Saturday, October 3, 2015

வந்துவிட்டது ஆங்காரம்


எனது இரண்டாவது நாவலான 'ஆங்காரம்' கடந்த வாரம் வெளிவந்து விட்டது. என்னை வளர்த்தெடுத்த வாழ்க்கைச் சுழலையும் அதைச் சார்ந்த நிகழ்வு களையுமே எப்போதும் எழுதிவருகிறேன். எழுத வேண்டும் என நினைக் கிறேன். இது சிலருக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். 'கிராமத்தை பத்தியே எழுதிட்டிருக்கான்' என்கிற சிலரின் எரிச்சலையும்  அறிவேன்.

வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் அதிமாக எழுத வேண்டும் என்றிருந்த ஆர்வம், பேஸ்புக், டிவிட்டர் வரவால் கொஞ்சம் மங்கிவிட்டது.'நான் எழுதுவ தை யாராவது வாசிக்கிறார்களா?' என்கிற சந்தேகம் அதிகமாகி, எழுதுவதை விட்டிருந்தேன். 

ஓங்கி ஓங்கி மிதிக்கிற வாழ்க்கைச் சூழலில், அதன் மேடு பள்ளங்களில் விழுந் து எழுந்து ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அரசியலை மட்டுமே நடத்திக்கொ ண்டிருக்கிற நண்பர்களிடம் தோற்றுபோய், வாழ்க்கையின் சூன்யத்துக்குள் மூழ்கடிப்பட்டு, மூச்சி முட்டித் தெவங்கிக்கொண்டிருந்த பொழுது அது. என் வலைப்பதிவின் வாசகர்களென அறிவித்துக்கொண்ட சிலர் தொடர்ந்து எழுது ம்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். 



  'சினிமா பற்றி எழுத ஆயிரம் பேர் இருக்காங்க. அதுக்கு ஏன் நான் உன் பதி வுக்கு வரணும்? ஊரைப் பத்தி எழுதுய்யா?' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்ட அண்ணன் பால்வண்ணன், 'தினமும் வந்து பார்க்கிறேன். ஒண்ணுமே எழுதலையே, ஏன்?' என்று உரிமையாய் கேட்கும், திரு.அகஸ்டின் மற்றும் துபாய் ராஜா ஆகியோர், என்னை புதிதாகப் பார்க்க வைத்தனர். முகம் தெரி யாத அந்த நண்பர்களுக்கு நன்றி. 

அவர்களுக்காக எழுதத் தொடங்கினேன். என் வலைப்பதிவை வாசிக்க மூன்று பேர் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அலாதியாக இரு க்கிறது. மீண்டும் நன்றி தோழர்களே. இதையடுத்து எழுதியதுதான் 'கொடை'. இதில் சில திருத்தங்கள், சேர்த்தல்கள், குறைத்தல்களைக் கொண்டு 'ஆங்கார ம்' என்ற தலைப்பில் நாவலாக்கி இருக்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங் கள். நீங்கள் சொல்லும் நிறையும் குறையும் என்னை மேலும் வழி நடத் தும்.

-ஏக்நாத்.

கிடைக்குமிடம்.

ஆங்காரம்

Discovery book palace

6, Mahaveer complex

Munusami salai

K.K.nagar west.

Chennai- 78.

phone: 8754507070

விலை: 220.

6 comments:

துபாய் ராஜா said...

புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

// என்னை வளர்த்தெடுத்த வாழ்க்கைச் சுழலையும் அதைச் சார்ந்த நிகழ்வு களையுமே எப்போதும் எழுதிவருகிறேன். எழுத வேண்டும் என நினைக் கிறேன். இது சிலருக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். 'கிராமத்தை பத்தியே எழுதிட்டிருக்கான்' என்கிற சிலரின் எரிச்சலையும் அறிவேன்.//

அண்ணாச்சி, தாய் இல்லாதவங்களுக்குத்தான் தாயோட அருமை தெரியும். நாம எல்லோருமே தாயான கிராமத்தை விட்டு தள்ளி வந்துட்டோம். அதான் அந்த பாசத்துக்கும், வாசத்துக்கும் ஏங்குறோம்.

'போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்'ன்னு உங்க கிராமத்து அனுபவங்களை எழுதிப் போட்டு போய்கிட்டே இருங்க. நாங்களும் கூடவே வந்துகிட்டு இருக்கோம்.

மண் வாசனையுடன் கூடிய பதிவுகளும், படைப்புகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Thamira said...

வாழ்த்துகள் நண்பரே. உங்கள் வாசகர்கள் மூவர் அல்லர், என்னையும் சேர்த்து நால்வர் எனக்கொள்ளவும்! :‍))))

ஆடுமாடு said...

நன்றி ராஜா அண்ணாச்சி.

ஆதி ரொம்ப நாளாச்சு. நன்றி

Anonymous said...

அண்ணாச்சி,
உங்கள் எழுத்துக்களை நிறைய பேர் படிக்கிறார்கள்.உங்கள் வாசகர்களை மூவர் என்று சுருக்கவேண்டாம்..

PAUL VANNAN said...

I am sure ,you have the fans for your writings more than what we think > 1000......
The point is after eating good food , 99 % people never expose their opinion and comment that the food was good , it does not mean ,those 99 % people have to be ignored . Fact may be " they do not have time to interact with you after reading your writings " i am sure they would have enjoyed lot through your writings. let us include those respected people too in your fan list.

With love ,
P.PAUL VANNAN.

ஆடுமாடு said...

பால் வண்ணன் சார், உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.நன்றி


அனானி அண்ணாச்சி,உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி