Thursday, July 10, 2008

பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும்

சமீப காலமாகவே ஒரு கையில் அரிவாளுடனும் மறுகையில் கோணிப்பையுடனும் பைத்தியகாரன் என் நிழல் தொடர்ந்து வந்ததன் காரணத்தை புரிந்துகொண்டேன். அரிவாளுக்கு கீழே என் தலையை வைத்ததற்கு வாழ்த்துகள் (எனக்கும் நேரம் வராமலயா போயிரும்).

பைத்தியகாரனின் கேள்விகளுக்கான பதில்கள்:


1. தொடர்ந்து வட்டார வழக்கிலேயே எழுதி வருகிறீர்களே... வட்டார வழக்கு இலக்கியமாகுமா? ஆகும் என்றால் எப்படி? உலக இலக்கியங்களில் அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?

!. மனித வாழ்க்கையை திறம்பட பேசுகிற எல்லாமே சிறந்த இலக்கியம்தான். அதில் வட்டார வழக்குக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஏனென்றால் அது மக்களின் மொழி. குறிப்பிட்ட வட்டார மனிதர்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, கொண்டாட்டங்களை சொல்லும் இலக்கியம்தான் பண்பாட்டை பேசும் இலக்கியம். நமது மண்ணின், பண்பாட்டின், கலாசாரத்தின் ஆழமான வேர் அது. ஆதி மனிதன் சைகையிலிருந்து பேச்சுக்கு மாறினான். பேச்சு எழுத்தானது. பரந்து விரிந்த அந்த எழுத்து, நவீனமான பிறகு, ஆதி வழக்கு ஆவணமாகிறது.

‘காலணாக்கு பெறாத பய
என்ன கேள்வி கேக்காம் பாரு’ & காலணா என்கிற துட்டு புழக்கத்தில் இருந்த விஷயம் இங்கே வெளியே வருகிறது.

‘நாசமத்து போறவன’& என்கிற வசவு சொல், (நாசம் + அற்று + போதல்) வாழ்த்தை குறிக்கிறது. இது தமிழின் வேரிலிருந்து/வட்டாரத்திலிருந்து வருகிற வார்த்தை.

மக்கள் பேசுகின்ற/புழங்குகின்ற வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கையை காட்டுவது இலக்கியம் இல்லாமல் என்ன? இப்படியான வட்டார வழக்கை ஒதுக்கி விட முடியாது.

நமது மகாபாரதமும், ராமாயணமும் வட்டார வழக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்கிறார்கள். முகமது நபியின் போதனைகளும், பைபிளும் வாய்மொழி இலக்கியத்திலிருந்து வந்தவைதானாம்.
உலகம் முழுவதும் வட்டார வழக்கு இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்களது வட்டார வழக்குதான். அந்த ஆங்கிலத்திற்கும் அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களின் இலக்கியம் வட்டார இலக்கியம். ஒரே ஒரு உதாரணம்: நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசனின் நாவல்கள் அனைத்தும் வட்டார இலக்கிய வகையை சேர்ந்தது. ரஷ்யாவின் தாஸ்தாவோஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி உட்பட அங்கிருந்து வந்த அனைத்து நாவல்களுமே வட்டார வழக்கிலிருந்து வந்தவை என்றே சொல்லப்படுகிறது.

2. சினிமாவில் முதன்முதலில் நீங்கள் எழுதிய பாடல் எது? நயன்தாராவை புகழ்ந்து கதாநாயகன் பாடுவது போல் உங்களை பாடல் எழுதச் சொன்னால் என்ன எழுதுவீர்கள்?

முதல் பாடல் எழுதிய திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இரண்டாவதாக எழுதியது மெட்டிஒலி டி.வி. தொடருக்கு.

நயன்தாராவை புகழ்ந்து எழுதினால் இப்போதிருக்கிற காதல் சண்டையில் (சிம்புவா? விஷாலா) என் டவுசரும் கிழியலாம். அதனால் இதிலிருந்து எஸ்...

பொதுவாக யாராவது
ஒரு கதாநாயகிக்கான பல்லவி:

நீ ராட்சஷ தேவியடி
என் ரகசிய போதையடி
ஒரு தேள் கடிச்சு
சிறு மீன் துடிக்கும்
ராத்திரி அவஸ்தையடி
(ரொம்ப முக்கியம்யா)

பின்நவீன சூழலை, அது சார்ந்த உரையாடலை வட்டார மொழியில் விளக்குங்கள்

'ஏட்டி நீயும் வெறவு பெறக்க வாரியா? ரெண்டு பேருக்கும் 25, 25 கொடுத்தாம்னா ஒரு நா வெறவு பெறக்க போவாம இருக்கலாம்’’

‘செரி வாரேன். ஆனா, வீட்டுக்கு வந்ததும் நீருதான் சோறு பொங்கணும்’

‘செரி’

ரெண்டு பேரும் வெறவுக்கு போனாவோ. சாயந்தரமா வெறவ வித்துட்டு கூலி வாங்குனாவோ. வாங்கிட்டு அந்த பய நேரா வீட்டுக்கு வரலை. பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தாம்.

