அதிகாலை பிளைட் என்பதால், முதல் நாள் இரவில் இருந்தே தூங்கவில்லை. லக்கேஜ் ஹேண்ட்பேக் மட்டும். நான்கைந்து துணிகளும் ஏழெட்டு புத்தகங் களும். (புத்தகம் நண்பருக்கு) காலையில் இரண்டு மணிக்கு வருவதாகச் சொன்ன, டிராவல்ஸ் கார், இரண்டரை மணி வரை வரவில்லை. சத்தம் போடாமல் ரோட்டுக்கு வந்தால், அனாதையாக ஆட்டோவை நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். உசுப்பி, ஏர்போர்ட் என்றதும் 'ஏறுங்க' என்றார். மழை கொட்டத் தொடங்க, ஆட்டோ மெதுவாகச் சென்றது. ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷன் தாண்டியதும் வேகமாக வந்த ஒரு கார் தண்ணீரில் சீறிப்பாய, நானும் ஆட்டோ டிரைவரும் முழுவதுமாக நனைந்திருந்தோம்.
'டேய், ...த்தா. பரதேசி எப்படி போறாம் பாரு சார்' என்றவர் ஆட்டோவை நிறுத்தி என்னைப் பார்த்தார். 'சார். வேற சட்டை எதுனா இருந்தா மாட்டிக்க சார்' என்றார். 'இல்லங்க. காஞ்சுரும்' என்று சொல்லிவிட்டு கர்சிப்பால் துடைத் துக்கொண்டேன். 'இப்படியே எப்டி சார் பிளைட்ல போயி உட்காருவே' என்ற வரிடம், 'பிளைட்டுக்குள்ள ஏற இன்னும் மூணு மணி நேரம் இருக்கு, அதுக் குள்ள காஞ்சிரும்' என்றேன்.
விமான நிலையத்தில் இறக்கியதும் 'இப்படி நனைச்சுட்டானே சார், பண்ணாட' என்று மீண்டும் வருத்தப்பட்ட அவரிடம், 'பரவாயில்லங்க' என்று சொல் லிவிட்டு உள்ளே வந்தேன். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு இமிக் கிரேஷனில் மட்டும், தண்டனை மாதிரி முக்கால் மணி நேரம் வெயிட்டிங். கால், வலிக்க வலிக்கக் காத்திருந்தோம். பின்னால் இருந்தவர், 'பாதி சீட்டு காலியா இருக்கு. இதுக்குத்தான் நம்மள சீக்கிரம் வரச் சொல்றாங்க' என்று அவர் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு எல்லாம் முடிந்து துபாய் விமானத்தில் போய் உட்கார்ந்ததும், வந்தது தூக்கம்.
இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் போனபோது, இருந்த உற்சாகம் இப் போது இல்லை. காரணம், பிளைட். அப்போது எமிரேட்ஸ் பிசினஸ் கிளாஸ். இப்போது ஒரு டவுண் பஸ்.
போனமுறை, துபாயில் பிளாக் நண்பர்கள் ஆசிப் அண்ணாச்சி, குசும்பன் குசும்பு, சென்ஷி ஆகியோரை சந்தித்திருந்தேன். ஆசிப் அண்ணாச்சிதான் தனது காரில் துபாயை முழுவதுமாகச் சுற்றிக்காண்பித்துவிட்டு, 'போட்டோ எடுத்துக்கோங்க. நீங்க இங்க வந்ததற்கான அடையாளம் இதுதான்' என்றார். எடுத்துக்கொண்டேன்.
நன்றாகத் தூங்கிவிட்டு திடீரென விழிப்பு வந்தபோது பிளைட், துபாய் ஏர் போர்ட்டில் இறங்க, இடம் கிடைக்காமல் சுற்றிக்கொண்டிருந்தது. ஜன்ன லைப் பார்த்துவிட்டு திரும்பி எனது வலதுபக்கத்தைப் பார்த்தால், வெள்ளை சட்டை, பாதி மஞ்சளாக இருந்தது. ஆலந்தூர் சகதி! எனக்கு அவமானமாக இருந்தது. கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்தால், அதுவும் ஒரு டிசைன் போலதான் இருக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு இறங்கினேன். வெளியே, கையில் போர்டோடு காத்திருந்தார்கள். காரில் ஏறி, கிரீக், ஹெல்த்கேர் சிட்டி யில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டல். டிரைவர் நாங்குநேரிக்காரர். நிறைய பேசிக்கொண்டே வந்தார். 'எங்க போனும்னாலும் என்னைய கூப்பிடுங்க' என்று நம்பர் தந்தார்.
