ஊர் என்பது அடையாளம் மட்டுமல்ல. அது ஏராளமான சுகங்களையும் துக்கங்களையும் அடைத்து வைத்திருக்கிற ஆழ் புதையல். ஒரு தெரு, ஒரு கோயில், ஒரு வாய்க்கால், ஆறு, வயல்வெளி சொல்லி தருகிற அல்லது சொல்லிப்போகிற அனுபவங்கள் நிறைய. வாழ்க்கையில படிக்கவும் வாழ்க்கையை படிக்கவும் ஊரில் இருக்கிறது ஏராள விஷயங்கள். அந்நிய தேசம் அல்லது நகரம் பிழைப்புக்கு படியளந்து கொண்டிருந்தாலும் பிறந்த ஊர்தான் உயிருக்குள் கடைசிவரை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் உயிர். அந்த ஊரின் மடியில் நாம் சப்பரமாகவும் இருந்திருக்கலாம், சம்மணம் போட்டும் அமர்ந்திருக்கலாம்.
ஊர் என்பது காதல். தெரிந்தோ தெரியாமலோ எல்லா ஊர்களும் முதல்காதலை மூச்சுக்குள் முளைக்க விட்டுவிடுகிறது. மூச்சடங்கி விழும் வரையும் அது மூச்சுக்குள் வாழும் வித்தை விந்தையாகவே இருக்கிறது. பனிகாலத்திலும் அதிகாலை நேர ஆற்றுக்குளியலோ, காலைநேரத்து பேருந்து நிறுத்தமோ, மாலைநேரத்து வாய்க்காலோ, கருவைமுட்கள் வளர்ந்திருக்கிற தெருவோ... காதல் வளர்க்கும் இடங்களாக இருக்கலாம்.
ஊர் என்பது ஏக்கம். வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்க்கை, நகரத்துக்கு விரட்டிய பின்பும் நகராமல் இருக்கிறது ஏக்கமான ஊர். புழுதிக்காடும், பூ மணக்கும் வீடும், உருண்டு புரண்ட மண்ணும், விழுந்த எழுந்த குளமும் ஒரு நொடியில் ஊசிகுத்திப்போகிறது உயிர் பலூனில். இருந்தாலும் அன்றுபோலில்லை ஊர். புழுதிக்காடு சிமெண்ட் சாலையாகியிருக்கிறது. பூக்களற்று இருக்கிறது பூமணக்கும் வீடு. எப்போதும் குழுமியிருக்கும் தெப்பக்குளத்திண்டு ஆளின்றி தவிக்கிறது. மணல்கள் இல்லாத ஆற்றில் புதர் முளைத்திருக்கிறது. கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பேருந்து நிறுத்தம்... ஜனத்தொகையை மிஞ்சியிருக்கிறது உள்ளூர் கடைகள். சின்ன பசங்களை பெரியவர்களாக்கியிருக்கிறது டாஸ்மாக் போதை...
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்!
18 comments:
ஊரு நினைப்பை கிளறி விட்டுட்டீங்க..... பொக்கிஷ பதிவு.
ஊர் ஞாபகம் வர வச்ச பதிவு :)
சமீபமா ஊருக்குப்போய்ட்டு வந்தீங்களா.. இல்லைன்னா.. ஊருக்குப்போக லீவெ குடுக்கமாட்டேங்கறாங்களா? :)
நல்லா இருக்கு பதிவு.
நன்றி சித்ரா மேடம்.
ஆமினா நன்றி
ஊர் என்பது அடையாளம், ஆழ் புதையல், தவிப்பு, பாசம், காதல், ஏக்கம், ஞாபகம்.
அருமை.
இன்றுவரை ஊரிலேயே இருந்திருந்தால் நகரத்தின் மீது கூட ஒரு பிரமிப்பு இருந்து கொண்டே இருந்திருக்கும். சரி தானே !
இந்த மாசம் நான் ஊருக்கு போறேனே!!! :))
//சமீபமா ஊருக்குப்போய்ட்டு வந்தீங்களா.. இல்லைன்னா.. ஊருக்குப்போக லீவெ குடுக்கமாட்டேங்கறாங்களா? :) //
அடுத்த வாரம!. நன்றி முத்து
//இன்றுவரை ஊரிலேயே இருந்திருந்தால் நகரத்தின் மீது கூட ஒரு பிரமிப்பு இருந்து கொண்டே இருந்திருக்கும். சரி தானே !//
கண்டிப்பாக. பாலகுமார் நன்றி.
அழகிய பதிவு! பூங்கொத்து!
//இந்த மாசம் நான் ஊருக்கு போறேனே!!! :))//
கொடுத்து வச்சவரு... நன்றி.
அருணா மேடம் நன்றி.
க்ளாஸ்..அருமை.
இப்படி புழுதிக்கவிதையாய் ஊர் மண் ஒட்டிக்கொள்வது அழகு.ஒளிந்து ஒளிந்து கழுதைச்சீட்டு விளையாண்டதெல்லாம் டாஸ்மாக் வாசலில் நின்று போன வாரம் அடித்த போதை பற்றிப்பேசும் பதினான்கு வயது சிறுவனுக்கு எப்படிச்சாகசமாகும்.வேதனை.
//ஒளிந்து ஒளிந்து கழுதைச்சீட்டு விளையாண்டதெல்லாம் டாஸ்மாக் வாசலில் நின்று போன வாரம் அடித்த போதை பற்றிப்பேசும் பதினான்கு வயது சிறுவனுக்கு எப்படிச்சாகசமாகும்.வேதனை//
இதை பத்தி தனிப்பதிவு போடலாம்னு இருக்கேன். நன்றி தோழர்.
inthap pathivu....yennai oorukku koottuttu poyi,marupadiyum veettukku vanthu vitturuchu......
nallaayirukkunga!
ரசிகை நன்றி
Kaanal-aha iruntha en manasukku neera irukkirathu intha varegal.. Thanks
nanthini ist really?
Thanks.
Post a Comment