Monday, June 2, 2008

மண்ணில் முளைத்த கதைகள்

ரகசியங்களைப் புதைத்துக்கொண்டு
அப்பாவியாக நிற்கிறது கிராமம்.
அதன் நீள அகலங்களில் ஏராளமான கதைகள்
மண்ணாகவும் கல்லாகவும் விரவி கிடக்கின்றன.
அள்ளி அருந்தவும், அடிமனதில் சொருகவும்
சுகமான சுவாரஸ்யங்களை மடித்து
வைத்திருக்கிறது அந்த பொட்டல் மண்.
அந்த வேர்தேடி போகப் போக நம்
முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது. நவீனம் எட்டிப்பார்க்காத
அந்த வயக்காடுகள் வானத்தை மட்டுமே
நம்பிக்கொண்டிருக்கிறது.
மழையும் நீருமே உறவாகியிருக்கிற
அந்த வரப்புகளில் பூத்துக்குலுங்குகிறது
ஆயிரக்கணக்கான கதைகள். ஒரு கையால்
உருவ உருவ உங்களாலோ என்னாலோ
பிடித்துவிட முடியாத அளவுக்கு அவை
வந்துகொண்டேயிருக்கிறது.
அவற்றை கட்டுக் கதைகள் என்று
ஒதுக்கி விடமுடியாது. விளிம்பு நிலை மக்களின்
நம்பிக்கைகளின் அடிப்படையான
இந்த கதைகள் சாகாவரம் பெற்றவை.
இதற்கான மூலம் என்ன? எப்படி வந்திருக்க முடியும்
என்கிற ஆராய்ச்சியெல்லாம் நாட்டார் வழக்காற்றியல்
களப்பணியாளர்களின் கையில் இருக்கிறது.
இந்த மண்ணில் முளைத்த
அந்த (நான் கேள்விபட்ட)
வாய்மொழிகதைகளை எழுத இருக்கிறேன்.
விரைவில்.

15 comments:

கே.என்.சிவராமன் said...

மேய்ப்பவர்களை மறந்துவிட்டு அல்லது டிமிக்கி கொடுத்து விட்டு மேய காத்திருக்கிறோம்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எழுதுங்க ஆடுமாடு. அற்புதமா வரும்.

ஆடுமாடு said...

பைத்தியக்காரன் ஐயா, சுந்தர் ஐயா நன்றி...

ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்த விஷயம். சமீபத்துல படிச்ச கழனியூரன் புத்தகம்தான் கொஞ்சம் தூண்டி விட்டுச்சு.

நன்றிங்க பாஸு.

ராமலக்ஷ்மி said...

காத்திருக்கிறோம். களத்தில் இறங்கி கதைகளை அறுவடை செய்து வலையில்
ஏற்றுங்கள்.
மேலே 'மேய்ச்சல் காடு' விளக்கியது உங்கள் புனைப் பெயரை.

Ayyanar Viswanath said...

அப்பப்ப இந்த பக்கமும் மாட்ட அவுத்துவுடுங்க பாஸ்..:)

ஆடுமாடு said...

நன்றி ராமலட்சுமி

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

மண்ணோடு சிதைக்கப்பட்ட வாழ்க்கை கதையாக வருமா? கொஞ்சம் நுனிப்புல் மேய காத்திருக்கிறேன்...

Anonymous said...

டிரைலரே அட்டகாசமா இருக்கு. படம் ரிலீஸ் எப்போ?

M.Rishan Shareef said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே :)

ஆடுமாடு said...

அய்யனார், மாடு மேய்ச்சல்ல பிசி. இந்தப் பக்கம் இழுத்தா கூட வரமாட்டேங்குது. புடிச்சு இழுத்துட்டு வந்திருக்கேன்.

நன்றி

ஆடுமாடு said...

வெயிலான்,

//படம் ரிலீஸ் எப்போ?//

சீக்கிரமாண்ணே.

ஆடுமாடு said...

ரிஷான் நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்பா ஒரு வழியா மவுனம் கலைச்சிட்டீங்க ரொம்ப சந்தோஷம். கதைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. பட ரிலீஸ் எப்போ...

உண்மைத்தமிழன் said...

எழுதுங்கோ ஸார்..

நானும் நல்ல பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்..

Athisha said...

முதல் கதை எப்போ சார் ?

ஆவலுடன்

அதிஷா