Saturday, May 17, 2014

பெருமாள் முருகனின் பூக்குழி

வாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது என ஒவ்வொரு நிகழ்வும் அனுபவம்தான். இப்படிப் பார்த் தால் யாரிடமோ தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டு செல்வது போல வாழ்க்கை எனக்குத் தெரிகிறது. அந்த யாரோவை கடவுள் என்று எடுத்துக் கொண்டால் அவரிடம் தனது வாழ்க்கையை தினமும் சொல்லிச் செல்வது போல நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். எனக்கு இப்படி என்றால் உங்களுக்கு அப்படி. காலம் செய்து வைத் திருக்கிற வாழ்க்கை, அப்படியையும் இப்படியையும் சேர்த்ததுதான்.


நான் மரத்தடியின் கீழ் நின்று அல்லது வயல்வரப்புகளில் காதல் வளர்த்தேன் என்றால் மற்றவருக்கு வேறொரு விதமாக அனுபவங்கள் இருக்கும். 'உங்களுக்கு அப்படியா? எனக்கும் அப்படித்தான்' என்று சிலருக்கு  ஒத்து ப்போவதும் உண்டு, பெருமாள் முருகனின் 'பூக்குழி'யை போல. இப்படியொரு கதையை எங்கும் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். செல்போனும் சிம்மும் போல காதலும் சாதிப் பிரச்னையும் பின்னிப் பிணைந்ததுதான். பிரச்னை இல்லாத காதல்கள் குறைவு. காதல் இருக்கும் வரை சாதி பிரச்னைகளும் கவுர வங்களும் கூடவே இருக்கும் போலிருக்கிறது.

சிறு டவுணில் சோடா கடையில் வேலைபார்க்கும் கிராமத்து இளைஞன் குமரேசனுக்கு, பக்கத்தில் வசிக்கும் சரோஜா மீது காதல் வருகிறது. அவளை தனக்குள் ரசிக்கும் அவன் தயங்கி தயங்கி காதலிக்கத் தொடங்குகிறான். சாதி யையும் உறவையும் பெரிதாகக் கருதும் பாறைகளைக் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவன் அவன். ஒரு கட்டத்தில் காதலின் அடுத்தக்கட்டமாக, அவளைத் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு வருகிறான். 'ரெண்டு மூணு நாள் அம்மா திட்டுவா. பிறகு சரியாகிரும்' என்கிற அவன் கணிப்புத் தவிடுபொடியாகிறது. கற்பனையையும் கனவுகளையும் சேமித்து வைத்துக்கொண்டு காதலித்தவ னின் கை பிடித்தவள், மொத்தமாக நொறுங்கிப் போகிறாள். 

பக்கத்து ஊரில் ஒரு சோடா கடையை ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கைச் சீராகிவிடும் என்று பணத்துக்கு அலைகிறான். குடிக்க ஆரம்பிக்கிறான். ஊரில் அவனது அம்மாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அந்த இளம் பெண், இரவில் இவனுடன் படுத்துக்கொண்டு, 'தான் அவசரப்பட்டு வந்து விட்டோமோ?' என்று கலங்குகிறாள். கர்ப்பமாகிறாள். சொந்தங்களும் அவர்களை கைவிட்ட நிலை யில் அவன் என்ன செய்கிறான் என்று செல்கிறது கதை. 

'இது கருத்து ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை. வாழ்வனுபவம் ஒன்றை விவரித்துச் சொல்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முந்தைய காலம். அதற் கேற்ற களம். அப்போதைய மனோபாவங்கள். களமும் காலமும் மாற்றங் களைப் பெற்றிருக்கலாம். ஆனால், மனோபாவங்களில் பெரும் மாறுதல் ஏற்படவில்லை எனும் வருத்தத்தோடே இந்நாவலை வாசகர் முன் வைக்கி றேன்' என்கிறார் பெருமாள் முருகன். 

உண்மைதான். அறிவார்ந்த சமூகம் இன்னும் சாதி தாண்டிச் செல்லவில்லை. வெளியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் சாதி அடையாள த்தோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

குமரேசனும் சரோஜாவும் திருமணம் முடித்து அவளை அவனது ஊருக்கு அழைத்துச் செல்வதாகக் கதை ஆரம்பிக்கிறது. அதாவது ஓடிப்போய் திரு மணம் செய்தவள் என்கிற பட்டத்தோடு வருகிறாள் சரோஜா. அந்தப் பட்டம் கொடுக்கும் ஏச்சையும் பேச்சையும் அவமானத்தையும் அறியாதவளாகப் பெருங்கனவுகளைச் சுமந்து வருகிறாள் அவள். ஊரில் நிகழப்போகும் ஏதும் அறியதாவளாக குமரேசன் என்கிறவனை நம்பி வருகிறாள். அவள் உடைந்து போகும்போதெல்லாம் நம்பிக்கையை விதைக்கிறான். அவனிடம் பிடித்த விஷயமாகவும் அது இருக்கிறது.

