Friday, July 17, 2009

கொஞ்சம் அச்சமும் காதல் குறிப்பும்

சினேகாவின் அழகான புகைப்படங்கள் தந்த தாக்கத்தில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' பிரிவியூக்கு கொஞ்சம் ஆசையாகவே சென்றிருந்தேன். இயக்குனர் அருண் வைத்தியநாதன், முன்னாள் பதிவர் என்பதாலும் 'நல்லா எடுத்திருப்பான்' என்று டுபுக்கு எப்போதோ சொன்ன ஆவலில் இன்னும் கூடியிருந்தது எதிர்பார்ப்பு. பிரசன்னா, சினேகா அமெரிக்க தம்பதி. எட்டு வயது குழந்தை. அவளை கடத்த துடிக்கும் வில்லன். இவர்களைச் சுற்றிதான் கதை. படத்தின் மேக்கிங். ஒளிப்பதிவு அருமையாக வந்திருக்கிறது. சுவாரஸ்யமான வசனம் ப்ளஸ். ப்ராட் செமின்னாப், பின்னணி இசையில் பின்வாங்கிவிட்டதால் பட இடங்களில் உணர்ச்சியற்று இருக்க வேண்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் சப்பென்றிருக்கிறதே என்று இயக்குனர் ஒருவரிடம் கேட்டேன். வழக்கமா நம்ம தமிழ் படங்கள் பார்த்து, கிளைமாக்ஸ்ல ஷாக் வேணும்னு பழகிட்டோம்ல என்றார்.
சரிதான் என்று பட்டது.
அச்சம் வெல்ல வாழ்த்துகள்.

...........................

பாடலாசிரியர் எஸ்.ரா
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து, மயக்கும் தன்மை கொண்டது. அவரது சின்ன விவரிப்பும் ஜில்லென்று, மனதை காட்சிக்குள் செலுத்தும் மாயம் கொண்டது. எல்லாரையும் போலவே நானும் அவரது எழுத்துக்கு ரசிகன். ரசிகன் என்ற பதம் கெட்டவார்த்தையாக ஆகி இருப்பதால் அதீத வாசகன். இப்போது, பாடலாசிரியர் ஆகியிருக்கிறார். மனுஷ்யபுத்திரன் உன்னைப்போல் ஒருவனில் முந்திக்கொண்டார். இப்போது நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன் மூவரும் டியூனுக்கு பாட்டெழுதியிருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்துள்ள அந்த படம் 'படித்துறை'. (இந்த தலைப்பை கேட்டாலே சாணக்கியாவின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது). எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்தானே.
............................

காதல் குறிப்பு

'இன்னும் பத்திரமாகவே இருக்கிறது உடைந்து போன உன் கண்ணாடி வளையலும் என் காதலும். வெயில் கொழுத்தும் கோடையில் ஆற்றருகே இருக்கிற என் தோப்பில் நடந்தது அது. மணல்கள் மூடி இருக்கும் சின்ன தென்னையில் ஏறி கொண்டேன் நான். கை பிடித்து மேலேறினாய் நீயாய். தடுமாறி விழபோனபோது என் கால்களைப் பிடித்திருந்த நேரத்தில் உடைந்தது அந்த சிவப்பு நிற கண்ணாடி வளையல்..."-
-----இப்படி எழுத ஆரம்பித்த நேரத்தில், டெக்ஸ்டாப் அருகில் இருந்துகொண்டு தட்டு தடுமாறி வாசித்தான் பெரிய மகன்.

'ஒண்ணுமே புரியலைப்பா'
மவுனத்தை பதிலாக்கிவிட்டு புள்ளி வைத்தேன்.
புரியாததெல்லாம் புரியாததல்ல.
....................................

மூன்றாம் கை

சமீபகாலமாக இப்படியொரு கனவு வந்து அநியாயத்துக்கு இம்சை பண்ணுகிறது. நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து ரெண்டு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு படுத்தாலும் மீண்டும் அதே கனவு. கனவுகள் ஆழ்மன எச்சம் என்றாலும் இப்படியொரு கனவு எப்படி ஆழ்மன நினைப்பாக இருக்க முடியும். கடந்த வாரம்தான் முதன் முதலில் இப்படி வந்தது. அதாவது நெஞ்சில் இருந்து ஒரு கை முளைத்து, தோசை சாப்பிடுகிறது. முதுகு சொரிகிறது. மற்ற ரெண்டு கைகளும் செயலலிழந்து விட்டன. எதிர்த்த வீட்டுக்காரனுடன் வாய்ச்சண்டையில் இருக்கும் போது படாரென்று எழுந்து குத்து விடுகிறது. இதென்னா விபரீத கை! ஒரு நாளோடு இந்த கனவு போய் தொலைந்தது என்று விட்டால், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும். இப்போது இன்று காலையும். ஏதாவது மனநல மருத்துவரிடம் என்னை காண்பிக்க வேண்டியிருக்குமோ என்னமோ?
.......................

21 comments:

எம்.எம்.அப்துல்லா said...

/இப்போது இன்று காலையும். ஏதாவது மனநல மருத்துவரிடம் என்னை காண்பிக்க வேண்டியிருக்குமோ என்னமோ?

//

கனவு கண்டா அனுபவிக்கனும்...ஆராயப்படாது.....சம்ஜே

:)

தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும் நடக்கட்டும்!

:)

அது சரிதான் புரியாததெல்லலாம் பரியாததல்ல...

உண்மைத்தமிழன் said...

ஏன் இத்தனை இடைவெளி நண்பரே..!

Ayyanar Viswanath said...

