Friday, June 13, 2008

சூலிபொத்தை

காட்டுக்குள்ள வீடு. பத்து பேரு குடும்பம், அங்க குடிசைய போட்டு விவசாயம் பாத்துட்டு இருக்கு. ஒரு இருவது வீடுவோ இருக்கும். மாணிக்கம் வீட்டுல ரெண்டு சமஞ்ச புள்ளைலுவோ. சுழியான பிள்ளைலுவோ. எடக்கு மடக்குன்னுதான் இருக்கும். ராத்திரிக்கு மேல வெளியில போவ கூடாதுன்னா இதுவோ அங்கதான் கெடக்கும். சேட்டைக்காரச்சியோ.

நாலாவது வீட்டுல இருக்குத பயலுக்கு மூத்தவ மேல கண்ணு. அரசல்புரசலா மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாவோ. பய வேலைல சரியா இருந்தாம். கர்ப்பமாயிட்டா புள்ள. நெற மாசம் வந்ததும், கூட ஒத்தாசைக்கு தங்கச்சிக்காரி இருந்தா. ஒரு நாளு பகல்ல எல்லாரும் வய வேலைக்கு போயிட்டாவோ. தங்கச்சிக்காரியும் போயிட்டா. நெறமாச சூலி வீட்டுல படுத்துக்கெடந்தா. திடீர்னு வாசல்ல இருந்து சத்தம் ‘ஐயா’ன்னு.

இவ உள்ளயிருந்து, ‘யாரு’ன்னு கேட்டா.
‘நான் சன்னியாசி. தவமிருந்துட்டு வந்திருக்கேன். தலை வாழை இல போட்டு சாப்பாடு போடணும்’னு கேட்டிருக்காரு.

இவா, இது என்னடா கூத்தா இருக்குன்னுட்டு, ‘வீட்டுல யாருமே இல்லையே’ன்னா.

‘அதான் நீ இருக்கியே’.

‘நான் சூலி, என்னால சமைக்க முடியாது. வீட்டுல நீத்தண்ணிதான் இருக்கு, அத வேணும்னா தாரேன்’ன்னா.

‘ம்ஹ¨ம். நீ வந்து சமைச்சு தந்தாதான் நான் சாப்பிடுவேன்’ன்னு சாமியாரு அடம்பிடிச்சிருக்காரு.

‘அப்படின்னா நீரு இங்ஙன பட்டினியாத்தான் கெடக்கணும்; எங்க வீட்டுக்காரங்க வந்ததும் தருவாவோ’ன்னு இவளும் கிண்டலா சொல்லியிருக்கா.

‘என்னையே ஏளன படுத்துதியா, பாரு உன்னை’ன்னுட்டு வீட்டு வாசல்ல கண்ணை மூட்டிட்டு உக்காந்துட்டாரு.

இதுக்குள்ள வய வேலைக்கு போன எல்லோரும் திரும்பி வந்துட்டாவோ. வீட்டு வாசல்ல இருந்த சாமியாரை பாத்து, மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியலை. மவா கிட்ட கேட்டாம்.
அவ வெஷயத்தை சொன்னா.

இது என்ன வம்பா போச்சுன்னு கண்ணை மூடிட்டு இருந்தவரை, ‘யோவ் சாமியாரே... என் வீட்டு வாசல்ல யாம்யா இருக்கீரு’ன்னு முதுவுல கைய வச்சு ஆட்டுனாம் மாணிக்கம்.
அவரு திடுக்குன்னு முழிச்சுட்டு, ‘என் தவத்தை கலைச்சுட்டியே’ன்னு கோவமா பாத்தாரு.

‘எங்க வந்து என்னய்யா பேசுதீரு; மொதல்ல எடத்தை காலி பண்ணும்யா’னு சொன்னாம்.

‘எல்லாருமா சேர்ந்து என் கோபத்தை கிளறிட்டீங்க. உங்களை...’ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி தெறந்த சாமியாரு... ‘நீங்க கல்லா போங்க’ ன்னு சாபம் போட்டாரு.

அவரு கையை நீட்டி சொன்னதுமே எல்லாரும் கல்லா போயிட்டாவோ. இன்னைக்கும் அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில, எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம். பக்கத்துல வைக்கப் படப்பு, அம்மிக்கல்லு எல்லாம் செதஞ்சு போயி கெடக்கு.

(திருடி அம்மன் கதை விரைவில்)

20 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்துகிட்டிருக்கு. தொடருங்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நிசமாவா....

வளர்மதி said...

