Monday, June 13, 2016

ஆதலால் தோழர்களே 8

எப்போதும் ஒழக்குவிடம்தான் கடன் கேட்பார் பரமசிவம். வாங்கிய அஞ்சு, பத்தை அவன் திருப்பிக் கேட்பதுமில்லை, இவர் கொடுத்தது மில்லை. அவர்க ளுக்குள் அப்படியொரு பந்தம் இருக்கிறது. அவன் இல்லையென்றால் கட்சி ஆபிசில் உட்கார்ந்தபடி, பீடி இழுத்துக் கொண்டிருக்கிற, அருணாச்சல மூப்ப னாரிடம் கடன் கேட்பது உண்டு. மூப்பனாரும் பரமசிவத்தின் அப்பா ஆண் டியும் அந்த கால நண்பர்கள். சிறு வயதில் இருந்தே மூப்பனாரை தெரியும் என்பதாலும் ஆத்திர அவசரத்துக்கு அப்பாவே அவரிடம்தான் வாங்குவார் என் பதாலும் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பரமசிவம். அப்பாவின் நண்பரை சின்ன வயதில் இருந்தே, சின்னைய்யா என்றழைத்து வந்தார் பரமசிவம். அந்த உரிமையில் கடன் கேட்பதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அவரும்.

ஆண்டி, இறந்து போனதில் பரமசிவத்தின் அம்மா அனச்சியை விட அதிக கவலைக்கொண்டலைந்தவர் அருணாச்சல மூப்பனார்தான். எப் போதும் எங்கும் ஒன்றாகவே சுற்றுகிறவர்கள் இவர்கள். எதையாவது சத்தமாகப் பேசிக்கொண்டோ, செல்ல சண்டைப் போட்டுக்கொண்டோ அலையும் கூட்டாளிகளில் ஒருவர் இறந்துவிட்டால், அது ஒரு கையை இழந்தது போலதான். ஆண்டி இறக்க, தானும் ஒரு காரண மோ என்கிற குற்ற உணர்ச் சியும் இருக்கிறது மூப்பனாரிடம்.

இருவரும் ஒன்றாகத்தான் சாராயம் குடிக்கச் சென்றார்கள் ஆற்றுக்குள் இருக்கும் ரயிவே பாலத்துக்கருகில். முதலில் வேண்டாம் என்று மறுத்தவர் ஆண்டி.

'ச்சே, ரெண்டு கிளாசை போட்டுட்டு சத்தம் போடாம வந்துரும்டெ' என்று தான் ஆரம்பித்தார்கள். இரண்டு நான்காகி, நான்கு ஐந்தாகி, அங்கே யே ஆற்று மணலில் படுத்துவிட்டார்கள் இரண்டு பேரும். போதை தெளிந்து எழுந்தது மூப்பனார்தான். ஆண்டி ஒரேடியாகப் போய் சேர்ந்து விட்டார். உசுப்பிப் பார்த்த மூப்பனாருக்கு என்ன செய் வதென்று தெரியவில்லை. பக்கத்து தோப்பில் வாழைக் கன்னுக ளுக்கு உரம் வைத்துக் கொண்டிருந்த மாயாண்டியை அழைத்துவந்து விஷயத்தைச் சொல்ல, இரண்டு பேரும் அவரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். ஊரே கூடி கூப்பாடுப் போட்டது. அப்போதும் விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தார் பரமசிவம். 