லுக்கே பிரமாண்டமாக இருந்தது ஓட்டல். கட்டி ஆறுமாசம்தான் ஆச்சு என்றார்கள். செக் இன் முடிந்து போனால் அவ்வளவு பெரிய அறை. ஜன்னலில் இருந்த ஸ்கிரீனை விலக்கிப் பார்த்ததும் தலைச் சுற்றியது. அது பதினெட் டாவது மாடி. எனக்கு உயரம் ஆகாது. ஏற்கனவே மலேசிய டவரில் ஏறி, தலைசுற்றி நண்பர்கள் உதவியுடன் உடனடியாக தரைக்குத் திரும்பி யிருக் கிறேன். படாரென ஸ்கிரீனை மூடிவிட்டு பெட்டுக்கு வந்தேன். இனி அந்த ஓரத்துக்குப் போகவே கூடாது.
குளித்து முடித்து லஞ்சுக்கு கீழே இறங்கினால், ஓட்டல் ஊழியர்கள் சிலர் வரிசையாக நின்று ஒருவருடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். எட்டிப்பார்த்தேன். அவர் நடிகர், பால கிருஷ்ணா. சமீபத்தில்தான் அவர் நடித்த 'லெஜண்ட்' படத்தைப் பார்த்தி ருந்தேன். இதிலும் இன்னும் சில படங்களிலும் அவரது ஆக்ஷன் அவதாரத் தைப் பார்த்திருந்ததால் சிரிப்பு வந்தது. ஆனால் அவருடன் போட்டோ எடுக்க போட்டிப்போட்டுக்கொண்டிருந்தார்கள் தெலுங்கு தேசத்துக்காரர்கள். ஒவ் வொரு ரசிகருடனும் ஜாலியாக சிரித்துப் பேசி, ஊர் விவரம் கேட்டு, வேலை விவரம் கேட்டு, அவர் கொடுத்த போஸ் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ரசிகரை அவர் மதிக்கும் பாங்கு எனக்குப் பிடித்திருந்தது. அவர் எல்லாருடனும் கை கொடுத்துவிட்டு எனது அருகில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்.
பாலகிருஷ்ணாகாரு
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'நான் நல்லா தமிழ் பேசுவேன். சென்னையிலதான் பிறந்து வளர்ந்தேன்' என்று ஒரு குழந்தையை போல பேச ஆரம்பித்தார். சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கும் அவருடன் போட்டோ எடுக் கத் தோன்றியது. எடுத்தேன். நம்மூர் ஹீரோக்களைத்தான் இங்கேயே பார்க் கிறோமே.
ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால் ஆசிப் அண்ணாச்சி போன் செய்திருந் தார், இரண்டு நாள் கழித்து சந்திப்பதாக. குசும்பன் போட்டோஷூட்டில் பிசி. நண்பர் யாஷின் அறைக்கு வந்திருந்தார். அவரிடம் போனில் பேசியிருக்கி றேன். நேரடியாகப் பார்த்ததும் அவரது உயரமும் ஆளும் ஹீரோ போலவே இருந்தார். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு அவர் சென்றதும் நான் ஊர்ச் சுற்ற நினைத்தேன். ஓட்டல் வாசலுக்கு வந்தால் வெயில் வறுத்து எடுத்தது. 'வழக்கத்தை விட வெயில் இப்போ அதிகம்' என்றார்கள். வியர்வை சொட்டச் சொட்ட நடந்தேன்.
யாஷினுடன் அரேபிய ஓட்டல் வாசலில்
மறுநாள் விருது விழா. இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை விழா நடந்ததால் முதல்நாள் தூக்கம் போச்சு. மறுநாளும் அதே நிலைமை. அதற்கடுத்த நாள் இரவு, பதினோறு மணிக்கு பிளைட். ஆனால், பகல் 12 மணிக்கே, செக்-அவுட்.
ஆசிப் அண்ணாச்சி வந்திருந்தார். அவருக்கு புத்தகங்களைக் கொடுத்துவிட்டு நிறைய பேசிக்கொண்டிருந்தோம். 'துபாயில் ஒரு அறிவுமதி' என்று ஆசிப் அண்ணாச்சியை பற்றி சொல்லியிருக்கிறார்கள். அவர் துபாய் வரும்போது இருந்த நிலைமை, அதற்கு முன்னால் எப்படி வேலை பார்த்தார்கள் என்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். ஓட்டலில் வைத்திருந்த ஹெர்பல் டீத்தூள் அருமையாக இருந்தது. கேட்டு வாங்கி டீயாகக் குடித்துக் கொண் டிருந்தேன். மறுநாள் ஆசிப் அண்ணாச்சி வீட்டுக்கு செல்ல நினைத்திருந்தேன். முடியவில்லை.