வீட்டுக்காரி, அவனை மேலும் கீழும் பார்த்தா. பாத்துட்டு,

‘உனக்கு தெனமும் இதே வேலையா போச்சு. நீ சோறு பொங்கி வைக்க மாட்டேன்னுதான் நானே பொங்கிட்டேன்"

--கதை இவ்வளவுதான். வளரின் வார்த்தையில் பின் நவீனத்துவம் என்பது ஒரு சூழல்.

திருமணமான நீங்கள், சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகியுடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இந்த விஷயம் உங்கள் வீட்டுக்கு தெரியுமா?

இனிமேல் பைத்தியக்காரனுடன் எந்த பாருக்கும் செல்வதில்லை என்றும் போதையில் எதையும் உளற மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.

பி.கு: (பைத்தியக்காரன் ஒழிக)


சுகுணாவுக்கான கேள்விகள்:

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

24 comments:

கே.என்.சிவராமன் said...

எதிர்பார்த்தா மாதிரியே விரிவா, அழகா மேஞ்சிருக்கீங்க ஆடுமாடு :)

ஆனா, சுகுணாவுக்கான கேள்விகள்தான்
சாதாரணமா இருக்கு... அவர நீங்க வம்புல மாட்டிவிட்டிருக்கலாம். கோச்சுக்க மாட்டாரு...

அப்புறம், பாருக்கு போனாலும் நான் குடிக்க மாட்டேன் :) போதைல மத்தவங்க பேசறதை பரிவோட கேட்பேன்னு சொல்லிருக்கீங்க பார்த்தீங்களா... ரொம்ப தேங்க்ஸ்... :)

ஆனா, அந்த மூன்று எழுத்து நடிகை... அதான் கடைசில துணைக்கால் வருமே, அவங்களோட ஈசிஆர் ரோட்ல எத்தனை காபி ஷாப்புக்கு போயிருக்கீங்க... அதுக்காக எவ்வளவு பணம் 'அவங்க' செலவழிச்சிருக்காங்க... எந்த ஹோட்டல்ல தங்கியிருக்கீங்க, தங்கறீங்க... இதெல்லாம் சொல்லியிருக்கலாம்ல :)

ஆனா, என்னைய கொன்னு போட்டாலும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் :)

முரளிகண்ணன் said...

ஆடு பிரியானி ஆகாம தப்பிச்சிருச்சு. சுகுண விலாச சபா களைகட்டட்டும்

ஆடுமாடு said...

//அவர நீங்க வம்புல மாட்டிவிட்டிருக்கலாம்//

விடமாட்டீங்க போலிருக்கே.

//ஆனா, அந்த மூன்று எழுத்து நடிகை... அதான் கடைசில துணைக்கால் வருமே..//

நான் உங்களுக்கு என்னங்க பாவம் செஞ்சேன். என்னையை விட்டுருங்கய்யா...

Anonymous said...

In the following link shows that the lyrics for 'metti Oli' TV seial by Vairamuthu.
Appa neenga vairamuthuvaa?
http://tamil.sify.com/tv/profile.php?id=666023&cid=13154028

ஆடுமாடு said...

அய்யா,

அனானி அதுல ரெண்டு பாட்டு இருக்கு. ஒண்ணு வைரமுத்து. டைட்டில் சாங்.

இன்னொன்னு பேதாஸ். அந்த சோகத்தை நான் எழுதினேன். ஒகே வா?

வளர்மதி said...

அடங்கொய்யால ... நா பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தத நீரு எங்கிட்டிருந்து பாத்தீரு ... பாத்தது பின்நவீனத்துவ சூழல்ல வருமா ... தட்டி மறவால நீரு குடிச்சது சேத்து பின்நவீனத்துவ சூழல்ல வருமா ... சொல்லுவீகளா அப்பு ...

dondu(#11168674346665545885) said...

//இன்னொன்னு பேதாஸ். அந்த சோகத்தை நான் எழுதினேன். ஒகே வா?//
அந்த மனசே மனசேன்னு வருமே அந்தப் பாட்டா? அடுத நாளைக்கு அது வரும் நிலையில் முந்தைய நாள் மெட்டி ஒலி நிகழ்ச்சியில் அதை சிறப்பாகக் குறிப்பிட்டு கட்டாயம் பார்க்குமாறு கூறினார்களே அதுவா?

சூப்பர் பாட்டு. முழு வரிகளையும் இங்கு தர இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அண்ணாச்சி,

பைத்தியக்காரவுகள பிரிச்சு மேஞ்சுபுட்டீக, மேஞ்சு.

// இனிமேல் பைத்தியக்காரனுடன் எந்த பாருக்கும் செல்வதில்லை என்றும் போதையில் எதையும் உளற மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.//

இது தான் ரொம்ப :))

Ayyanar Viswanath said...

ஆஹா க்ளீனா எஸ் ஆயிட்டீங்களே ஜி...:)

ஆடுமாடு said...