 மூப்பனார், சைக்கிளின் முன் பக்கம் ஓர் அரிவாளைத் தொங்க விட்டி ருப்பார் வழக்கமாக. ஆத்திர அவசரத்துக்குத் துட்டுத் தேவையென் றால் நேராக அவரது தென்னந்தோப்புக்கு சைக்கிளை அழுத்துவார். நான்கைந்து தேய்ங்காய் களைப் பறித்து, உரித்து, ஓட்டல் நடத்துகிற அண்ணாமலைச் செட்டியாரிடம் கொடுத்துவிட்டு, அவர் கொடுக்கும் காசை வாங்கிவிட்டு வந்துவிடுவார். செட்டியாரிடம் கணக்கு ஏதும் கேட்க முடியாது. அவர் கொடுப்பதுதான் கணக்கு. இது ஆத்திர அவசர சில்லரை செலவுகளுக்கு. பொதுவாகப் பரமசி வத்துக்குக் கொடுப்பதற்காகவே இப்படி தேங்காய்ப் பறிப்புகளைச் செய்து வந்தார் மூப்பனார். அவர் மனைவி, இவர் செட்டியார் கடையில் ருசியாகச் சாப்பிடுவதற்காகவே, தேங்காய்களைப் பறித்து விற்பதாக நினை த்துகொண்டு சண்டையிடுவதும் வழக்கமானதுதான்.

சங்க ஆபிசில் மூப்பனார் உட்கார்ந்திருப்பதை, வெளியில் நின்று பார்த் துக்கொண்டு ஏசத் தொடங்குவாள் அவர் மனைவி. 

'கடையில தின்னு தின்னு வீட்டுல ஒரு பருக்க இறங்க மாட்டேங்கு. அப்டிலா கேக்கு ருசி?. நாக்கை இழுத்துவச்சு அறுக்கணும். கடை தீவனம் குடும்பத்துக்கு ஆவுமா? தேய்ங்காயை கடைல கொடுத்துட்டு அபப்டியா திய்ங்கணும்? ஒம்ம போல எந்த ஆம்பளயாது இருக்கானா? எனக்குன்னே வாய்ச்சிருக்கேரே' என்று கத்தத் தொடங்குவாள் அவர் மனைவி.

'ஏட்டீ, பொடதியில போட்டம்னா. எங்க வந்து ஏசிட்டிருக்கே, கூறு கெட்ட கோட்டி. குறுக்குல மிதிச்சம்னா, பிட்டி நவுண்டுபோவும் பாத்து க்கெ?' என்பார் மூப்பனார்.

இது எப்போதும் நடக்கும் சண்டை என்பதால் மற்றவர்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 'இவங்களுக்கு வேற வேல எழவு இல்ல' என்று ஒதுங்கிவிடுவார்கள். இருந்தாலும் ஆபிசுக்கு அருகில் டீ கடை வைத்தி ருக்கிற பூதத்தான், 'பகல்ல இப்டி சண்டை போடுதேல, ராத்திரி மட்டும் ஒரு அணக்கத்த காணும், ஏம்?' என்பார் மூப்பனாரிடம்.

'ஏல, சுண்டைக்கா. நீயெல்லாம் எம்மாத்தர பய, என்னயவே எடக்கு பண் ணுதியோல' என்பார் அவர்.

'ஆமா. இவர்ட்ட எடக்கு பண்ணக் கூடாது. போரும்யா, தெனமும் நீங்க சண் டை போடுதத பாத்தா, எனக்கு எரிச்சலா வருது' என்பான் பூதத்தான். 

சங்க அலுவலகத்தின் கொட்டகைக்குள் ஒருக்கு சாய்த்துப் படுத்திருந்தார் மூப்பனார். பரமசிவம் தூரத்தில் இருந்தே அவர் இருப்பதைப் பார்த்துவிட்டார். கண்டிப்பாக அஞ்சோ, பத்தோ கிடைத்துவிடும் என்ற நம்பி க்கையில் நடந்து அவர் முன் நின்றார். எதிரில் யாரோ நிற்பதைப் பார்த் து விழித்தார் மூப்பனார்.

'என்னடே? சாயந்தரம் எங்கயோ மீட்டிங்குன்னாவோ?'

'ஆமா. டாணால'

'போலயா?'

'இன்னும் நேரங்கெடக்குலா?'

மூப்பனார் எழுந்து பீடியைப் பற்ற வைத்தார். 

