வாழ்ந்த ஊரின் பக்கத்துத் தெருவில், நமக்குத் தெரியாமல் நடந்த ஒரு சம்ப வத்தை நண்பன் ஒருவன் அல்லது தோழி ஒருத்தி தோள் தட்டிச் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படிச் சொல்லிப் போகிறது சல்மாவின் 'மனாமியங் கள்'.
வாழ்க்கையின் வெவ்வேறு சந்துகளில் சிக்கி, சின்னாபின்னமாகிற சில பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையை யதார்த்தம் மீறாமல் பேசுகிறது, இந்நாவல். வாசித்துக்கொண்டிருக்கும்போதே மெஹரும் அவர் அம்மா ஆசியாவும் நமக்குள் ஓடி வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். அவர்களின் ஆற் றாமையும் தவிப்பும் நம்மையும் கொதிக்க வைக்கின்றன. அவர்களின் க ண்ணீர் துடைக்க, அல்லது அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்ல, புறப்பட நினைக்கிற மனதை கட்டுப் படுத்துவது கஷ்டம்தான்.
பர்வீன் மற்றும் அந்த பார்வையற்ற நன்னியின் கதைகள் இன்னும் பரிதாபப்பட வைக்கின்றன. நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கும் அவர்களின் வாழ்க்கையும் உடலின் வேட்கை உந்தித்தள்ளும்போது வரும் ஏக்கங்களும் குறைவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பெரும் வலியை தந்து போகின்றன. பெண்களின் அக உலகங்களை சல்மாவின் எழுத்து இன்னும் விரிவாக எழுதிப் போகிறது.
கணவன் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கிவிட்ட பிறகு, அதிகார ஆணுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆங்காரமும் இயலாமை காரணமாக அந்த ஆங்காரம் கண்ணீரோடு அடங்கிப்போகும் போதும், பிறகு, குலாஆ கொடுத்துவிட்டு தனக்குள் திருப்திப்பட்டுக்கொள்ளும் போதும் இன்னும் உயர்ந்து நிற்கிறாள் மெஹர். அவளுக்கு சம்பிரதாயத்துக்கு நடக்கிற மற்றொரு திருமணம் பாதியிலேயே பிரியும் பரிதாபமாமும், குழந் தைகள் மீதான பெற்றவளின் அளவில்லா பாசமும் நாவல் முழுவதும் விரவி கிடக்கிறது. பல இடங்களில் நம்மையறியாமல் கண்ணீர் வந்து முட்டுவ துதான் இந்நாவலின் வெற்றி.
கல்லூரியின் சேரும் சாஜியின் தோழி, யாரோ ஒருவனை காதலித்து விட்டாள் என்பதற்காக சாஜியின் படிப்பை நிறுத்த சொல்லும் அந்த போன் காலில் முடிகிறது நாவல். ஆனால் அங்கிருந்துதான் தொடர்கிறது எல்லாம்.
No comments:
Post a Comment