//நா பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தத நீரு எங்கிட்டிருந்து பாத்தீரு ... பாத்தது பின்நவீனத்துவ சூழல்ல வருமா ... தட்டி மறவால நீரு குடிச்சது சேத்து பின்நவீனத்துவ சூழல்ல வருமா ... சொல்லுவீகளா அப்பு ...//


வளரு, ஒரு கேள்வி,

ஏ.சி.பார்ல நீங்களும் பைத்தியகாரனும் பெக் போடுறீங்க. போதை உச்சத்துக்கு போய், நீங்க அவரை திட்டுறதும், அவர் யாரையோ திட்டுறதுமா நடக்கு.
போதையில திட்டுறது பின் நவீனத்துவ சூழல்ல வருமா?

ஆடுமாடு said...

//சூப்பர் பாட்டு. முழு வரிகளையும் இங்கு தர இயலுமா?//

டோண்டு அண்ணாச்சி, அதுல 5 கேரக்டர். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பாட்டு. முழுவதையும் எழுத நேரமில்லை.
பல்லவி மட்டும்...

மனசே மனசே துடிக்குது மனசே
மனம் விட்டு பேச துடிக்குது மனசே
மனம் நினைத்த வாழ்க்கை இல்லை-இங்கு கிடைத்த வாழ்வும் தொல்லை
தினம் முட்டி மோதவும்
மூச்சு வாங்கவும்
ஜென்மம் போதவில்லை.
எல்லாம் கனவா?
இல்லை நனவா?
வாழ்க்கை பூவா?
முட்கள் தீவா?

நன்றிங்கோ.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா பதில் சொல்லியிருக்கீங்க ஆடுமாடு.

ஆனா இன்னும் கொஞ்சம் காரமான கேள்விகளைக் கேட்டிருக்கலாம் சுகுணாவை :(

அந்த நடிகை மேட்டர் நாம தனியா பேசிக்குவோம் :)

கே.என்.சிவராமன் said...

//ஏ.சி.பார்ல நீங்களும் பைத்தியகாரனும் பெக் போடுறீங்க.//

மன்னிக்கணும் ஆடுமாடு... நான் குடிப்பதில்லை :( வேடிக்கைதான் பார்ப்பேன்... :)

//போதை உச்சத்துக்கு போய், நீங்க அவரை திட்டுறதும்,//

எங்கண்ணன் எப்பவும் என்னை திட்டமாட்டாரு... போதைல என் கன்னத்துல உம்மாதான் கொடுப்பாரு...

//அவர் யாரையோ திட்டுறதுமா நடக்கு.//

எல்லாருமே பாசக்கார பயலுகதான்... ஆரையும் திட்ட மாட்டேன் :)

//போதையில திட்டுறது பின் நவீனத்துவ சூழல்ல வருமா?//

இதுக்கு என்னைவிட வயசுலயும், படிப்புலயும் மூத்தவரான எங்கண்ணன் :) வளர்தான் பதில் சொல்லணும்... :) :) :)

ஆடுமாடு said...

வெயிலான் நன்றி.

ஆடுமாடு said...

//ஆஹா க்ளீனா எஸ் ஆயிட்டீங்களே ஜி...:)//


அய்யனார், வேற வழி.


நன்றி.

ஆடுமாடு said...

//அந்த நடிகை மேட்டர் நாம தனியா பேசிக்குவோம்//

சுந்தர்ஜி, நீங்களுமா?

ஆடுமாடு said...

//மன்னிக்கணும் ஆடுமாடு... நான் குடிப்பதில்லை :( வேடிக்கைதான் பார்ப்பேன்... :)//

சமீபகாலமா பொய் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க.
வேண்டியவங்க யாரும் ப்ளாக் படிக்கிறாங்களா?

//இதுக்கு என்னைவிட வயசுலயும், படிப்புலயும் மூத்தவரான எங்கண்ணன் :) வளர்தான் பதில் சொல்லணும்... :) :) :)//

இன்னுமா...?

வளர்மதி said...

அடங்கொக்கமக்கா ... ரெண்டு பேரும் கைகோத்துட்டீங்களா!

எஸ்கேஏஏஏஏப்பு ...

வளர்மதி said...

சுந்தரோட நானும் வருவேன் ... அந்த மேட்டரத் தெரிஞ்சிக்க ...

ஆடுமாடு said...

வளர், இனி எவ்வளவு குடிச்சாலும் எதையும் உளற மாட்டேன்...
உளற மாட்டேன்...
உளற மாட்டேன்...
உளற மாட்டேன்...
உளற மாட்டேன்...
உளற மாட்டேன்...

manovarsha said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எப்படி இருக்கீங்க ஏக்நாத். வலைத்தளத்தை மேய்ஞ்சு திரிஞ்சேன் வெகு சுவாரஸ்யம் :)

ஆடுமாடு said...

மனோஜ் சார். நோ கமெண்ட்ஸ்.

ஆடுமாடு said...

நன்றி சேவியர்.