' ஒரு பத்து ரூவா இருக்குமா?'

ஒரு கையால் இடுப்பு பெல்ட்டை தடவினார் மூப்பனார். பிறகு, 'இப்பமே வேணுமோ?' என்றார்.

தலையை மட்டும் ஆட்டியபடி நின்றிருந்தார் பரமசிவம். 

'இங்ஙன இரு. செட்டியார் கடைக்கு போயிட்டாரேன்' என்று எழுந்தார். இங்கி ருந்து அவர் கடை ஒரு முப்பது அடிதான். அங்கு போய், தேய்ங்காயை பிறகு தருவதாகச் சொல்லிவிட்டு காசு வாங்கிவிட்டு கொடுத்தார் மூப்பனார்.

சட்டை பையில் திணித்தபோது டாணா கூட்டத்துக்குச் செல்வதற்காக, கல் யாண சுந்தரமும் பிச்சைமுத்துவும் பளிர் தோரணையில் வந்து நின்றார்கள். 
'கெளம்பியாச்சா?

'மாடுவோள குளிப்பாட்ட போனேன். அப்டியே குளிச்சுட்டு வந்தாச்சு. வீட்டுல உக்காந்து என்ன பண்ண? அதாம் கெளம்பிட்டோம்' என்றார் கல்யாணசுந்தரம்.
'இவ்ளவு சீக்கிரமே வந்துட்டேளே?' என்ற பரமசிவம், 'செரி இங்கயே இருங்க, வந்திருதென்' என்ற வெளியே நடந்தார். சைக்கிளில் வந்துகொண்டிருந்த பழனியிடம், 'எய்யா, என்னைய வீட்டுல விட்டுடுட் வந்துருடே' என்றதும் அவ ன் சைக்கிளைத் திருப்பி அழுத்தினான். பின்னால் ஏறிக்கொண்டார் பரமசிவம்.

அவர் கொஞ்ச தூரம் தாண்டிச் சென்றதும், 'வர வர புள்ளயாண்டன் போக்கும் வரத்தும் சரியில்ல பாத்துக்கெ, எவன்ட்ட அறை வாங்க போறாம்னு தெரியல' என்றார் கல்யாணசுந்தரம்.

'ஏம்ணே'

'ஏனா..? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமாடே?'

'அதத்தான எல்லா பயலும் பண்ணிட்டிருக்காம்'

'எல்லாரும் பண்ணலாம், இவன் பண்ணலாமா சொல்லு?'

'என்ன செஞ்சானாம்?'

'வடக்கூர்ல கட்சிக்காரம்னுதான இவன்ட்ட பழவிட்டு இருக்காம். நம்பித் தான வீட்டு அடுக்களைக்குள்ள வர விடுதாம்'

'என்னாச்சுண்ணே?'

'என்னவா?.. சிரிச்சான் பொண்டாட்டிட்ட சொரணாவிட்டு இருக்கானாம்'

'இது என்ன கதையா இருக்கு? ஒண்ணுக்குள்ள ஒண்ணா, பழவிட்டு நல்லாவா இருக்கு?'

'மொதல்ல நம்ப முடியல எனக்கும். சிரிச்சான் அண்ணன் வந்து மெதுவா சொன்னான். நாளைக்கு பெரிய வில்லங்கம் ஆயிரதுக்குள்ள இதுக்கொரு முடிவு கட்டுங்கன்னாம்'

'நீ என்ன சொன்ன?'

'இத போயி நான் பேச முடியாமாடே? அதான், ஒண்ணு, கட்சித் தல வர்ட்ட சொல்லு, இல்ல, அவன் அண்ணன்மாருட்ட சொல்லுன்னுட் டேன்'

'இது என்ன எச்சிக்கல புத்தி இவனுக்கு?. அந்த செரிக்கி ஒண்ணும் சொல் லலயா?'

