Sunday, February 14, 2010

கண்ணாடி வளையல் காரி

அமுங்கி உறையும் ஆயிரக்கணக்கான நினைவுகளுடன் உன்னையும் சேர்த்து வைக்க முடியவில்லை. நீ கட்டுக்குள் அடங்காத காயம். எப்போது வலிப்பாய் எப்போது செழிப்பாய் என்பதை சொல்லிவிட முடியாது. நீ வற்றிய கடலை வானம் ஆக்கும் ஆற்றல் பெற்றவள். ஆழ்மனதிலிருந்து பீறிட்டு எழுகிறாய், இல்லை எழுந்து பீறிடுகிறாய்.


என்னை நான் தொலைக்கிற நாட்கள் எல்லாம் உன்னாலே மீள்கிறேன். அல்லது மீட்கப்படுகிறேன். தொடர்ந்து கொலை செய்யும் வன்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் ஞானத்தையும் எப்போதும் உன் தாவணியில் முடிந்து வைத்திருக்கிறாய்.

உன் ஒற்றைக்கல் மூக்குத்தி, தாக்கும் ஒலியில் தெருவெங்கும் சிதறி தெறிக்கிறது என்னுயிர். மிதித்து செல்லும் பல நூறு கால்களில் ஒட்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு பாதங்களும் உன்னைப்பற்றியே கேட்கின்றன. சொல்லவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாதவனாகிறேன். கேட்கிற செவிகளெங்கும் ரவுத்திரம் பொங்கும் உன் விழிகள். அதில் எழும், தீ பிழம்புகள் என்னை தாக்கித் தாக்கிச் செல்கின்றன.

அடங்கமாட்டாத என் ஆணவம், அத்தீப்பிழம்பை விழுங்கச் சொல்கிறது. தொண்டைக்குள் செல்லும் தீப்பிழம்பின் ஓசையில், எப்போதோ நீ கொடுத்த முத்தம் வடிகிறது சொட்டு சொட்டாய். நான் இறந்து பிறக்கிறேன். பிறந்து இறக்கிறேன்.

இருந்தும், உயிரின் ஆழத்தில் இருந்து கொண்டு ஏதோ கேட்கிறாய். கண்ணாடி வளையல் அணிந்த உன் கரங்களைப் பிடித்துக்கொண்டே, உனக்காக வாழ்வேன் என்கிறேன். நீயும் அதையே சொல்கிறாய். எல்லாம் சொல்லிவிட்டு அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டோம். வேண்டாத நினைவுகளை மட்டும் நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.


(காதலர் தினமாமே... அதான்)

22 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப அருமையாய் இருக்கு மக்கா.

ஆடுமாடு said...

நன்றி ராஜாராம்.

மதுரை சரவணன் said...

nalla kathai. ninavukal nitchayam anivarukkum onre. naanraai eluthi ulleerkal.

அன்புடன் அருணா said...

அடடா...கடைசியில் கஷ்டமாப்
போச்சே!

பத்மா said...

இன்று காதலர் தினமாமே !!அதற்கு தானா இது?
.அப்படித் தோணவில்லையே !!
""பீறிட்டு எழுகிறாய், இல்லை எழுந்து பீறிடுகிறாய்.
நான் இறந்து பிறக்கிறேன். பிறந்து இறக்கிறேன்.
நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.""
......இதெல்லாம் உரக்க அதையே சொல்கிறது .
wow

அத்திரி said...

//உன் ஒற்றைக்கல் மூக்குத்தி, தாக்கும் ஒலியில் தெருவெங்கும் சிதறி தெறிக்கிறது என்னுயிர்./

அழகு வரிகள்

ஆடுமாடு said...

மதுரை சரவணன் நன்றி.

ஆடுமாடு said...

அன்புடன் அருணா எனக்கும் கஷ்டம்தான்.

வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

கண்ணாடி வளையல் காரி....
கண் ஆடி வளைத்தாள் பாரீர்...

//தொடர்ந்து கொலை செய்யும் வன்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் ஞானத்தையும் எப்போதும் உன் தாவணியில் முடிந்து வைத்திருக்கிறாய்.//

//மிதித்து செல்லும் பல நூறு கால்களில் ஒட்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு பாதங்களும் உன்னைப்பற்றியே கேட்கின்றன. சொல்லவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாதவனாகிறேன்.//

//உயிரின் ஆழத்தில் இருந்து கொண்டு ஏதோ கேட்கிறாய். கண்ணாடி வளையல் அணிந்த உன் கரங்களைப் பிடித்துக்கொண்டே, உனக்காக வாழ்வேன் என்கிறேன். நீயும் அதையே சொல்கிறாய். எல்லாம் சொல்லிவிட்டு அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டோம். வேண்டாத நினைவுகளை மட்டும் நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.//

அடிமனதின் ஆழத்தில் புதைந்துள்ள சோகமான சுமை போன்ற உணர்ச்சிகளை வரிகளாக வசிக்கும்போது எங்களுக்கும் வலிக்கிறது. :((

ஆடுமாடு said...

பத்மா மேடம் நன்றி.

ஹேமா said...

காதல் பிரிவு வலி வாழ்வின் யாதார்த்தமானாலும் அதன் தாக்கம் தாங்கமுடியாதது.
அன்பின் வாழ்த்துக்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

உங்கள் பதிவு அருமை

மாதேவி said...

"கண்ணாடி வளையல் காரி" இறுதியில் உடைந்து சுமையாகி விட்டதே.

ஆடுமாடு said...

அத்திரி அண்ணேன் நன்றி.

ஆடுமாடு said...

//அடிமனதின் ஆழத்தில் புதைந்துள்ள சோகமான சுமை போன்ற உணர்ச்சிகளை வரிகளாக வசிக்கும்போது எங்களுக்கும் வலிக்கிறது. :((//

நன்றி துபாய் ராஜா.

ஆடுமாடு said...

//காதல் பிரிவு வலி வாழ்வின் யாதார்த்தமானாலும் அதன் தாக்கம் தாங்கமுடியாதது//

நெசந்தான் ஹேமா. நன்றி.

ஆடுமாடு said...

நினைவுகளுடன் நிகே வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

//கண்ணாடி வளையல் காரி" இறுதியில் உடைந்து சுமையாகி விட்டதே//

ஆமா, மாதேவி. நன்றி

Anonymous said...

ã‚.. àƒèœ è£îô˜ Fù‚èM¬î ï¡ø£è Þ¼‚Wø¶.. c‡ìèÀ‚° Hø° ð®‚舶õƒAJ¼‚A«ø¡.. ï™ôªî£¼ èM¬î¬òŠð®ˆîF™ ñA›„C ªî£ì˜è
T.Müòðˆñ£

please read this Tamkavi font

ஆடுமாடு said...

விஜயபத்மா மேடம், font மாத்தி எழுதினதை படிச்சுட்டேன். நன்றி.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு

வாழ்த்துக்கள்...

ஆடுமாடு said...

கமலேஷ் நன்றி.