Tuesday, September 16, 2008

பிரச்னைகளின் உலகம்

சீரியல்களுக்கு வசனம் மட்டுமே எழுதி கொண்டிருந்த நண்பர் பைத்தியகாரன் (நம்ம பைத்தியகாரன்தான்), இப்போது கதை, திரைக்கதை, வசன பார்ட்டியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மூன்று வாரத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் நாகவல்லி.

சிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே இருந்திருக்கிறேன். திடீரென்று பூமிக்குள் இருந்து நிலவு உதிர்த்து வருவது, ஒரு லட்சம் பாம்புகள் ஊர்ந்து, எதிரில் படமெடுத்து நிற்பது போன்ற கற்பனைகள் மாயாஜால கதைகளில் அதிகம். நாகவல்லியும் அப்படியொரு கதைதான். இதன் பிரச்னை வேறுமாதிரியானது.

நான்காவது வாரமும் வரப்போகிறது. இன்னும் பார்க்கவில்லை.
'பார்த்தேன் பைத்தியம்,. பிரம்மாதம், எப்படிய்யா இப்படி... அந்த டயலாக் இருக்கே அது போதும்யா உன் திறமைக்கு?' என்று ஏகத்துக்கும் அவரிடம் விட்ட கதைகள், பொய்யென்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

................................

பொதுவாக சீரியல்கள் பெண்களின் ஏரியா என்றே நினைத்திருந்தேன். சில சீரியல்களில் பணியாற்றும் நண்பர்களை சந்தித்த பின், அது ஆண்களின் ஏரியா என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மெகாவுக்கு வசனம் எழுதும் நண்பர் சொன்னார்.

'என்ன பண்ண? டி.ஆர்.பி.யில நல்லா போகுதுன்னு தயாரிப்பு இன்னும் இழுக்க சொல்லுதாரு'.

மாமியாரை எப்படியெல்லாம் இன்னும் கொடுமைகாரியாக காட்டலாம், இன்னும் என்னென்ன பிரச்னைகளை குடும்பத்துக்குள் கொண்டு வரலாம் என்பதையெல்லாம் யோசிக்கும் திரைக்கதை, வசனகர்த்தாக்கள்தான் இதன் உயிர். இதனால் இது ஆண்களின் ஏரியா.

'கோலங்களி'ல், இப்போ பிரச்னை முடிஞ்சுடும், நாளைக்கு முடிஞ்சுரும் என்று பார்த்தால், பிரச்னை மேல் பிரச்னை என்று இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். (தங்கமணி தினமும் இதன் கதையை சொல்லி என் கண்ணீரை வேறு வரவழைத்துவிடுகிறார்).

'நாலு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலை பக்கத்துல ஒரு சம்பவம் நடந்ததே. பேப்பர்ல பெரிசா போட்டிருந்தானே ஞாபகமிருக்கா'.

'எது சார்... மாமியாரும் மருமகளும் சேர்ந்து புருஷனை கொன்னாங்களே அந்த நியூசா"

'கரெக்ட். அதை எப்படி, நம்ம கதைக்குள்ள கொண்டுவரலாம்னு யோசி'

ஒரு சீரியல் இயக்குனர் அசிஸ்டென்டிடம் இப்படி சொன்னதை கேள்விபட்டேன். அடப்பாவிகளா எங்கயோ ஒரு விஷயம் நடந்தா அதையெல்லாமா சீரியல்ல கொண்டு வருவீங்க. என்ன கொடுமைடா ராசா.

.....................................

புதிதாக படம் இயக்க போகும் நண்பன், கதை விவாதத்திற்கு அழைத்தான் (சும்மா துணைக்குதான்). டிராகன் சிக்கன் மற்றும் பெக்கார்டி உண்டு என்று சொன்னதையடுத்து என் பயணம் உறுதிபடுத்தப்பட்டது.

பாண்டிச்சேரி அருகே வழுதாவூர் சாலையில் வயக்காட்டுக்குள் இருக்கிறது அந்த கெஸ்ட் ஹவுஸ். இசை அமைப்பாளர் ஒருவருக்கு தெரிந்தவர்தான் இதன் உரிமையாளராம். அவர் ரெகமண்டேசனில் குறைந்த வாடகைக்கு அறை கிடைத்தது. வாயில் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பெரிது பெரிதான கூழாங்கற்கள். நடக்கவே சுகமாக இருந்தது.

டிஸ்கஷனுக்காக உட்கார்ந்தவர்களிடம், 'வந்த வேலையை பார்க்க போகிறேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் அமர்ந்து ஆரம்பித்தேன். இப்படியானதொரு இடங்களில் தண்ணி அடிப்பது சுகமானது.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் போதையுடன், விவாத கூட்டத்தில் உக்கார்ந்தேன்.

'இல்ல... இந்த இடத்துல ஏதாவது ஒரு புது பிரச்னையை வைக்கணும். வழக்கமானதா இருக்க கூடாது'

'நான் சொன்னது கூட புதுசுதான் சார்'

'இல்லை, அது அவ்வளவு அட்ராக்டா இல்ல'

பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியளவில் எழுந்து, எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு காரை சென்னைக்குத் திருப்பினேன்.
மண்டை 'என்ன பிரச்னைய வைக்கலாம்... இந்த பிரச்னை எப்படியிருக்கும்... நாளைக்கு அவங்கிட்ட இதை சொல்லலாம்" என்று யோசித்துக்கொண்டே வந்தது, மாயாஜால் அருகே பைக்காரன் மீது உரசும் வரை!

