Wednesday, October 27, 2010

சாமிகள் பற்றிய குறிப்புகள்

0 ஆக்ரோஷமாக ஆடும்

ஆயுதங்கள் கொண்ட குலசாமிகளின்
கண்களில் தெரிவது
அருளா? கொலைவெறியா?
.....................

0 கொடையில்லா நாளில்
கோயில் மரத்தில்
இலை தின்னும் ஆடுக்கு தெரியாது
நேர்ந்துவிட்டதும்
நேர்த்திக் கடனானதும்

........................
0 வேப்ப மரத்துக்கு
ஆத்தா வந்ததிலிருந்து
பால் குடிக்க பழகிவிட்டது வேர்
..........................

0 சாமி சொன்னதாக
குறி சொல்கிறாள் அம்மா
சாமிக்கு யார் சொல்லுவார்?
.......................

0 ஏழு கெடா வெட்டி
சாமிக்கு படைக்கப்படும் சோறில்
களவாடப்படுவது
கறிதுண்டுகள்.

...................

0 வேட்டைக்கு போகும் சாமியின்
எதிரில் சென்றால் அடித்துவிடும்
மனிதனை அடிப்பது
சாமியாகுமா?
.............

0 பெரியசாமிக்கு யாராடுவது
என்கிற சண்டையில்
நடக்கிறது வெட்டு குத்து.
வேடிக்கை பார்க்கிறது
காக்கும் சாமி.


நன்றி: தினகரன் தீபாவளி மலர்

25 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்கு..

எறும்பு said...

அத்தனையும் அருமை, அண்ணாச்சி..

Sriakila said...

அருமையான வரிகள்!


அத்தனையும் மூடநம்பிக்கைகள். அதை அழகாக வரிகளில் ஏற்றி...

வார்த்தையில்லை.

//வேடிக்கை பார்க்கிறது
காக்கும் சாமி //

சூப்ப‌ர்!

My Food Crib said...

:) அருமை!

நானானி said...

நல்லாருக்கு!!!

இதெல்லாம் சாமிக்கும் தெரியும் பூமிக்கும் தெரியும்....ஆசாமிகளுக்கும் தெரியும்!!!

மாதேவி said...

அனைத்தும் அருமை.

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

கலகலப்ரியா said...

படிக்கிறப்போ தோன்றும் புன்னகையில் கொஞ்சம் கேலி... கொஞ்சம் கசப்பு...

vasu balaji said...

செம:)

காமராஜ் said...

நீண்ட நாள் இடைவெளியை இப்படி அதகளப்படுத்திட்டீங்களே. அந்தப்பக்கம் ராகவன் ஒரு திருவிழாவோடு வந்து நிற்கிறார்.இந்தப்பக்கம் நீங்கள் சாமிகொண்டாடிகளோடு வந்து நிற்கிறீர்கள்.வேம்பு வேர் பால்குடிப்பதும்,நேர்ந்துவிட்ட ஆடு கொலை கடிப்பதுவும் ஸ்பெசல்.

Mahi_Granny said...

எல்லாமே அருமை

ஆடுமாடு said...

முத்துலட்சுமி, எறும்பு, ஸ்ரீஅகிலா, சுந்தரா நன்றி.
...........

//ஆசாமிகளுக்கும் தெரியும்!!!//

தெரியலையே நனானி மேடம்.நன்றி
............

மாதேவி, வேலுஜி, கலகலப்ரியா வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

//நீண்ட நாள் இடைவெளியை இப்படி அதகளப்படுத்திட்டீங்களே//


வீட்ல நெட் தொல்லை.
ஆபீஸ்ல ப்ளாக் படிக்கக்கூடாது.
வேறெப்படி எழுத? அதான் கொஞ்சம் நாட்களாகிடுச்சு தோழர். நன்றி

ஆடுமாடு said...

மஹி கிரானி, வானம்பாடிகள் ஐயா, நன்றி

க.பாலாசி said...

ரொம்ப நைவ்வா நெத்தியில அடிக்கிறமாதிரியிருக்கு இந்த கவிதைகள்... அந்த பால்குடிக்கும் வேப்பமரமும், ‘மனிதனை அடிப்பது சாமியாகுமா?’ வும் ஸ்பெசல்...

ஆடுமாடு said...

நன்றி பாலாசி

துபாய் ராஜா said...

அத்தனையும் அருமை, அண்ணாச்சி..

Dubukku said...

//
வேப்ப மரத்துக்கு
ஆத்தா வந்ததிலிருந்து
பால் குடிக்க பழகிவிட்டது வேர்
//
Wowwww very nice!! romba rasichen indha varigalai :))

ஆடுமாடு said...

ராஜா சார் எப்படி இருக்கீங்க?
பேக் டூ எகிப்தா?
நன்றி

ஆடுமாடு said...

//romba rasichen indha varigalai :))//

நன்றி டுபுக்கு சார்

தவமணி said...

மனிதனை அடிப்பது சாமியாகுமா- மூட நம்பிக்கைகளின் ஆணிவேரையே அறுக்கும் மந்திரம் இதுதான்.

சாமக்கோடங்கி said...

அருமை அருமை..!!!

சாமக்கோடங்கி said...

0 வேப்ப மரத்துக்கு
ஆத்தா வந்ததிலிருந்து
பால் குடிக்க பழகிவிட்டது வேர்//

தூள்...

சித்திரவீதிகாரன் said...

ஆடு மாடு காடு எல்லாம் தங்கள் பதிவு காணாமல் வருத்தத்துடன் கிடக்கின்றன. எங்களுக்காக மீண்டும் பதிவு எழுதுங்கள்

சாந்தி மாரியப்பன் said...

//வேட்டைக்கு போகும் சாமியின்
எதிரில் சென்றால் அடித்துவிடும்
மனிதனை அடிப்பது
சாமியாகுமா?//

அத்தனையும் அருமைன்னாலும்,.. இந்தக்கேள்வி ரொம்ப அருமை..