பாதகத்தி பூத்து வச்சேன்
தென்னம்பிள்ளை மண்ணுல
பாதி வளந்து கொல்லுதே
வலப் பக்க கண்ணுல...
பால்குடிச்ச நெஞ்சை நீயும்
மாரடிக்க வச்சிட்டியே-என்
மாரடைக்க வச்சிட்டியே...
ராகமாக இழுத்துப் பாடிக்கொண்டிருந்தாள் சடச்சி. நேற்றிலிருந்து பிச்சம்மாளை காணவில்லை. சாயங்கால நேரம் தலைபின்னிக்கொண்டிருந்தவள், குடத்தைத் தூக்கிக்கொண்டு வாய்க்காலுக்கு தண்ணி எடுக்க சென்றாள். ராத்திரி ஆகியும் வரவில்லை. வாய்க்கால் படித்துறைக்கு சென்ற போது பித்தளை குடம் மட்டு்ம் அங்கிருந்தது. பயந்துபோனாள் சடச்சி. யாராவது கடத்திச்சென்றிருப்பார்களோ என்று பதறினாள். ஆனால் சமீபகாலமாக கல்யாண பேச்சு குறித்து அவள் தெரிவித்திருந்த எதிர்ப்பும், பேச்சும் காதல் விவகாரம் என்பதை எளிதாக அவளுக்கு விளக்கியது.
வீட்டின் எதிரில் இருக்கும் கோழி கூட்டின் அருகில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தார் கருப்பையா. யாருடன் போயிருப்பாள் என்பதாக இருந்தது அவளது யோசனை. தன் கண்ணுக்குள் வந்துபோன பயல்களில், அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ என்று தேடிக்கொண்டிருந்தார். இவள் யாரையோ காதலித்திருப்பது தனக்கு எப்படி தெரியாமல் போனது என்கிற கோபமும் அவருக்கு. 'ரெண்டாந்தாரமாக கெட்ட மாட்டேன்' என்று அவள் சொன்னபோதே விட்டிருக்கலாமோ, என்று நினைத்தார். இன்னும் வீட்டை விட்டு வெளியில் போகவில்லை. யாரிடமும் இதை சொல்லவும் முடியாது. கேவலமாக போய்விடும். மனதுக்குள் புரண்டு மனதுக்குள் உருண்டுகொண்டிருந்த நேரத்தில் வந்தாள் பலவேசத்தின் அம்மா.
திக் என்றது கருப்பையாவுக்கு. இவள் மகனுடனா? பலூன்காரப் பயலோடவா?
வீட்டுக்குள் அழுதுகொண்டிருந்த சடச்சியிடம் , 'ஏம்டீ அழுதே... இங்கென்ன கொலயா விழுந்துபோச்சு' என்றாள்.
'இனும என்ன வேணும். கஞ்சிக்கு வழியில்லன்னாலும் மானம் மருவாதயோட இருந்தோமே... இந்த செரிக்கி இப்டி பண்ணுவான்னு நா நெனக்கலியே"
'அவா என் மவன கூட்டிட்டுதான் போயிருக்கா'
இதை எதிர்பார்க்கவில்லை சடச்சி. அழுகையை டக் என்று நிறுத்தி,'நெனச்சேன். நாலு நாலுக்கு முன்னால வீட்டுக்கு பின்னால அவன் சைக்கிளைப் பார்த்தேன். அப்பமே தெரிஞ்சிருக்கணும்" என்றவள், ''இது ஒனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கா?. தெரிஞ்சுட்டுதான் ஊமை மாதிரி இருந்தியோ?' - கோபமாகக் கேட்டாள்.
'ஆங்கங்கெட்டால பேசாத்திட்டீ, நேத்து ராத்திரிதான் சொல்லிட்டிருந்தாம். விடிஞ்சால பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்டி பண்ணுவாவோன்னு யாருட்டி கண்டா. கைக்குள்ள இருக்கற புள்ளன்னா கன்னத்துல அடிச்சு உக்கார வக்கலாம். கைநிமிர்ந்ததுவோல என்ன பண்ண சொல்லுத?'
கருப்பையாவின் காதிலும் இது விழுந்தது.
