ஆடு, மாடுகளின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பட்டிகளில் கிடக்கும் ஆடுகள் 'சிவாஜி' படம் பார்க்க, முதல் நாள் டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியை ஒத்துக்கிடக்கின்றன. புல்வெளிகளில் மேயும் மாடுகள் விண் வெளியில் உலாவுதாக நினைக்கின்றன. அவரவர்களுக்கான சுதந்திரம் அவரவர்களுக்கான ம்னதை பொருத்தது. எனக்கும் இந்த ஜீவ ராசிகளுக்குமான உறவு அலைப்பறையானது. திருநெல்வேலியின் மூலையில் இருக்கிற எங்கள் கிராமம் மாடுகளால் சூழ்ந்தது. கிழக்கு மேற்கு , தெற்கு,வடக்கு என எங்கு திரும்பினாலும் ஆடு மாடுகள் சாவாகசமாக அலைந்து கொண்டிருக்கும். அலைந்து கொண்டிருக்கும் என்பது கூட கொஞ்சம் நாகரிகம் கருதி சொல்லும் வார்த்தைதான். டவுண் பஸ்காரர்கள் பாஷையில் சொல்வதென்றால் 'ஆக்கங்கெட்டதுவோ எப்ப பார்த்தாலும் நம்ம பிராணனை வாங்குதுக்கே வருதுவோ".
காலையில் பத்து மணிவாக்கில் மாட்டுக்காரர்கள் மேய்ச்சலுக்கு தயாராகிவருவதே ஏதோ போருக்கு போவது போலத்தான் இருக்கும்.
''ஏல...ஆத்துக்கு மேப் பக்கம் மாட்டை பத்திராதே, சுப்பையா தேவன் நேத்தே பொலம்பிட்டு இருந்தான் வயல்ல விழுந்துட்டுன்னு. பாத்துக்கோ. இல்லைனா அவன் எழவுல நிக்க முடியாது" என்று ஒரு பெரிசு காது கிழிய கத்தும்... சுவாரஸ்யங்களை மீண்டும் தொடவேன்.
1 comment:
என்னடா! புது பெயராக இருக்கே என்று வந்து பார்த்தால் நிஜமாகவே ஆடு மாடுகளுடன் இருப்பது போல் தான் எழுதியிருக்கிறீர்கள்.
நல்ல எழுத்து நடை.
தொடர வாழத்துக்கள்.
Post a Comment