12 மணிக்கு செக் -அவுட் முடிந்து வெளியே வந்தேன். என்னுடன் வந்திருந்த நடிகர், நடிகைகள் வெளியே சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலரு க்கு மூணு மணி பிளைட். சாவியை கொடுத்துவிட்டு வேகமாக வெளியே சென்றுகொண்டிருந்த ஒரு நடிகரை, ஓட்டல், பிரண்ட்டெஸ்க் பெண், ஹலோ ஹலோ என்று அழைத்துக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு திரும்பிய நடிகரி டம், 'அயர்ன் பண்ணினதுக்காக, 75 திர்ஹாம் கொடுங்க' என்றார். 'அது ஃப்ரி இல் லையா?' என்று முணங்கிய நடிகர் எடுத்துக்கொடுத்துவிட்டு, 'என்னடா இது அநியாயமா இருக்கு' என்று சொல்லியபடியே நடந்தார். அந்த நடிகர் மனோ பாலா.
'ரெண்டு சட்டை பேண்டை அயர்ன் பண்ண, 1320 ரூபா கொடுத்த ஓரே ஆளு இவர்தாம்பா' என்று கிண்டலடித்தார் பக்கத்தில் நின்ற இன்னொரு நடிகர்.
யாஷின் மத்தியான சாப்பாட்டுக்கு ஓர் அரேபிய ஓட்டலுக்கு அழைத்துச் செல் வதாகச் சொன்னார். போனோம். அதிகமாக பாகிஸ்தானியர்கள்தான் இருந்தா ர்கள். இரண்டு, மண்டி ஆர்டர் செய்தார். அதைப்பற்றி கேள்விப் பட்டிருந்தா லும் இப்போதுதான் ருசித்தேன். அருமையாக இருந்தது. கையில் எண் ணெய் பிசிறில்லாத பிரியாணி மாதிரி. சுட்ட கோழிக்கறியின் வாசனையும் ருசியும் இன்னும் எச்சில் ஊறுகிறது.
சாப்பிட்டு முடித்துவிட்டு சார்ஜாவில், யாஷின் வீட்டில் குட்டித்தூக்கம். புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. மாலையில் ஏர்போர்ட் போகும் வழியில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார் யாஷின். வகைவகையான பேரீச்சம் பழங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. அது ஈரானியர் ஒருவரின் கடை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஈரானிக்காரர் அழகாகத் தமிழ்ப் பேசுகிறார். கடையின் வெளியே தமிழிலேயே எழுதியும் வைத்திருக்கிறார்.
எப்படி?
'என் கஸ்டமர் எல்லாரும் தமிழர்கள்தான். 25 வருஷமா இங்கதான் இருக் கேன். அப்படியே தமிழ்க் கத்துக்கிட்டேன்' என்று கேஷுவலாக சிரிக்கிறார் அந்த ஈரானியர். ஈரானிய தமிழன்.
ஏர்போர்ட்டில் டிராப் பண்ணினார்கள். துபாய்க்கு செல்ல முத்தம் கொடுத்து விட்டு, உள்ளே சென்றேன். எல்லாம் முடிந்து, கேட் நம்பருக்கு போகும் வழியில் நண்பர் ஒருவர் உயரமான சேரில் அமர்ந்து பீர் குடித்துக் கொண் டிருந்தார். ஒரு வாரமாக எதையும் குடிக்காத்தால் நானும் அவருடன் உட்கார் ந்தேன். நாளை ஊருக்குப் போய்விடுவோம் என்ற கடுப்பிலேயே இன்னும் இரண்டு பீர் பாட்டிலை ஆர்டர் செய்தேன்.
5 comments:
அழகான படங்களுடன் அருமையான பயணக்கட்டுரை.
வீட்டில் புறப்பட்டது முதல் திரும்பியது வரை விவரித்திருந்த விதம் உங்களுடன் கூடவே பயணித்தது போல் இருந்தது. இரவுத் தூக்கம் கெட்டுப் போனாலும் இனிக்கும் பயணம் தான்.
90கள் வரை சென்னையே தெலுங்கு திரையுலக தலைநகரமாக இருந்ததால் பெரும்பான்மையான நடிகர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்ததாகவும், தற்போதைய முன்னணி நடிகர்கள் அனைவரும் சென்னையில் படித்து வளர்ந்தவர்கள் என்றும் சரளமாக தமிழ் பேசுவார்கள் என்றும் படித்திருக்கிறேன்.
வளைகுடா நாடுகளின் வெயிலுக்கு பயந்துதான் பத்து வருஷமாக அந்தப் பக்கம் போகவில்லை.
ஈரானித் தமிழர் கூட போட்டோ எடுக்கலையா அண்ணாச்சி....
பயணங்களும், பகிர்வுகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
Super narration
'ஈரானித் தமிழர் கூட போட்டோ எடுக்கலையா'
அவர் கடையில் பிசி. எனக்கு அந்த யோசனையே வரல அண்ணாச்சி.
.............
நன்றி கலாபன்.
Nalla pathivu. ......
நாகப்பன் உங்களை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. சேர்த்துவிடுகிறேன்
Post a Comment