Thursday, May 20, 2010

இடையில் சில குறிப்புகள்

ஒரு வருடத்துக்குப் பிறகு ஊருக்குப் போவது என்பது கொஞ்சம் அதிகப்படியான சந்தோஷத்தை தந்திருந்தது. கேபினுக்குள்ளும் கம்ப்யூட்டருக்குள்ளும் அடைந்துகொண்ட வாழ்க்கையின் பிரதானம் வருவாய் மட்டுமே. இதை தாண்டிய மகிழ்ச்சிகளை, தந்துவிடுவதான பாவலாவை, சினிமா பார்ட்டிகளும், ஈசிஆர் விசிட்டுகளும் ஏகாந்தமாய் செய்கின்றன.


தொழில் நிமித்தம் நடக்கின்ற இக்காணிக்கைகளை தாண்டி, அடிநெஞ்சில் அம்மணமாக எல்லாருக்குள்ளும் உலவி கொண்டிருக்கிறது பிறந்து வளர்ந்த ஊரும், பிஞ்சில் ஆடிய நினைவுகளும்.

டிவியில் ஓடுகிற--, வயக்காட்டையும் ஆற்றையும் தோப்புகளையும் கொண்டு செல்கிற ஏதாவதொரு கிராமத்து பாடல், உடைத்துவிட்டு போகிறது இப்போலி வாழ்வை. பிழைப்பின் நிமித்தம் தங்கிவிட்டாலும் எல்லோரின் சட்டைப்பைக்குள்ளும் கிராமம், சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது உறங்கிவிடாமல்.

ஆடி அசையும் குளிர்சாதன, தூங்கும் வசதிகொண்ட பேரூந்தில் திருநெல்வேலிக்கு ஏறிய போது, மணி இரவு 9.00. காலையில் 7.30க்கு நெல்லை புது பஸ்டாண்ட் வந்திருந்தது.

பிடித்து வளர்த்த மைனா குஞ்சுகளும், கிளிகுஞ்சுகளும் கண்களின் பறக்க, வளர்த்த வெள்ளாட்டு குட்டியில் முகம் புதைத்து ஆடிக்கொண்டிருந்தது மனசு. அம்பாசமுத்திரம் பஸ் பிடித்து, குட்டித் தூக்கம்.

இறங்கி,கொட்டாவி விட்டுக்கொண்டே, டவுண் பஸ்சுக்கு காத்திருந்த போது, கேட்டது குரல்.

'நீங்க ஆடுமாடுதானே'

இதென்ன கூத்தா இருக்கு என நினைத்துவிட்டு, 'ஆமா, நீங்க'

'நான் ராஜா, துபாய் ராஜா'

'அட, எப்படி சார், முகமே தெரியாம, இவ்வளவு கரெக்டா என்னை அடையாளம் கண்டீங்க?'

'உறவினர் ஊருக்கு போறாங்க, பஸ் ஏத்த வந்தேன். திடீர்னு பார்த்தா பேக்கோட நின்னீங்க. போன வாரமே சொன்னீங்கள்ல, இன்னைக்கு வருவீங்கன்னு. அதனால, குத்து மதிப்பாதான் கேட்டேன்'

சில நிமிட பேச்சுக்குப் பிறகு, அவரவர் பாதையில் பிரிந்தோம்.

எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

................................................

புறாக்கூண்டு வீடுகளில் வாழ பழக்கிவிட்டிருக்கிறது சென்னை. வீடு மாற்றும் பொருட்டு, (தூசிகளோடு) அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களை ஏதாவது லைப்ரரிக்கு கொடுத்துவிடுவது என்று 3 அட்டைப்பெட்டிகளை ரெடி செய்து அடுக்கி வைத்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 527 புத்தகங்கள்! வார இதழ் ஒன்றில் வேலை பார்த்தபோது விமர்சனங்களுக்காக வந்த புத்தகங்கள் அதிகம். ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருந்தபோது, கண்ணில் பட்டது சு.சமுத்திரத்தின் வாடாமல்லி.

'ஏ அய்யா, நான் சுத்துன ஊரைத்தானே நீயும் எழுதத... ஒரு நாளு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வா. நிறைய பேசுவோம்' என்ற சமுத்திரம், 'தோழர்' கதைக்காக பெரிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதை படித்துவிட்டு அவரது அனைத்து புத்தகங்களையும் மொத்தமாக படித்துவிடுவதென முடிவு செய்து, ஆச்சர்யத்தின் ஆழ்ந்தேன். இன்னும் பல நினைவுகள் வந்து வந்து சென்றது.

அவர் இறக்குமுன் கடைசியாக பேசியது என்னிடமாகத்தான் இருக்கும்.

இதே போல இன்னொருவர் எழுத்தாளர் கந்தர்வன்.

'பேசக்கூடாதுன்னு டாக்டரு சொல்லியிருக்காரு. இவரு பாட்டுக்கு போன்ல பேசிட்டிருக்காருப்பா... கொஞ்சம் சொல்லேன்' என்ற அவரது மனைவியின் கரிசனையை அவர் பொருட்படுத்தவே இல்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களில் நினைவுகளும் புதைத்திருக்கிறது.

