Tuesday, June 17, 2008

பொய்சொல்லாம் பாறை

ஜமீன் வீட்டு ஆட்டுக்குட்டியை தூக்கிட்டு போய் கறி வச்சுத்தின்னுட்டாம் சூச்சன். விஷயம் வெளிய வராம இருக்குமா? வீட்டுல வச்சு வெட்டுனா தெரிஞ்சுரும்னு ரெண்டு மூணு மைலு தூரமா இருக்குத பாறைக்கு பின்னால போட்டு ஆட்டை வெட்டியிருக்காம்.

கூட அவன் அண்ணமாருவோளும், தம்பிமாருவோளும். சாரயத்தை குடிச்சுட்டு அங்ஙனயே கறிவச்சு நல்லா தின்னுட்டாவோ. இதை அங்க ஆடு பத்திட்டு வந்த பய பாத்திருக்காம். அவனும் நல்ல பய. இதை போய் ஜமீனுகிட்ட சொல்லலை. ஆனாலும் சூச்சன் மேல சந்தேகம் வந்துட்டு ஜமீனுக்கு. அவருக்கு சந்தேகம் வந்தா விடுவாவுளா? தொழுவுல போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்காவோ. பய வாயவே தெறக்கலை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னுட்டாம்.

ஜமீனு இவன் எங்க வச்சு ஆட்டை வெட்டி, தின்னாம்னு தெரிஞ்சுகிட்டு, பாறைகிட்ட கூட்டிப் போனாரு.

இங்கதானல நீ ஆட்டை வெட்டி, கறிவச்சு தின்னே’ன்னு கேட்டாரு. இவன் இல்லைங்குத பல்லவியை பாடியிருக்கான்.

அங்ஙன வச்சு, கன்னத்துலயே போட்டாரு. கீழ விழுந்தான் பாறைக்கு முன்னால. ஜமீன் குதிரை வண்டியில இருக்குத அருவாளை எடுக்க போயிருக்காரு, இவனை வெட்ட. திடீர்னு பாத்தா, விழுந்து கெடந்த பயலை பாறை உள்ள இழுத்துட்டு.

ஜமீனுக்கு ஒரே அதிர்ச்சி. பாறை இப்படி இழுத்துட்டேன்னு. கூட வந்திருந்த ஆட்களுக்கும் ஆச்சரியம். அந்தானி, முடிவு பண்ணுனாவோ. பொய் சொன்னா இந்த பாறை உள்ள இழுத்துக்கிடும்னு. இதுகிட்ட யாராவது போனா பேசவே மாட்டோவோ. ஏதாவது சொல்லி அது பொய்யா இருந்தா பாறை இழுத்துக்கிடும்லா.

இன்னைக்கும் பாபநாசம் பக்கத்துல இருக்குத டானாவுல பொய் சொல்லாம் பாறை வெள்ளையா இருக்கு பாருங்க.

12 comments:

ambi said...

எலே நா தான் முத போணியா? :))

ambi said...

பாப நாசம் பக்கத்துலயா? அது என்ன டானா பக்கத்துல? கொஞ்சம் வெவரமா சொல்லுவே :)

ஆடுமாடு said...

அம்பி, வாங்க,

விக்ரமசிங்கபுரம் தாண்டுனதும் டாணா. இதுலயிருந்து இடதுபக்கம் தென்காசிக்கு ஒரு பஸ் ரூட்டிருக்கு. நேரா போனா பாபநாசம். இந்த தென்காசி ரூட்ல வந்தா ஒரு பெரிய ஏத்தம் இருக்கு. இருக்கா? அதுக்கு மேல மேல் பக்கம் வெள்ளையா இருக்கும் பாருங்க ஒரு பாறை. அதுதான் பொய்சொல்லான் பாறை.
இப்ப வெளங்கிட்டாவே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கிறது இந்தக் கதைத் தொடர்.

நன்றி.

poompozhil said...

எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச்சுட்டு திரும்பாம, கதை வேறயா???????????????ழ

ஆடுமாடு said...

சுந்தர், தொடர்ந்து தரு்ம் உற்சாகத்துக்கு நன்றி,

கிருத்திகா ஸ்ரீதர் said...

பொய்சொல்லாம் பாறைன்னு வல்லநாடு பக்கத்துலயும் இத மாதிரி ஒரு கதை சொல்லுவாக தெரியுமா.. ஆனாலும் உங்க நடை நல்லாத்தான் இருக்கு..

மாதினி/Madhini said...

ம் .. சுவாரசியங்கள் தொடரட்டும்.. ஆடுமாடு..

ஆடுமாடு said...

//எலே மூதி, ஆடுமாடு மேய்க்கப்போன அதை மட்டும் முடிச்சுட்டு திரும்பாம, கதை வேறயா???????????????ழ//

ஏல என்ன பேச்சு ஒரு மாதிரி போவுது.

ஆடுமாடு said...

//வல்லநாடு பக்கத்துலயும் இத மாதிரி ஒரு கதை சொல்லுவாக தெரியுமா...//

அப்டியா?

ஊருக்கு ஒரு கதை.

ஆடுமாடு said...

மாதினி நன்றி. நீங்க 5ம் வகுப்பா படிக்கிறீங்க?

நெய்வேலி பாரதிக்குமார் said...

உங்கள் மதிப்புக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் ப்ளாக் ப்டிக்க படிக்க சுவாரசியம். உங்கள் நகைச்சுவை உணர்வை போற்றுகிறேன். தொடர்ந்து தூள் கிளப்புங்கள்