Tuesday, September 9, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி -5

ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை குல தெய்வ கோயில்ல கொடை நடக்கும். பூவங்குறிச்சி கொளத்து பக்கத்துல இருக்குத பூதத்தாருதான் இவ்வோ குலசாமி. பூழா வீட்டுக்காரன், எசக்கி, கருத்தப்பிள்ளையூர்ல துணி வெளுக்குத மாடன், அவங்க சொக்காரங்க, இன்னும் ரெண்டு துணி வெளுக்குத குடும்பம் சேர்ந்து இதுக்கு கொடை கொடுப்பாவோ. கோயிலுக்குன்னு கொட்டகைன்னு எதுவும் கெடயாது. கொளத்துக்கு எதுர்ல இருக்குத ரயில் பாதை பக்கத்துல சின்ன ஓடை இருக்கு. அதுக்கு வலப்புறத்துல கொஞ்சம் மண்ணுக்குள்ள புதைஞ்சு இருக்குத கருப்பு கல்லுதான் சாமி. அது சாமிங்கதுக்கு அடையாளமா பக்கத்துல இருக்குத மரத்துல ஒரு பாதி காவிவேட்டியை கெட்டிருப்பாவோ. ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை கொட கொடுக்கும்போதுதான் இப்படி கட்டுவாவோங்கதால, அது கொஞ்ச நாள்லயே காணாம போயிரும்.

கொடை நேரத்துல சொந்தக்காரவோ கூட்டம் ரொம்ப வரும் பூழா வீட்டுக்கு. அந்த நாளுவோள்ல கழுத்துல தங்க சங்கிலி, டோலாக்கு அது இதுன்னு போட்டுகிட்டு மினுக்குவா பூழா. ஊர்ல உள்ள பொம்பளைவோ எல்லாம் அப்ப பூழாவ பாத்தா கேக்குத கேள்வி இதுதான்.
''ஏட்டி ரெண்டு புள்ளை பெத்தது போதும். நீ இப்படி மினுக்குனுன்னா, உன் வீட்டுக்காரன் இன்னொரு புள்ளைக்கு வழி பண்ணிருவாம்"
'போங்கத்தா... உங்களுக்கு இதே எடக்கா போச்சு"ம்பா பூழா. பொம்பளைலுவோ சிரிப்பாவோ.

காலமும் கண்ணு மண்ணு தெரியாம போனதுல, இப்ப வயசாயி போச்சு பூழாவுக்கு. சொன்னா நம்ப மாட்டியோ. அவ மவன் இப்ப கொயித்துல இருக்காம். என்ன வேலை செய்தாம்னெல்லாம் தெரியாது. மாசமானா வீட்டுக்கு ரூவா வந்துருது. யாராவது கடன் வாங்கணும்னா இவாகிட்டதான் கேக்காவோ. பூழா வீட்டுக்காரன் தலையில கொண்டைய போட்டுக்கிட்டு சாமியாரா அலையுதான். மவங்காரன் இனும ஒண்ணும் துணி வெளுக்க போவாண்டாம். வீட்டுல சும்மா இரு, நாந்தாம் ரூவா அனுப்புதம்லாங்கான். ஆனா, பூழாவுக்கு கேக்கலை. வய்சாகி, கண்ணு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தாலும் இன்னும் அழுக்கு துணி வாங்க வந்திட்டிருக்கா.
முற்றும்

11 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாத்தான் முடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.

Unknown said...

This is my second visit for your site . But i wonder how accurately you are narratting the life of washermen people of nellai dist . It displayes the pattern of nellai village life without loosing a single minute of it's essence.

Thanks for providing a touhable reading
SUBRAMANIAN.K
Pondicherry Nellaite

Anonymous said...

Really I liked the way you narrated and the Poozathi char..People are still alive like that..
ithe polla inum nerya ezthunga! vazthukal!!!

ஆடுமாடு said...

நன்றி கிருத்திகா.

ஆடுமாடு said...

சுப்ரமணியன்ஜி, ரொம்ப நிறைவா இருக்கு உங்க பின்னூட்டம்.

ஆனா, இன்னும் நிறைய இதுல எழுதலை. அந்த மக்களின் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கிறது. அவசரம் கருதி சீக்கிரமே முடித்துவிட்டேன்.

நன்றி.

ஆடுமாடு said...

//ithe polla inum nerya ezthunga//

கண்டிப்பாங்க. நன்றி

Wandering Dervish said...

நண்பரே ,
ரொம்ப நாளைக்கு அப்பொறம் மண் வாசம் கொண்ட எழுத்துகள படிக்கிறேன்
அருமையான நடை.. கரிசல் கிராமங்களின் ,தெய்வங்கள் முதற்கொண்டு ஆடு மாடுகள், வரை சிறு சிறு யதார்த்தங்களில் தான் வாழ்வு நகர்கிறது.
அந்த யதார்த்தங்கள் உங்கள் எழுத்துக்களில்.

ஆடுமாடு said...

நாடோடி அண்ணேன் நன்றி.

அடுத்தாப்ல சுப்ரமணியபுரம் சசி நடிக்கிற படத்துககு உங்க பேரைதான் வச்சிருக்காங்க. (நாடோடிகள்).

M.Rishan Shareef said...

பூழாத்தியை முழுவதுமாக வாசித்துமுடித்துவிட்டுப் பின்னூட்டமிடுகிறேன். இது போல எத்தனையோ பூழாத்திகள் ஊருக்கொவ்வொருவராக இருப்பார்கள்.
வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி நண்பரே!
இன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இன்னும் பூழாத்தி துணி சேகரிக்கச் செல்வதுதான் மனதில் இடறுகிறது. :(

ஆடுமாடு said...

நன்றி ரிஷான்.

//இன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இன்னும் பூழாத்தி துணி சேகரிக்கச் செல்வதுதான் மனதில் இடறுகிறது//

வருடக்கணக்காக பழகிய வேலையை எளிதில் விட்டுவிட முடியாதே.

ஹேமா said...

வணக்கம் ஆடுமாடு.பலநாட்களுக்குப் பிறகு இன்றுதான் உங்கள் யதார்த்தக் கதை படிக்கக் கிடைத்தது.முற்றும் போட்டுவிட்டீர்களே!வாழ்த்துக்கள்.
இன்னும் ஏதாவது இயல்பாய் எழுதுங்கள்.