Monday, June 15, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-3

மந்தரக்கோன் கைய புடிச்சதும் திமிருனாரு. 'எம் மேலயால கையை வக்கியோ'ன்னு வேட்டிய மடிச்சு கெட்டுனாரு. அதுக்குள்ள நாலஞ்சு இளவட்ட பயலு்வோ வந்து தர தரன்னு இழுத்துட்டு வந்துடானுவோ. அந்தானி, ஊர்ல முடிவு பண்ணுனாவோ. இனும பெரியசாமிக்கு இந்த திருட்டு பய ஆடக்கூடாதுன்னு. இந்த வெவாரத்தை வச்சு, சங்க பணத்து கணக்கு வழக்கையெல்லாம் மோவப்பயகிட்ட கொடுத்தாவோ. 'அடுத்த கொடை வாரதுக்குள்ள எவன் பெரியசாமிக்கு ஆடுதானோ அவன் ரெத்தம் கக்கி சாவறதை பாக்கத்தான் போறியோ"ன்னு சாபத்தை கொடுத்துட்டு போனாரு மந்தரக்கோன்.

இப்படியொரு தப்பை பண்ணிட்டோமே; எவனும் மதிக்கமாட்டானுவோளேங்க கவலையெல்லாம் மந்தரக்கோனுக்கு இல்லை. இன்னும் அவனை பெரியசாமிகொண்டாடின்னு சொல்லிக்கிட்டிருக்காவோ.அவனும் அதே கெத்தோட மானங்கெட்ட பொழப்பு நடத்திக்கிட்டிருதான் இருக்காம்.

அடுத்த கொடைக்கு கால் நாட்டுன ராத்திரி, வீட்டுக்குள்ள இருந்து மந்தரக்கோனுக்கு சாமி வந்துட்டு, 'ஓய் ஓய்"னு சத்தம் போடுதாரு. அவரு வீட்டு முன்னால சாமியாடிட்டு அவரு போடுத சத்தம் கீழத் தெரு வரைக்கும் கேட்டுது.
'என்னையவாடா எதுக்குயோ. பாருங்க என்ன பண்ணுதன்னு" -சத்தமா இதை சொன்னதும் அடுத்தாபல புதுசா பெரியசாமிக்கு ஆடப்போற செல்லையாவுக்கு பயம் வந்துச்சு.
செத்த நேரம் அப்படி இப்படின்னு சத்தம் போட்டுட்டு போயிட்டாரு மந்தரக்கோன்.

சூச்சமடையாரு தாத்தாகிட்ட போனான் செல்லையா., இவன் இப்படி சொல்லிட்டானேன்னு.
'ஏல இதுக்கால பயப்படுத;சாமிங்கது எல்லாரையும் காப்பத்ததான். அழிக்க இல்லைல. நீ போய் வேலைய பாரு. நானிருக்கேன்"ன்னாரு.
அந்தானி வந்துட்டான் செல்லையா.

கொடை வந்துட்டு. திங்ககிழமை சாமி ஆத்துல போயி தண்ணி எடுத்துட்டு வருவாரு. வந்ததும் ராத்திரிக்கு சாமக்கொடை ஆரம்பிக்கும். புது பெரிய சாமி கொண்டாடி ஆத்துல போயி தண்ணியெடுத்துட்டு, பெரிய சாமி கொண்டாடிக்குன்னு, சாமி பூடத்துக்கு கீழ இருக்குத பலகையில உக்காந்துட்டாரு. ராத்திரிக்கு கொட்டு அடிச்சதும் கோயில்ல செல்லையா ஆடுதாரு.... வீட்டுல மந்தரக்கோன் சந்தம் போட்டுட்டு ஆடிக்கிட்டிருக்காரு. ஆனா, கோயிலு பக்கமே அவரு வரலை.