'இப்ப எங்க இருப்பாவோ"
'எங்க போயிருவாம். கருத்தபிள்ளையூர்ல இருக்குத மாமம் வீட்டுக்குதாம் போயிருப்பாம். நீங்க பேசமா இருங்க. நா போயி நயமா பேசி கூட்டியாரேன். பெறவு நல்ல நாளு பார்த்து தாலிய கெட்டிருவோம்".
சொன்ன மாதிரியே கருத்தப்பிள்ளையூரில் இருந்தான் பலவேசன். மாமன் வீட்டில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள் பிச்சம்மா. அவன் அம்மா வந்ததை தெரிந்ததும் ஓடி போய் காலில் விழுந்தாள். கண்ணீர் முட்டி நின்றது.
'இப்ப இதுலாம் பண்ணு. உங்கப்பன் ஆத்தால யோசிச்சியாட்டீ...ரெண்டு நாளு நீ இங்க இருந்தின்னா, அவ்வோதான் தூக்கு போட்டு சாவணும். ஆம்பளை பயலுவோலுக்கு என்ன வந்திருக்கு. அவன் பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு நாளைக்கு தெருவுல வுட்டுட்டாம்னா நீ எங்கட்டீ போவ?'
பிச்சம்மா எதுவும் பேசவில்லை. நள்ளிரவு நேரம் பலவேசமும் பிச்சம்மாவும் ஊருக்கு அழைத்துவர பட்டார்கள். ஆட்கள் யாரும் பார்க்காதவாறு பிச்சம்மாள் அவளது வீட்டில் ஒப்படைக்கப்பட்டாள்.
ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடியது அவளுக்கு ஏதா செய்துகொண்டிருந்தது. பெரும் குற்ற உணர்ச்சி அவளை இம்சை பண்ணிக்கொண்டிருந்தது.
தொடர்கிறேன்.
8 comments:
இடைவெளி அதிகம் விடாதீங்க.. சீக்கிரமே தொடருங்க..
//இப்ப இதுலாம் பண்ணு. உங்கப்பன் ஆத்தால யோசிச்சியாட்டீ...ரெண்டு நாளு நீ இங்க இருந்தின்னா, அவ்வோதான் தூக்கு போட்டு சாவணும். ஆம்பளை பயலுவோலுக்கு என்ன வந்திருக்கு. அவன் பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு நாளைக்கு தெருவுல வுட்டுட்டாம்னா நீ எங்கட்டீ போவ?'//
மிக உண்மையான வரிகள்..ஏழைத் தாயின் வார்த்தைகள் நிதர்சனம் உணர்த்துகின்றன.
தொடருங்கள்..கூட வருகிறேன்..!
//பாதகத்தி பூத்து வச்சேன்
தென்னம்பிள்ளை மண்ணுல
பாதி வளந்து கொல்லுதே
வலப் பக்க கண்ணுல...
பால்குடிச்ச நெஞ்சை நீயும்
மாரடிக்க வச்சிட்டியே-என்
மாரடைக்க வச்சிட்டியே//
அருமையான நம்ம ஊரு நடை தொடரட்டும்
என்ன அண்ணாச்சி! மழை விட்டு விட்டு வருதே.....
இருந்தாலும் நல்லா குளுமையாத்தானிருக்கு.
கிருத்திகா, ரிஷான் நன்றி.
அத்திரி அண்ணேன், தாமிரபரணியி்ல உங்களுக்கு எந்த கரை?
வருகைக்கு நன்றி.
Blogger ஆடுமாடு said...
வணக்கம்.
நண்பர் ராஜ்குமாரின் அறையில் இந்த குறும்படத்தைப் பார்த்தேன். பெரும் கட்டுரைகளும், கவிதைகளும் சொல்லிவிடமுடியாத வலியையும் போர்ச்சூழலையும் கண்முன் நிறுத்தியிருந்தது படம். இன்னும் கணத்துக்கொண்டிருக்கிறது மனது.
நல்ல விரிவாக்கம். நன்றி
Ungal comments parthan
Mr.Jeeva Migavum arumaiyana pathivu, ungaloda vimarsanam ennai antha padathai parka thundiyathu thaivu seithu antha padam eduthavargal minanjal irunthal tharungal antha puniya manithargal oda pesalam
ஆடுமாடு எங்கே காணோம்.வந்தேன் தொடர் வாசிச்சேன்.
Post a Comment