Sunday, August 17, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி


ஊர்லயிருந்து ரெண்டு பல்லாங்கு நடந்தா ஆறு. ஆத்துல பெரிய ஆழம்லாம் இல்ல. மேக்க பேயடிச்சாம் மண்டபம் இருக்கு. அது பக்கத்துலதான் கொஞ்சமா இடுப்பு முங்குத அளவுக்கு ஆழமிருக்கும். மத்தபடி எல்லாபக்கமும் கரண்டைய நனைக்குத மாதிரிதான் தண்ணி. சின்னபாலம் பக்கத்துல மேல ஊரு சுடுகாடு. ஆத்தாங்கரைக்கு அந்த பக்கம் ஆழ்வார்க்குறிச்சிக்காரங்களுக்கு சுடுகாடு. இதுல ஐயமாருவோ சுடுகாடு தனி. இங்க மட்டும் சிமெண்டுல பூசி கட்டியிருப்பாவோ. மத்த சுடுகாடுலாம் தகர கொட்டாயிதான்.

சுடுகாட்டை தாண்டிதான் துணி வெளுக்க ஏழெட்டு கல்லை போட்டிருந்தாவோ. இது எங்கன்னா சின்னப்பாலத்துக்கு வலப்புறம். கல்லுனா சாதாரண கல்லுன்னு நெனைச்சிடக்கூடாது. ரெண்டு கல்லுவோ பாறை. ஆத்துக்குள்ளேயே கெடக்குத சின்ன பாறை. மிச்சம் நம்ம பூழா வீட்டுக்காரனும், எசக்கியும் பேய்மண்டபத்துலயிருந்து ஆத்துக்குள்ளேயே உருட்டி உருட்டி கொண்டு வந்து போட்ட சதுர கல்லு. இந்த கல்லுவோலதான் துணி தொவைக்கது.

ஊர்க்காரங்க துணியையெல்லாம் கழுதை மேல தூக்கி வச்சு, வேணான வெயிலில துண்டை வச்சு மொகத்தை தொடச்சுகிட்டு நடந்தே வருவாவோ பூழா வீட்டுக்காரனும் எசக்கியும். உச்சி மத்தியானத்துல புருஷனுக்கும் எசக்கிக்கும் தூக்கு சட்டியில சோறை கொண்டு வருவா பூழா. கூட தொவைக்க யாராவது வந்தா கூட்டிட்டு வருவா. சோறு கொண்டு வாரவளுக்கு இன்னொரு வேலையும் இருக்கு. ஆத்துக்கிட்ட அவுத்துவுட்ட கழுதையோ அது பாட்டுக்கு எவன் தோப்புக்குள்ளயாவது போயி நின்னுரும். இல்லனா படுத்துரும். பூழாகிட்ட நாலு கழுதை இருக்கு. எசக்கிட்ட ரெண்டு. பூழாட்ட இருக்குத நாலு கழுதையில ஒண்ணு சேட்டைக்கார கழுத. சும்மா அதுகிட்ட போனாலே குண்டிய திருப்பிட்டு காலை வச்சு எத்திரும். பொல்லாத கழுதை. அதனால அதுக்கு மட்டும் பின்னாங்கல் ரெண்டையும் சேர்த்து கயிறை வச்சு கெட்டு போட்டிருந்தாவோ. பாக்கதுக்கு பாவமாதான் இருக்கும். என்ன பண்ண?

போன மாசம் மூக்கத்தேவன் மவ புள்ளய தூக்கிட்டு ஊர்ல இருந்து வந்தா. மவளையும் பேரனையும் பாக்க கார்சாண்டுக்கே வந்துட்டாம். மூக்கத்தேவன். இறங்குனவோ சும்மா வீட்டுக்குப் போவாம, பயலுக்கு ஒண்ணுக்கு வருதேன்னு இடுப்புலயிருந்து இறக்கி ஓரமா விட்டுருக்கா. பக்கத்துல இந்த கழுதை. இதுக்கு தெரியுமா அது மூக்கத்தேவன் பேரன்னு. காலை வச்சு மூக்குல எத்திட்டு. ஓ...ன்னு அழுததுதான் காரணம். கழுதைய மூக்கத்தேவன் ஓட ஓட விரட்டி, கல்லை கொண்டு எறிஞ்சான். இன்னும் கழுதை முதுவுல தழும்பு இருக்கு.