'அவளும் இவன தேடிலா அலையுதாலாம். அவன் வீட்டுக்கே போயி ருக்கான்னா பாரு'

'பரம்சம் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா, சந்தி சிரிக்க வச்சிருவாளே சந்தி...'

'அவா இல்லாத நேரத்துல போயிட்டு வந்திருதாளாம். மொதல்ல ஒண்ணும் தெரியல பாத்துக்கெ. பீடி கடைக்கு போறம்னு தெனமும் அவா, இவன தேடி போவ ஆரம்பிச்சுட்டாளாம். இல்லனா, இவன் அவளத் தேடி வீட்டுக்கே போயி ருதானாம்... சிரிச்சான் இல்லனாலும் பொங்கி சாப்பிட்டுட்டுதான் வெளிய வாரானாம் இவென்'

'வெளங்கும்...'

'கட்சிக்காரம், சும்மா பேசதுக்கு வாரம்னுதான் இன்னும் நெனச்சிட்டிரு க்காம் சிரிச்சான்...'

'இது என்ன எச்சிக்கல புத்தி?'

'அப்படியென்ன மூதி, அவன் பொண்டாட்டிட்ட இல்லாதது என்ன இருக் கு அவாட்ட? பாலும் தேனுமாவா இருக்கு கொழுப்பெடுத்தவனுக்கு?'

'ச்சீ... இனும வீட்டு வாசல்ல இவன காலை வைக்க விடலாமா? பொறு க்கித்தனமால்லா இருக்கு...'

'சிரிச்சானும் பாக்கதுக்குத்தாம் பல்லக்காட்டிட்டு இருக்காம்னு வையி. இந்த மாரி வெவாரத்துல எல்லாம் நோஞ்சான் கூட நொறிச்சுருவாம் இடுப்ப, பாத்துக்கெ'

'பின்ன. நம்ம கொம்பம் மச்சினன் பண்ணலயா?' என்று பேசிக் கொண் டே அமர்ந்திருந்தார்கள். எதிரில் வைக்கோல் ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. வண்டியோட்டுபவனி ன் 'க்கியே க்கியே' என் கிற அதட்டலில் மாடுகள் வேகமாக முன்னே இழுத்தன வண்டியை.

கொம்பனின் மச்சினன் பம்பாயின் புறநகர் பகுதியான தானேவில் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் டிரைவராக இருந்தவன். அங்கு வேலை பார்த்த கேரளாக்காரியை கூட்டிக் கொண்டு வந்துவிட்டான் ஊருக்கு. அவளது பெயர் மேரியோ, மேபலோ என்றார்கள். பிள்ளை செக்கச் செவேலென இருந்ததால் குடும்பத்தில் ஒன்றும் சொல்லவில்லை. அவனது மூஞ்சைப் பார்த்தால் அவ்வளவு சாது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரகம். இவன் எப்படி ஒரு பிள்ளையை காதலித்து கூட்டிக்கொண்டு வந்தது என்கிற யோசனை ஊரில் பெரும்பா லோருக்கு உண்டு. பிறகு ராமர் கோயிலில் சொந்தங்கள் முன்னி லையில் தாலிகட்டி குடித்தனம் நடத்தி வந்தான். விக்கிரமசிங் கபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வேனில் ஓட்டுனர் வேலை கிடைத்தது அவனுக்கு. சுமூகமாகத்தான் போய் கொண்டிருந்தது வாழ்க்கை.

