட்ட பெயர்.
நன்றி ஹேமா.
Nalla nadaiyil oru arumaiyana Story.
Vazhththukkal.
நன்றி சே.குமார்
Post a Comment