ஏர்போர்டிலிருந்து வளைந்து நெளிந்து வெளியே சென்று கொண்டிருந்தது டூரிஸ்ட் வேன். 'என்ன விஷயம், வண்டிய நிறுத்த சொன்னீங்களே'
----நண்பன் ஆட்காட்டி விரலை காண்பித்தான். சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தினார் டிரைவர். வேகமாக ஓடிச்சென்று திரும்பி வந்தவன் சொன்னான்:
'யப்பாட்டா... மலேசியா மண்ணுல ஒண்ணுக்கடிச்சாச்சு'
அடப்பாவிகளா... இப்படியெல்லாமா ஆசை வச்சிருப்பாங்க.
ட்வின் டவரின் எதிரில் இருந்தது, ஹோட்டல் அறை. வேனில் இருந்து இறங்குமுன் ஒரு மஞ்சள் கலர் ஸ்லிப் கொடுத்தார்கள். அதைக்காண்பித்தால் ரூம், மற்றும் டிபன் கொடுப்பார்களாம். ரிசப்ஷனில் இருந்த மலாய் (மலேசியால பார்த்ததுல இந்த பொண்ணுதான் ரொம்ப ஒல்லி) பொண்ணு, கன்னம் வரை சிரித்துக்கொண்டே ஏதேதோ எழுதி, சாவி கொடுத்தாள்.
வேன் டிரைவர் இறங்குவதற்கு முன், 'நீங்க தங்க போற ஏரியா கொஞ்சம் மோசமானது, ஈவினிங்ல அங்க இங்க அலையாதீங்க'என்று அட்வைஸ் என்ற பெயரில் பயங்காட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்ன அடுத்த நிமிடத்திலிருந்த நண்பன், சர்வநாடியும் ஒடுங்கி, சிரிக்க மறந்திருந்தான். அறையில் ரெஸ்ட் எடுத்துவிட்டு, 2 மணிக்கு ரிசப்ஷன் வந்தால் சிட்டி டூருக்கு வேன் வருமாம்.
வந்ததும் நண்பன் கட்டையை சாத்தினான்.
'ஏல, இதுக்கா வந்தோம். பக்கத்துல ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்டா" என்றேன்.
'ச்சீ... ஏரியா மோசம். வந்த எடத்துல எக்குத்தப்பா ஆயிரக்கூடாது பாரு".
'அடே, ப்ளாக் எழுதற பல பேரு இங்க இருக்காங்க...ஏதாவதுன்னா ஓடியாந்து விசாரிப்பாங்கடா'
'நீ, எங்க வேணா போ. நான் வரலை"
டூட்டி ஃப்ரியில் வாங்கிய பெக்கார்டியில் 2 பெக் போட்டுவிட்டு, இறங்கி வந்தால், எவ்வளவு பெரிய ரோடு!. சிக்னல் விழுந்ததும் பைக்காரர்கள் செல்லும் வேகத்தில், ஓரத்தில் நின்ற என் காது ஜவ்வு கிர்ர். எதிரில் தமிழில் எழுதப்பட்டிருந்த கடையில் எட்டிப்பார்த்தேன் எதையாவது சாப்பிடலாமே என்று.
அவர்கள் தமிழ் பேசியதைப் பார்த்து, உள்ளே உட்கார்ந்தேன்.
நம்மூர் ஓட்டல் மாதிரி. ஆனா, அவர்கள் வைக்கிற காம்பினேஷன் பிடிக்காது போலிருந்தது. (பக்கத்தில் சாப்பிட்டவரை பார்த்துதான்).
என்னிடம் வந்த சர்வர், 'தண்ணி' என்றார். சரி என்றேன். ஒரு பெரிய டம்பளரில் டீ கொண்டு வந்தார். 'நான் தண்ணிதானே கேட்டேன்"
'ஊர்ல இருந்து வந்திருக்கீங்களா? என்று கேட்டுக்கொண்டே, தண்ணீர் கொண்டு வந்தார். இங்க தண்ணின்னா இதுதான்.
'அப்புறம், எந்த ஊர்ல இருந்து..."
'சென்னை...நீங்க?"
'ராமநாதபுரம்"
'என்ன விஷயமா வந்திருக்கீங்க... எத்தனை நாளு தங்கியிருப்பீங்க"
'சும்மா. ரெண்டு நாளு"
'ரெண்டு நாளா... வைர பிசினசா'
'வைரமா... இல்ல இல்ல"
'தெரியும் சார். இவ்வளவு வருஷமா இங்கயிருக்கோம். எங்களுக்கு தெரியாதா... கிராண்ட் காண்டினெண்டல்லதான தங்கியிருக்கீங்க"
இது, ஏதோ வில்லங்கத்தில் கொண்டு விட்டுவிடும் என்பதால் வேகமாக தலையாட்டி விட்டு வந்துவிட்டேன். ரோட்டு வேடிக்கை முடிந்து, நண்பனை உசுப்பி, ரெண்டு மணி சிட்டி டூர் வேனை பிடித்தோம். வேனில், இந்தியாவிலிருந்து வந்திருந்த நான்கு இளம் ஜோடிகள் இருந்தார்கள். ஒவ்வொரு இடம் போனதும், 'சீ மை ரைட்டன் சைட்.. திஸ் இஸ்..." என்று ஆரம்பிப்பார் டிரைவர் கம் கைட். நம்மூர் அண்ணாச்சிதான்.