24 comments:

குசும்பன் said...

பைத்தியகாரனுக்கு வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் பைத்தியக்காரனிடம் சொன்னது :

இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.

அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))

கே.என்.சிவராமன் said...

ஆடுமாடு,

நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே? ஏற்கனவே சுந்தரும், வளரும் வாறிகிட்டு இருக்காங்க... இப்ப பின்னூட்டத்துல மார்க்வெஸ்ஸுக்கு பிறகுனு எழுதி சுந்தர்ஜி ராவறாரு... பாவங்க மார்க்வெஸ்... இப்படியா அவரை அவமானப்படுத்தறது?

எப்படியோ நல்லா இரு ஆடுமாடு :(

Athisha said...

ஆடுமாடு

நீங்க இன்னுமா அந்த சீரியல் பாக்கல

கட்டாயம் பாரு நைனா , படா பேஜாராக்கீதுபா..அதும் அந்த குட்டி இன்னாமா ஆக்ட்டு குடுத்துருக்கு பாரேன்....

பைத்தியகாரன் அண்ணாச்சிக்கு வாழ்த்துபா

rapp said...

//இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.

//

:):):)

Anonymous said...

நாகவல்லி - சீரியல் - டி.ஆர்.பி - கோலங்கள் இதெல்லாம் நமக்கு தெரியாது.

விரைவில் திரைப்பட வசனகர்த்தா ஆவதற்கு பைத்தியக்கார(ன்) அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!!!

வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்

ஆடுமாடு said...

நன்றி குசும்பு.

ஆடுமாடு said...

//அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))//

நெசமா சுந்தர்!

ஆடுமாடு said...

//நான் என்ன பாவம்யா செஞ்சேன்? இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே?//

நண்பர் பைத்தியக்காரனே... இதென்னங்க கூத்து. நீங்க மட்டும் என் ரகசிய மேட்டர்களை சொல்லலாம் நான் சொல்ல கூடாதா?

கே.என்.சிவராமன் said...

உங்க, ரகசியம் எதை நான் வெளில சொன்னேன்?

ஓ... உங்க நட்பு வட்டத்துல இருக்கற அந்த நடிகை, உங்களை கண்டிப்பா பார்க்கணும்னு நைட்டோட நைட்டா பொள்ளாச்சிக்கு ஏசி கூபே புக் பண்ணி வரவழைச்சாங்களே... நீங்களும் ஒருநாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு அவசரமா போயிட்டு வந்தீங்களே... அதை சொல்றீங்களா?

அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...

காயத்ரி சித்தார்த் said...

நாகவல்லி? ஓ... அந்த பாம்பு சீரியல்? ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல?? :)

ஆடுமாடு said...

அதிஷா, ராப் நன்றி.

ஆடுமாடு said...

//வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்...//

பேர்ல என்னங்க இருக்கு வெயிலலு.

நன்றி.

ஆடுமாடு said...

//அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...//

சொல்லக்கூடாது சொல்லக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு சொல்லித்தொலைக்கிற என்னை நானே ...ல் அடித்துக் கொள்கிறேன். அடித்துக் கொள்கிறேன்.
அடித்துக் கொள்கிறேன்.

ஆடுமாடு said...

//ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல?? :)//

கொஞ்ச வெயிட் பண்ணுங்க காயத்ரி. பார்ட்டி எங்கயாவது கதை சொல்ல போயிருக்கும். வந்ததும் கேட்டு சொல்றேன்.

ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே!/

அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்!

அப்படியே கிராஃபிக்ஸ்ல ஒரு பாம்புக் கூட்டமே குடைபிடித்தாற்போல மறைத்துக் கொள்ள... தொடரும் போட்டுட்டாங்கப்பா :)))

பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சீரியல்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)

Anonymous said...

என்கிட்டயும் சொன்னாரே பைத்தியக்காரன்!

இப்படி எவ்வளவுபேர்கிட்ட சொன்னாரோ..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை!

ஆடுமாடு said...

//அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்//


என்ன நேத்து எங்கயும் பார்ல மீட் பண்ணினீங்களா? இவ்வளவு ஜில்லா இருக்கு.

ஆடுமாடு said...

//அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)//


சுந்தர்ஜி, இதுக்கு சண்டை வேறயா?

ஆடுமாடு said...

//சீக்ரெட் தெரிந்தவன்//

இது யாரு புது்சா இருக்கு.


//சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை//

சுந்தர் இப்படியும் ஒரு ஐடி வச்சிருக்கீங்களா?

வளர்மதி said...

கொஞ்ச நாளா இணையப் பக்கமே வர முடியல்லே. இப்ப வந்து பாத்தா எவ்வளவு கூத்து.

அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க.

அப்பாலிக்கி சுந்தர் ... “சீக்ரெட் தெரிந்தவன்” உங்களை வாரி விட்டதப் படிச்சு வாய்விட்டு சிரிச்சேன்.

என்ன காமெடி/கொடும சார் இது :)))

ஆடுமாடு said...

//அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க//

வளர்ஜி, நான் எங்க வாரினேன். பைத்தியக்காரந்தான் என்னை வாரியிருக்காருங்க.

நன்றி.