21 comments:

கமலேஷ் said...

mm...intresting.....intresting....

எறும்பு said...

அண்ணாச்சி நானும் போன வாரம் அம்பை போயிருந்தேன்.ராஜாவை பார்த்தேன். நீங்க ஊருக்கு கிளம்பிட்டதா சொன்னாரு.உங்களை பாக்க முடியாம போச்சு.உங்கள பாத்தத சொன்னாரு. நீங்க அப்படியே ஷாக் ஆகி நின்நீங்கலாம்..

:)

எறும்பு said...

//
எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!//

இந்த இடத்துல
""ஆச்சர்யங்கள் நிறைந்தது வாழ்கைன்னு""
கமெண்ட் போட்டுகிறேன்..

:)

ஆடுமாடு said...

நன்றி கமலேஷ்.

ஆடுமாடு said...

//உங்களை பாக்க முடியாம போச்சு.உங்கள பாத்தத சொன்னாரு. நீங்க அப்படியே ஷாக் ஆகி நின்நீங்கலாம்//

ஆமா. ராஜகோபால் சார்.
ரெண்டு பேர் முகமும் தெரியாது. வெறும், பேக்கை மட்டும் வச்சு ஒருத்தர் கரெக்டா கேட்டார்னா ஆச்சர்யமா இருக்குமா? இருக்காதா?

அதான்....நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆடுமாடு said...

//இந்த இடத்துல
""ஆச்சர்யங்கள் நிறைந்தது வாழ்கைன்னு""
கமெண்ட் போட்டுகிறேன்...//

உண்மைதான் சார்

ஜெட்லி... said...

நான் கூட உங்களை வெளியில் பார்த்தால் கண்டுப்பிடித்து
விடுவேன் என்று நினைக்கிறேன்.....

ரோஸ்விக் said...

527 புத்தகங்கள்... வாவ்.
அந்த புத்தகங்களில் சிறப்பானவற்றையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாமே அண்ணே. :-)

Chitra said...

What a pleasant surprise!

Enjoy......

ஹேமா said...

//அடிநெஞ்சில் அம்மணமாக எல்லாருக்குள்ளும் உலவி கொண்டிருக்கிறது பிறந்து வளர்ந்த ஊரும், பிஞ்சில் ஆடிய நினைவுகளும்.//

ம்ம்ம்....நினைச்சு பெரிசா முச்சை மட்டும் இழுத்து விட்டுக்கிறேன்.

நேசமித்ரன் said...

எல்லோரின் சட்டைப்பைக்குள்ளும் கிராமம், சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது உறங்கிவிடாமல்

மெய்யான சொற்கள்

அன்புடன் அருணா said...

527 புத்தகங்கள்... !!பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Balakumar Vijayaraman said...

அருமை.

துபாய் ராஜா said...

ஆடுமாடு said...
//உங்களை பாக்க முடியாம போச்சு.உங்கள பாத்தத சொன்னாரு. நீங்க அப்படியே ஷாக் ஆகி நின்நீங்கலாம்//

ஆமா. ராஜகோபால் சார்.
ரெண்டு பேர் முகமும் தெரியாது. வெறும், பேக்கை மட்டும் வச்சு ஒருத்தர் கரெக்டா கேட்டார்னா ஆச்சர்யமா இருக்குமா? இருக்காதா?

அதான்....நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.//

அண்ணாச்சி....
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும்.

இது தான் நம்ம பாலிசி.

Annachi, intha maasam varum pothavathu Phone Pannittu Vaanga. Yennoda Mobile No 9489153344.

ஆடுமாடு said...

//நான் கூட உங்களை வெளியில் பார்த்தால் கண்டுப்பிடித்து
விடுவேன் என்று நினைக்கிறேன்...//

ஜெட்லி நாம ஏற்கனவே மீட் பண்ணியிருக்கோம்னு நினைக்கிறேன்.

நன்றி.

ஆடுமாடு said...

//அந்த புத்தகங்களில் சிறப்பானவற்றையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாமே//

நன்றி ரோஸ்விக். கண்டிப்பா

ஆடுமாடு said...

//What a pleasant surprise!//

நன்றி சித்ராக்கா.

ஆடுமாடு said...

//நினைச்சு பெரிசா முச்சை மட்டும் இழுத்து விட்டுக்கிறேன்//


வேற என்ன பண்றது ஹேமா.

நன்றி.

ஆடுமாடு said...

நன்றி நேசமித்ரன்.

ஆடுமாடு said...

அருணா மேடம் நன்றி. டிரை பண்றேன்.

.............

பாலகுமார் நன்றி.

கண்ணா.. said...

ஆமாம்ணே, ராஜா அண்ணனும் ரொம்ப நெகிழ்ச்சியாக இந்த சம்பவத்தை சொன்னாங்க...

விரைவில் சந்திப்போம்

:)