ட்வின் டவர் அருகில், போடோ எடுப்பதற்கான இடத்தில் அவ்வளவு கூட்டம். இறங்கி வந்த ஒரு ஜோடியின் செல்போன், என் கால் அருகே விழுந்துவிட்டது. எடுத்துக்கொடுத்ததில் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்.
பெயர் சஞ்சய் பாண்டே. மகாராஷ்ட்ரா. சென்னையில் ரெண்டு கெமிக்கல் கம்பெனி இருக்கிறதாம்!. ஹனிமூன் வந்திருக்கிறார்கள்.
'நான் இங்க அடிக்கடி வருவேன். என் வொய்ப்புக்காக இப்ப வந்திருக்கேன்' என்று ஆரம்பித்து, அவர்கள் காதலித்ததிலிருந்து, பெற்றோர் சண்டை, கல்யாணம் ஆன வரை, விலாவாரியாக விளக்கியதில், நண்பன் அப்செட்.
'ஏண்டா வெளிநாட்டுல வந்துமா?" என்பதுபோல் எனக்கொரு முறைப்பை கொடுத்தாலும் பார்ட்டி விட்டபாடில்லை.
'ஏல முன்னபின்ன தெரியாத நம்மட்டயே, இந்தா கொல்லு கொல்லுதானே... அவன் பொண்டாட்டி பாவம்ல' என்றான். அந்த இளம் மனைவி, 'பீடா" கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். கொடுமைடா.
பிறகு, அவர் செல்போனில் சிக்னல் கிடைக்காமல் போராடிக்கொண்டி ருந்ததை பார்த்து, 'இதுல பேசுங்க சார்' என்று நண்பனின் போனை கொடுத்தேன். அவன் எரித்துவிடுவது போல பார்த்ததை, நான் பார்க்கவில்லை.
பேசிவிட்டு வேனி்ல் ஏறினோம். எங்களுக்கு பின் சீட்டில் பாண்டே. அடுத்து, மலேசிய உலோகத்தில் (இதுக்கு ஏதோ பேர் சொன்னாங்களே...pewter: தகவல் உதவி, அண்ணன் TBCD )செய்யப்பட்ட டம்ளர், கூஜா உள்ளிட்ட மினி பாத்திரக்கடை.
ஒருவர், இதை பிடிங்க என்று ஒரு டம்பள்ரை கொடுத்தார். கனமான டம்ளர். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, 'இப்ப குளிருதா பாருங்க" என்றார். அட ஆமா, டம்ளர் ஜில். இதுதான் இதோட ஸ்பெஷல் என்றார். நண்பன் ஆர்வமாக, சரக்கடிக்கும் போது மிச்ச சரக்கை ஊத்தி வைக்க நல்ல பாத்திரம் என்று சொல்லிக்கொண்டே ரேட் கேட்டான். தம்மாண்டு டம்ளருக்கு 250 ரிங்கெட். இந்திய ரூபாய்க்கு மனசுக்குள் கூட்டி கழித்தால் கிட்டத்தட்ட 3250 ரூபாய். கெதக் என்றது நண்பனுக்கு.
நாளைக்கு சொல்றேன்.
12 comments:
Pewter...?
ஆமா பாஸு. அதுதான்.
நான் மலேசிய மண்ணில் பிறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழன். தங்களின் மலேசிய வருகைக்கு நன்றி. உங்கள் குறிப்புகள் மலேசியா ஏதோ க்ரைம் நிறைந்த ஊர் போல காட்டுகின்றது. உண்மையில் மலேசிய சுற்றுலாக்கு தகுந்த நாடு. பயப்படாமல் வருகை தரலாம். www.allmalaysia.info என்ற அகப்பக்கத்திற்கு செல்லுங்கள். நன்றி
//மலேசியா ஏதோ க்ரைம் நிறைந்த ஊர் போல காட்டுகின்றது//
நண்பரே நான் அப்படி சொல்லலை. உங்க ஊர் டிரைவர்தான் சொன்னார். மூன்று ஆறு சங்கமிக்கிற இடம் இருக்கே. அங்க அலையக்கூடாதாம். ஹோட்டல் கிராண்ட் காண்டினெண்டலுக்கு வலது புறம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.
உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
சிங்கை வரும் திட்டம் உள்ளதா நண்பரே ? இருந்தால் மடலில் தெரிவிக்கவும்
அப்பாவி சார், மே மாத ட்ரிப்பில் இருக்கிறது. கிளம்பு முன் உங்களை தொடர்பு கொள்கிறேன்.
நன்றி.
நாளைக்கு சொல்றேன். //
சரீஈ :)
:)) தொடருங்க, தொடருங்க விரு விருப்பா இருக்குவோய்...
nandri theka sir.
அப்பிடி போடு அருவாள...மலேசியா சூறாவளிப் பயணம் முடித்து ஊர் திரும்பிய அண்ணன் ஆடுமாடு....வாழ்க
அமிர்தவர்ஷினி அம்மா, நன்றி.
டுபுக்கு அண்ணன் அவர்களே வருக வருக!
நன்றி
Post a Comment