கொடையெல்லாம் முடிஞ்சு போச்சு. அவரு சொன்ன மாதிரி எதுவும் நடக்கலை. ஆனாலும் இன்னைக்கும் தாந்தான் பெரிய சாமி கொண்டாடிங்கத மாதிரி மீசை திருவிகிட்டு தெனாவட்டா அலைஞ்சுகிட்டிருக்கான் மந்தரக்கோன். எந்த கேவலமும் அவனை ஒண்ணும் செய்யலை.

முற்றும்

9 comments:

ESMN said...

அண்ணாச்சி,
உண்மையா இருக்கும் போலிருக்குதே. இத மாதிரி தான் ஒரு கதையும் 40 வருசத்துக்கு முன்னால் நடந்தது. பெரிய கோவில் திருவிழாவிற்கு நடத்த செலவுக்கு *** சாதிகாராங்க சார்பாக நிலம் இருந்தது.அது சாதி பெரியவருக்கிட்ட பொறுப்பு இருந்துச்சு. அதுல நிறைய தில்லுமுல்லு. அத கேட்க போனா மிலிட்டரி காரரை அடிச்சே கொன்னு போட்டனுவ(எல்லாம் உள்காயம்). அத விட மோசம், செத்தவன் அடிச்சிட்டனு கோர்ட்டுல கேஸ் வேற போட்டானுவ. செத்தனுக்கு எங்க தண்டனை கொடுக்க? கேஸ் நிக்கலை.அவனுகளும் பெரிய மனுசாகதான் ஊரு அலைகிறானுவ. ஆனால் 10 வருசத்துக்கு முன்னால எந்த நிலத்துக்காக கொன்னான்களோ அத வித்துபுத்துட்டு ஊரை விட்டே கிளம்பி போயிடானுவ...

Unknown said...

விரைவில் முடிந்தது போல் உள்ளது. இன்னும் நிறைய தொடருங்கள்.

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி, இந்த கதை ரொம்ப நல்லாருக்கே.

நன்றி.

ஆடுமாடு said...

நன்றி ஷரவ். தொடர்றேன்.

geethappriyan said...

நண்பர் ஆடு மாடு அவர்களுக்கு
நல்ல எழுத்துக்களை நல்ல நடையில் எழுதி வருகிறீர்கள்,
நல்ல கிராமீய வெளிப்பாடு.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கிராமத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இவ்வளவு சடங்குகள் உள்ளதா?தொடர்ந்து எழுதி வாருங்கள்.அடிக்கடி வருகிறேன்.
நன்றி

geethappriyan said...

நண்பர் ஆடு மாடு
சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கதை அனிப்பிநீர்களா?
இல்லையென்றால் தயவுசெய்து அனுப்பவும்.
நீங்களெல்லாம் படைப்புகளை குடத்தினுள் இட்ட தீபம் போல வைத்திருந்தால் எப்படி நல்ல படைப்புகளை நாமறிவோம்?

ஆடுமாடு said...

கார்த்திக்கேயன் அண்ணன் நன்றி. நீங்க சொல்றதை பார்த்தா எனக்கு புல்லரிக்குது. சீக்கிரமே எழுதி அனுப்ப டிரை பண்றேன்.


நன்றி.

சித்திரவீதிக்காரன் said...

பெரியசாமி கொண்டாடி மந்திரக்கோன் மாதிரி பலர் தங்களுக்கு கிடைக்கும் தலைமை பொறுப்பை தவறாகப் பயன்படுத்துவது தான் இங்குள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம். இறுதியில் அந்த தாத்தா சொல்வது போல மந்திரக்கோனிடமிருந்து அந்த சாமியாட்டத்தை பறிப்பது நல்ல தீர்வு. அருமையான பகிர்வு. நன்றி.

தக்குடு said...

யே அண்ணாச்சி, எங்கூரு வாய்க்காபாலத்துகிட்ட ஒக்காந்து கத கேட்டாப்லலா இருக்கு! நல்லா இரும்யா!!