இப்படி ஏதாவது வம்பை இழுத்துட்டு வந்துரும் இந்த கழுதை. நல்ல வேளை மத்தியான நேரத்துல ஆத்துப்பக்கம் ஆளுவோ இருக்க மாட்டாவொ. இருந்தா, இந்த கழுதை அவங்களையும் உண்டு இல்லைன்னு ஆக்கிரும். இதனால பூழாவுக்குத்தான் வேசடை. வாரவனுவோல்லாம், ‘கழுதைய கெட்டி போடு, இல்லைனா சடச்ச நயினார் கோயிலுக்கு வெட்டி படைச்சிருவேம்பானுவோ. வேற என்ன செய்ய முடியும்? அதனால பாவ புண்ணியத்தையெல்லாம் தூர வச்சுட்டு கால்ல கட்டு போட்டுட்டாவோ.
இந்த கழுதையலயெல்லாம் தேடி புடிக்கத வேலை பூழாவுக்கு. இது முடிஞ்சதும் வேற வேலையும் இருக்கு. அதுக்கு அவா தனியா போவ மாட்டா. நடு காட்டுக்குள்ள பொம்பளைய தனியா பாத்தா ஏதாவது ஆயி போச்சுன்னா. அதான் துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப்போவா.

பாக்கியை நாளைக்கு சொல்லுதேன்.

படம் நன்றி: மீஞ்சூர் ராசா.

20 comments:

கதிர் said...

சூப்பர். இந்த கேரக்டர்கள வெச்சி நீங்க ஒரு படமே எடுத்துடலாம்.

ஹேமா said...

கதை ஒண்ணு(விட)சொல்லத் தொடங்கிருக்கிங்க.என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாப் பாத்திட்டு இருக்கேன்.

manjoorraja said...

தொடக்கம் நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.

manjoorraja said...

தொடக்கம் நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.

Anonymous said...

பூலாவுக்கும், வீட்டுக்காரனுக்கும் இந்தக் கழுதயோட ஒரே மண்டைடி தான் போல!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா திருப்பியும் ஆரம்பிக்கறீங்களா....
வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

ஆமா, தம்பி சீக்கிரமே சொல்றேன்.

ஆடுமாடு said...

ஹேமா வருகைக்கு நன்றி.

ஏற்கனவே 7 கேரக்டர்களை பற்றி எழுதிட்டேன். கிராமத்துக்குன்னே சில வேலைகள், தொழில்கள் இருக்குமில்ல. அவங்களை பற்றிய பதிவு இது.

துளசி கோபால் said...

ம்ம்ம்ம் அப்புறம்?????

Anonymous said...

//முங்குத அளவுக்கு ஆழமிருக்கும். மத்தபடி எல்லாபக்கமும் கரண்டைய நனைக்குத மாதிரிதான் தண்ணி//
//வேணான வெயிலில//
//கார்சாண்டுக்கே//
//கல்லை கொண்டு எறிஞ்சான்//

ஊருக்குப் போய்வந்தாப்ல இருக்கு. நன்றி.

ஆடுமாடு said...

மஞ்சூர் ராசா நன்றி.

குசும்பன் said...

அருமை ஆடுமாடு.

ஹேமா said...

நல்லது ஆடு மாடு.மற்றைய உங்கள்
7 பதிவுகளையும் படிக்கப் போகிறேன்.எனக்கும் அடுத்தவர்களின் பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்கள் அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.நன்றி.

ஆடுமாடு said...

வெயிலான், கிருத்திகா, குசும்பன் நன்றி.

ஆடுமாடு said...

துளசி டீச்சர் ஆளையே காணோம்.
வடகரை வேலன் நன்றி.

Ayyanar Viswanath said...

/ஆமா, தம்பி சீக்கிரமே சொல்றேன்/

உங்க படத்தில எங்க அபுதாபி ஆணழகருக்கு வாய்ப்பு கெடைக்குமா டவுட் டா இருந்தா அவன் போட்டோ பாத்துக்கங்க..எந்த வேசம் கொடுத்தாலும் பண்ணுவாரு..கொஞ்சம் பாத்து பண்ணுங்க :)

ஆடுமாடு said...

நனறி ஹேமா.

ஆடுமாடு said...

//உங்க படத்தில எங்க அபுதாபி ஆணழகருக்கு வாய்ப்பு கெடைக்குமா டவுட் டா இருந்தா அவன் போட்டோ பாத்துக்கங்க..எந்த வேசம் கொடுத்தாலும் பண்ணுவாரு..கொஞ்சம் பாத்து பண்ணுங்க//

அய்யனாரு, தம்பி ஒரு போட்டோசெஷன் நடத்தி,சி.டியில போட்டோ அனுப்பியிருக்காரு. செலக்ஷன்ல இருக்கு.

ESMN said...

அண்ணாச்சி,
கதை அருமை. தொடர்ந்து எழுதுங்கள்...
இந்த கழுதை மாதிரிதான் அடங்காத எருமை மாடுகளுக்கு கழுத்துல ஒரு கட்டைய தொங்கவிட்டுருப்பாவ..

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி நன்றி.