ம்ம்ம் ... நல்ல கதை :)

”இதனால் சொல்லப்படும் நீதி என்ன?” என்று யாரும் கேட்காமல் இருக்கவேண்டும் :)

தொடருங்கள் நண்பரே.

டி.அருள் எழிலன் said...

தற்செயலாகத்தான் வந்தேன் அருமை.நல்ல கிராமத்து நடை வளர் சொன்னது மாதிரி கி.ராவை நோக்கிய பயணம்தான் நல்ல விஷயம் வாழ்த்துக்கள்.உங்கள் மெயில் ஐடி கொடுங்களேன்.

ஆடுமாடு said...

சுந்தர்ஜி நன்றி.

வளர்,

//இதனால் சொல்லப்படும் நீதி என்ன?” என்று யாரும் கேட்காமல் இருக்கவேண்டும் :)//

என்னது இது?

நன்றிஜி.

ஆடுமாடு said...

கிருத்திகா நெசமாவேதான்.

Anonymous said...

/// எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம் ///

எப்படி பார்க்க முடியும். படம் போட்டா நாங்களும் பார்க்கலாம்.

கதையில என்னமோ குறைஞ்ச மாதிரி இருக்கே?

ராமலக்ஷ்மி said...

வெயிலான் சொல்வது போல படங்களும் போட்டால் கோயில் தொடர் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

ambi said...

//அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில,//

எலே நீரு நம்மூர்கார பயளுவளா?
நமக்கு கல்லிடைகுறிச்சிலே. :))

அதான் தாமிரபரணிக்கு இக்கரை கல்லிடை, அக்கரை அம்பை.

கதை நல்ல இருக்கு. ஆனா சப்புனு முடிஞ்ச மாதிரி இருக்கு. தப்பா எண்ணாதியும்.

ஆடுமாடு said...

வெயிலான் நன்றி

//கதையில என்னமோ குறைஞ்ச மாதிரி இருக்கே?//

அண்ணாச்சி, இது வாய்மொழி கதை. இதுல நான் எக்ஸ்ட்ரா பிட்டிங்லாம் பண்ண முடியாது.

//எப்படி பார்க்க முடியும். படம் போட்டா நாங்களும் பார்க்கலாம்//

அடுத்த முறை ஊருக்கு போவும்போது எடுத்துட்டு வாரன்வே.

நன்றி வெயிலான்

ஆடுமாடு said...

//கிராமத்து நடை வளர் சொன்னது மாதிரி கி.ராவை நோக்கிய பயணம்தான் நல்ல விஷயம் வாழ்த்துக்கள்//

அருள் நன்றி.

ஆடுமாடு said...

ராமலட்சுமி அக்கா, படம் டிரை பண்றேன். நன்றிக்கா.

ஆடுமாடு said...

//எலே நீரு நம்மூர்கார பயளுவளா?
நமக்கு கல்லிடைகுறிச்சிலே. :))//

பாசக்கார பயலை பாத்த உடனேயே நெனச்சேன்.

சந்தோஷம் அம்பி.

இயற்கை நேசி|Oruni said...

படிக்க படிக்க படிச்சிட்டே இருக்கிற மாதிரி இருக்குது அந்த உள்ளூர் நடை.

கி.ரா - வாக நடை பயிற்சியா ;)? நல்லாருக்குவே. அசத்துங்க!

தெகா.

ஆடுமாடு said...

தெகாஜி நன்றி்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... கதை படிச்சதும் .. சாமியார் மேல கோபம்.. அப்பறம் அந்த பொண்ணும் கிண்டல் பண்ணது தப்புதானேன்னும்.. சே ... கதை யை படிச்சா ரசிக்காம காரணம் நீதி எல்லாம் கேக்கக்கூடாது..

ஆடுமாடு said...

//சே ... கதை யை படிச்சா ரசிக்காம காரணம் நீதி எல்லாம் கேக்கக்கூடாது//

நெசந்தான் முத்துலட்சுமி. இது வாய்மொழி கதையில்லையா?

நன்றி

கிருஷ்ணா said...

Hi i regularly read all ur posts.
All r fine.I think you are Eknaath Haasen.I m from Ambur.
yes_krishnan@yahoo.com

M.Rishan Shareef said...

ஆச்சரியமான கதையாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் இட்டால் வந்து பார்க்க வாய்ப்புக்களற்ற என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் நண்பரே...!

ஆடுமாடு said...

ரிஷான்ஜி நன்றி.

//சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் இட்டால்...//

பாஸ், ஊருக்கு போகலை. போகும்போது கண்டிப்பா எடுத்துட்டு வந்து அப்லோட் பண்றேன்.