எதிர்வீட்டு சடச்சீ, 'ஏல இங்கவா' என்று அழைத்து, 'ஒம் பொண்டாட்டி ரோட்டுல வார போற யாவரிட்டலாம் கூட பல்லக் காட்டிட்டு நிய்க்கா.. சொல்லி வைல' என்று உரசிப் போட்டுவிட்டாள். வண்ணத் தில் ஜொலிக்கும் தன் மனைவி மீது ஊரே கண் வைத்துக் கொண்டி ருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு இது போதாதா? திடீர் திடீர் என்று வீட்டுக்கு வந்து மனைவியைத் தேட ஆரம்பித்தான். வீட்டு வேலையை எல்லாம் முடித்து விட்டு அவள் வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றால், 'இந்த நேரத்துல எதுக்கு குளிக்கப் போன, செரிக்குள்ளே?' என்று பேச ஆரம் பித்தான். பிறகு எல்லா வற்றுக்கும் சந்தேகம் வரத் தொடங்கி விட்டது. அமைதியாக இருந்த வீட்டில் அடிக்கடி சண்டைச்சச்சரவுகள்.

சிவந்திபுரத்தில் நடந்த கோயில் கொடைக்காக மனைவியுடன் போயி ருந்தான் கொம்பன் மச்சினன். சாராயத்தை ஏற்றிவிட்டிருந் தார்கள். தலை கால் புரியாமல் இருந்தவன் போதை தெளியாமலயே, காலை யில் முதல் பஸ்சில் வந்திறங்கினான் ஊரில். 

கொடையின் போது அவனின் சொந்தக்காரர்களிடம் சிரித்துப் பேசிவி ட்டாள் என்பதற்காக வீட்டு வாசலில் குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந் தவளின் கழுத்தில் பின்பக்கம் இருந்து வெட்டினான் அரிவாளால். சிதைந்த கோலத்தின் மீது தலை மட்டும் தனியாக விழுந்து வானம் நோக்கிப் பார்த் தவாறு கிடந்தது. அரிவாளோடு நின்ற அவன் முகத்தைப் பார்த்தவாறு அந்தக் கண் நிலை குத்தி நின்றது. காலைச் சுருட்டி ஒரு பக்கம் படுத்துக்கிடந்தது போல ரத்தத்தில் நனைந்து கிடந்தது அந்த வெற்றுடல்.

பொண்டாட்டியை கொன்றுவிட்டு ஓடிவிட்டான் அவன். பிறகு ஊரே வந்து அந்த துண்டான உடலை வேடிக்கைப் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டது. வேடிக் கைப் பார்க்க வந்த சின்னப் பிள்ளைகளை அந்த இடத் துக்கு அருகில் யாரும் விடவில்லை. ஊரெல்லாம் ஒரு வித பயம் தொற்றிக்கொண்டது. பேரூந்து நிறுத்தத்தில் பிள்ளையார் கோயில் எதிரில், கருவேலப்பிறைத் தெருவில், சின்ன வாய்க்கால் பாலத்தில் என எங்கெங்கும் கூட்டம் கூட்டமாக இந்தக் கொலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

'எங்க கெடந்தோ வந்து எங்கயோ சாவணும்னு அவளுக்கு எழுதியி ருக்கு?'

'மூதி இவம்லாம் ஒரு பய, இவன நம்பி கூட வந்தா பாரு பாதவத்தி, அதுக்கா இந்த நிலமை?'

'ச்சே' சிலர் சேலை முந்தானையால் வாயை மூடி கண்ணீர் விட்டார்கள். 

ஊரில் நடந்த மிகக்கொடூரமான கொலைகளில் அதுவும் ஒன்று. சாதாரண சந்தேகத்துக்காக நடந்த கொலை. பிறகு அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டே ஷனின் சரணடைந்த அவன் இப்போது ஜாமீனில் வெளிவந்து திருச்சியிலோ, எங்கேயோ இருக்கிறான் என்றார்கள்.

எதிரில் பிள்ளையார் கோயில் வாசலில் நின்று, 'ஏண்ணே' என்று பரம சிவம் கொடுத்த சத்தம் கேட்டது. அங்குதான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இருவ ரும் எழுந்து அங்கு நடந்தார்கள். தூரத்தில் டவுண் பஸ் வரும் சத்தம் கேட்டது.

(தொடர்கிறேன்)

No comments: