Sunday, June 7, 2009

பேட்டியாம்ல!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அதுக்கு நீண்ட ப்ளாஷ்பேக இருக்கு. எங்கப்பா மகாராஷ்ட்ராவுல வேலை பார்த்தாரு. அங்கயே பொறந்துட்டதால இந்த பெயர். இந்தப் பெயர் கண்டிப்பா பிடிக்கும். அதுலயும் ஒரு சென்டிமென்ட் இருக்கு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
டிசம்பர் 8. நண்பனின் மரணத்தின் போது...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு டைரக்டர் 15 வருஷத்துக்கு முன்னால என்னை அசிஸ்டெண்டா சேர்த்துக்கிட்டாரு.

4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறு. புளித்தண்ணி. கானம் துவையல்.

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கண்டிப்பா.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கிணத்துல.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பல்லு. ஏன்னா எனக்கு ஓட்டைப்பல்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
உடனே கோபம் வராது. பிடிக்காததும் அதுதான்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
தினமுமே லேட்டாவே வாங்க.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் சின்னவன் நீனோ

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ப்ளூ ஜீன்ஸ். வொயிட் டிசர்ட்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
களவானியே...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு.

14.பிடித்த மணம்?
மல்லி... மல்லி

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

ஜ்யோவ்ராம் சுந்தரு, நம்ம பைத்தியக்காரன்... அநியாயத்துக்கு நல்லவங்களாச்சே!

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே.


17. பிடித்த விளையாட்டு?
செல்லாங்குச்சி.

18.கண்ணாடி அணிபவரா?

பின்ன.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அப்டிலாம் இல்லை. எல்லாத்தையும் பார்த்து தொலைச்சுடுவேன்..

20.கடைசியாகப் பார்த்த படம்?
மாயாண்டி குடும்பத்தார்

21.பிடித்த பருவ காலம் எது?
கோடை. கிணத்துல குளிக்கலாமில்ல.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

பரசுராமின் சாளரம்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் வைக்கிறதே இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: கோயில் கொடையில் பட்றையன் சாமிக்கு அடிக்கும் கொட்டு.
பிடிக்காதது: ஏங்க இங்க வாங்க!

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இலங்கை. டில்லி. எது தூரம்?

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா மாடுமேய்ப்பேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கள் இறக்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அதைதான் தேடுறேன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தோணியாறு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மூச்!

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நதியில் விழுந்த இலை.

17 comments:

நாடோடி இலக்கியன் said...

ரசிக்கும்படி இருந்தது.குறிப்பாக
24b,27,32

இரண்டாவது பதிலில் ஒரு "ண" விட்டுபோச்சு திருத்திடுங்க.

அத்திரி said...

//31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மூச்!//


அப்படியா போவுது சங்கதி........ வெவரமாத்தான் இருக்கீங்க

அத்திரி said...

//4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறு. புளித்தண்ணி. கானம் துவையல்.
//

நல்ல பதில்........நம்ம ஊரை ஞாபகப்ப்டுத்திட்டீங்க.....

ஆடுமாடு said...

நாடோடி அண்ணாச்சி, நன்றி. பிழையை திருத்திட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பிடிக்காதது: ஏங்க இங்க வாங்க!//

:))

ஆடுமாடு said...

அத்திரி, ஊரை மறக்க கூடாதுன்னுதான் அதை பத்தியே எழுதிகிட்டிருக்கேன். நன்றிங்க.

ஆடுமாடு said...

முத்து மேடம் வருகைக்கு நன்றி.

ஷாகுல் said...

//18.கண்ணாடி அணிபவரா?

பின்ன. //

கண்ணாடி பின்ன அணிய படாதுங்க

முன்ன அணியணும்.

☼ வெயிலான் said...

அண்ணாச்சி,

நீங்களும் உஜாலாக்கு மாறீட்டீங்களா? நல்லது.

ஆடுமாடு said...

ஷாகுல் அண்ணேன். நன்றி

ஆடுமாடு said...

வெயிலான், அதுக்கு மாறி கொஞ்சம் நாளாச்சு!

Boston Bala said...

கலக்கல் :)

குசும்பன் said...

பைத்தியகாரன் எழுதியதுக்கு நீங்கதான் காரணமா? இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்!

கடைசி பதில் கலக்கல்! கவிஞர் என்றால் சும்மாவா?:))

ஆடுமாடு said...

//கலக்கல் :)//

நன்றி பாலா சார்.

ஆடுமாடு said...

நன்றி குசும்பு.

tamilraja said...

அருமை

நதியில் விழுந்த இலை

ஆடுமாடு said...

தமிழ்ராசாஜி,
ரொம்ப நன்றி.