ஆர்வத்தோடு நாவலை வாசிக்கத் தொடங்கியதும் வெயிலின் அனலடிக்கும் பாறைகளின் சூடும், வறண்ட காடுகளின் வெப்பக் காற்றும் முகத்தில் வீசத் தொடங்குகிறது. வர்ணனைகளாகச் செல்லும் கதையின் வழி நாமும் பயணத் தைத் தொடங்குகிறோம். பெருமாள் முருகன் இதில் காட்டும் இடம் பலருக்கு ஏற்புடைய ஊர் அல்ல. நகரத்தின் சிறு பொந்தில் குளிர்சாதனப் பெட்டியின் சுக த்துக்குள் வாழப்பழகியவர்களுக்கு குமரேசனின் ஊரை நினைத்தாலே, வியர் வைக் கொட்டும். கக்கத்திலும் முதுகிலும் வியர்வையின் பிசு பிசுப்பை அரிக்கத் தொடங்கிவிடும். 

சரோஜாவுக்கும் அப்படித்தான். லைன் வீடுகளில் வாழ்ந்தவளுக்குப் பாறை மீதிருக்கும் வெப்ப குடிசையின் மேல் பிடித்தம் ஏதும் இல்லை. ஆனால் வாழ்க்கை நாம் தீர்மானிப்பதாக இருப்பதில்லை. அதன் போக்குக்கு ஆட் படுவதே வாழ்க்கையாகிறது. அதனடிப்படையில் அவளும் காதலெனும் பெ ரும் நம்பிக்கையின் வழி வாழப் பழகுகிறாள். அவனில்லா நேரம் அவளுக்கு இருக்க முடியவில்லை. மாமியாரின் திட்டும் ஊர்க்காரர்களின் ஏளனமும் அவளை குடிசைக்குள் அடைத்து வைத்து விடுகின்றன. புதுப்பெண்ணாகத் தன்னை அலங்கரித்து செல்வதற்கு கூட மாமியார் விடுவதில்லை. 

 'கூத்தாடப் போறவளாட்டம் சிங்காரிச்சுட்டு உக்கார்ந்திருந்தா, குடியானவச்சி என்னைக்காச்சும் இப்படி சிங்காரிப்பாளா. அதான் நம்புளுக்கு இது ஆவுமான்னு ஒரு சத்தம் போட்டன். அதுக்கு அழுதுகிட்டு ஓடி உள்ள படுத்துக் கெடக்கறா. வெளக்குக் கூடப் பத்த வெக்கல. இப்படி இருந்தா ஊடு வெள ங்கீரும் போ. செவப்பு தோல பாத்து பிதுமாரு கெட்டுப் போயி இந்த கெர வத்தை கொண்டாந்து வெச்சிருக்கிறயே, எங்காச்சும் தல முழுவி இந்தக் கெர வத்தத் தொலச்சாத்தான் உருப்படுவ. இல்லீனா அள்ளித்தூத்துன பொட் டாட் டம் எல்லாம் போயிரும்' என்கிற மாமியாரின் வார்த்தைகள் உயிரைக் குத்தி எடுப்பவை. அதை பெண் வழி நின்று பார்த்தால் மட்டுமே அதன் சூட் டையும் வலியையும் இன்னும் உணரமுடியும். மாமியாரைப் பொறுத்தவரை அவளுக் கென்று இருந்த கனவை மகனும் இவளும் உடைத்துவிட்டார்களே என்கிற ஆதங்கம் நினைத்து நினைத்து பெருக்கெடுக்கிறது. அப்படி பெருக்கெடுக்கும் போதெல்லாம் அவள் சரோஜாவை இப்படித் திட்டத் தொடங்குகிறாள்.

'பூக்குழி' காதலை அடுத்த யதார்த்த வாழ்க்கைப் பிரச்னையை பேசியிருந் தாலும் காதலித்து ஓடிவந்தளின் மனநிலையை அவளது ஆசையை, கனவை, வேதனையை, தவிப்பை, அப்படியே பிரதிபலித்திருக்கிற விஷயத்தை இதில் முக்கியமானதாகப் பார்க்கிறேன். நாவல் சொல்லும் காதலையும் அதைத் தொடர்ந்த சாதி பிரச்னைகளையும் கொண்டு பல கதைகள் வந்திருந்தாலும் பெருமாள் முருகனின் எளிமையான நடையிலும் அழகான வர்ணனையிலும் தனித்துவம் பெறுகிறது இந்நாவல்.  


3 comments:

எஸ்காமராஜ் said...

இது பெரும் கொடுப்பினை.இந்த இணையம், பிடித்தவர்களுக்கு பிடிக்கும் எழுத்துக்கள் தேடச்சொல்கிறது.உங்கள் விமர்சனம் அழகாக இருக்கு தோழா

ஆடுமாடு said...


நன்றி தோழர்.

Rathnavel Natarajan said...

அருமை. இப்போது தான் படித்து முடித்தேன். மிகவும் நெகிழ வைக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு egnath raj