பயங்கர கனவா இருக்கே ஓல்ட் மங்கார துணைக்கு அழைச்சுக்க வேண்டிய விசயம் இது.எதுக்கு மருத்துவரு :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னைக்குத்தான் மூன்றாம் கை பற்றி ஒரு கதை படித்தேன் :

http://nundhaa.blogspot.com/2009/07/blog-post_16.html

இங்க உங்க பதிவுலயும் அதே :)

ஆடுமாடு said...

அப்துல்லா, தமிழன் கறுப்பி நன்றி.

ஆடுமாடு said...

உண்மைத்தமிழன் ஐயா, கொஞ்சம் சொந்த வேலை அதான்... இந்தப் பக்கம் வரமுடியலை.

ஆடுமாடு said...

//பயங்கர கனவா இருக்கே ஓல்ட் மங்கார துணைக்கு அழைச்சுக்க வேண்டிய விசயம் இது//

அய்யனார், ஓல்டு மங்க், சுந்தர் சமாச்சாரம். நமக்கு வோட்கா.
நன்றிஜி.

ஆடுமாடு said...

//இன்னைக்குத்தான் மூன்றாம் கை பற்றி ஒரு கதை படித்தேன்//

சுந்தர்ஜி இப்பதான் படிச்சேன் அதை. எப்படி ஒண்ணா திங்க் பண்ணினோம் மக்கா...

நன்றி.

துளசி கோபால் said...

குமிஞ்சுகிடக்கும் வேலைகளைச் செய்ய இருக்கும் ரெண்டு கைகள் பத்தாதுன்னுன்னு உள்மனசுக்குச் செய்தி போயிருக்கு. அதுதான்.......

பதிவர் இயக்குனர் படம் என்பதால் பார்க்கும் ஆர்வம் கூடி இருக்கு.

manovarsha said...

கொடுத்துவைத்தவர் உங்களுக்கு நெஞ்சில் கை முளைக்கிற கனவுதான் வருகிறது. எனக்கோ வேறொன்று முளைக்கிற மாதிரி அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது.

-மனோஜ்

அ.மு.செய்யது said...

//நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து ரெண்டு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு படுத்தாலும் மீண்டும் அதே கனவு. கனவுகள் ஆழ்மன எச்சம் என்றாலும் இப்படியொரு கனவு எப்படி ஆழ்மன நினைப்பாக இருக்க முடியும். கடந்த வாரம்தான் முதன் முதலில் இப்படி வந்தது. அதாவது நெஞ்சில் இருந்து ஒரு கை முளைத்து, தோசை சாப்பிடுகிறது. முதுகு சொரிகிறது. மற்ற ரெண்டு கைகளும் செயலலிழந்து விட்டன. எதிர்த்த வீட்டுக்காரனுடன் வாய்ச்சண்டையில் இருக்கும் போது படாரென்று எழுந்து குத்து விடுகிறது. இதென்னா விபரீத கை! ஒரு நாளோடு இந்த கனவு போய் தொலைந்தது என்று விட்டால், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும். இப்போது இன்று காலையும். ஏதாவது மனநல மருத்துவரிடம் என்னை காண்பிக்க வேண்டியிருக்குமோ என்னமோ?//

எல்லாத்தையும் மடக்கி போட்டு பி.நவீனத்துவ கவுஜன்னு சொல்லி கல்லா கட்டுற வழிய பாக்குறத
வுட்டுட்டு ஏன்னே இப்படி பதிவெல்லாம் போடுறீங்க ...

நாஞ்சில் நாதம் said...

:)))

தேவன் மாயம் said...

மூன்றாவது கண் போல ...மூன்றாவது கை!!!

ஆடுமாடு said...

//குமிஞ்சுகிடக்கும் வேலைகளைச் செய்ய இருக்கும் ரெண்டு கைகள் பத்தாதுன்னுன்னு உள்மனசுக்குச் செய்தி போயிருக்கு. அதுதான்//


துளசி டீச்சர், இதுகூட நல்லாத்தானிருக்கு. ந்ன்றி

ஆடுமாடு said...

மனோஜ் சார், இதென்ன புதுசா இருக்கு!

ஆடுமாடு said...

//எல்லாத்தையும் மடக்கி போட்டு பி.நவீனத்துவ கவுஜன்னு சொல்லி கல்லா கட்டுற வழிய பாக்குறத
வுட்டுட்டு ஏன்னே இப்படி பதிவெல்லாம் போடுறீங்க//


செய்யது அண்ணே, உங்க லெவலுக்கு இன்னும் வரலைண்ணே.

ஆடுமாடு said...

நாஞ்சில் நாதம், தேவம் மாயம் ரொம்ப நன்றிங்கய்யா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு கை வேலையை அந்த ஒரு கை செய்தா நல்லது தானே.. கொஞ்சம் வீரமாவும் வேகமாவும் இருக்கும்போலயே பக்கத்துவீட்டுக்காரரை நல்லா சாத்தனும்ன்னு தோணி இருக்கும் உங்க கை சுமமா இருக்குதேன்னு நெற்றிக்கண் மாதிரி வந்துடுச்சு போல.. :)

ஆடுமாடு said...

//உங்க கை சுமமா இருக்குதேன்னு நெற்றிக்கண் மாதிரி வந்துடுச்சு போல.. :)//

அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்.
நன்றி முத்துலட்சுமி.

Dubukku said...

அண்ணாச்சி எப்படி இருக்கீக...சும்மா இருக்கீகளா...அப்போ இன்னமும் என்ன ஞாபகம் வெச்சிருக்கீக..வூட்டுல எல்லாம் சுகம்தானே