Tuesday, September 1, 2009

காடு


காலில் பீய்ங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.
-தொகுப்பிலிருந்து


காடு- கோடானு கோடி புதிர்களை புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவி கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காத்தில் நமக்கு பல கதைகள் கிடக்கிறது. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டி வைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுத்தவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்தரையெங்கும் எவனோ சென்று வந்த ஒன்றையடி பாதை எனக்கும் இன்னும் ஆச்சர்யம். காட்டையும் மாட்டையும் வாழ்க்கையாக கொண்டு பிராயம் எனக்கு தந்த அனுபவம் நிறைய. கண்ணாடி விரியன் பாம்பிலிருந்து பெயர் புரியாத ஊர்வன, பறப்பன, பாய்வன உள்ளிட்டவற்றை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசான் அது. ஆசான்கள் கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள். அலற வைக்கும் காட்டின் குரல்கள் நம்மையும் அதிர வைப்பவை. சுகங்களும் சுவாரஸ்யங்களும் புதையலாகியிருக்கும் அக்காட்டின் அனுபவத்தை நண்பனின் வாழ்க்கையோடு விரைவில் தொடரப் போகிறேன்.

(கவிதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை பாஸு!)

13 comments:

நட்புடன் ஜமால் said...

ஆசான்கள் கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள்.]]


அருமை.

ஆடுமாடு said...

நன்றி ஜமால்.

மாதவராஜ் said...

அறிவிப்பே காட்டின் குரலாய் இருக்கிறது. காத்திருக்கிறோம்.

அ.மு.செய்யது said...

//கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள்//


முற்றிலும் உண்மை.

ஆடு..மாடு..இப்ப காடு...ரசிகர்கள் இப்பவே தயாராயிட்டோம்.நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க தல.

அது சரி(18185106603874041862) said...

//
காலில் பீய்ங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து
//

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு...ஆவலுடன்...

காமராஜ் said...

ஆஹா ரொம்ப வருடங்களாச்சு காட்டுக்குள்ளே சுற்றித்திரிந்து.
நானும் வருகிறேன். எனக்கு பெரும்பலான தாவர, ஜீவராசிப்பெயர்கள்
தெரியும், அவற்றின் ருசியும் கூட. ஐயரவுப்படாதீர்கள்.

வித்யாஷ‌ங்கர் said...

anyway we are inthesameboat-durai

வித்யாஷ‌ங்கர் said...

anyway we are inthesameboat-durai

ஆடுமாடு said...

//அறிவிப்பே காட்டின் குரலாய் இருக்கிறது//

மாதவராஜ் ஓவர் பில்டப்பா இருக்கோ?

நன்றி.

Earn Staying Home said...

மிக்க நன்று

ஆடுமாடு said...

//ஆடு..மாடு..இப்ப காடு//

நன்றி செய்யது, அது சரி.


//எனக்கு பெரும்பலான தாவர, ஜீவராசிப்பெயர்கள்
தெரியும், அவற்றின் ருசியும் கூட//

மிளாக்கறி?

நன்றி காமராஜ்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா கொஞ்ச நாளா தாகத்துக்கு தவிக்கும் நாவு போல் காடு எனக்குள் குடி கொள்ளத்துவங்கிவிட்டது.. விடுமுறைக்காக காத்திருக்கிறேன்... அதோடு உங்கள் பதிவு....கிளர்ந்தெழச்செய்கிறது மேலும் தாகத்தை...விரைவில் துவங்குங்கள்.

சித்திரவீதிக்காரன் said...

இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டி வைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுத்தவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்தரையெங்கும் எவனோ சென்று வந்த ஒன்றையடி பாதை எனக்கும் இன்னும் ஆச்சர்யம். காட்டையும் மாட்டையும் வாழ்க்கையாக கொண்டு பிராயம் எனக்கு தந்த அனுபவம் நிறைய.//
காடு குறித்த தங்கள் அறிமுகம் அருமை. கிடைமாட்டுக்காரர்கள், கீதாரிகள் குறித்து இவ்வளவு நாட்களாய் வாசிக்க வேண்டும் என்ற ஆசையை தங்கள் ‘காடு’ தொடர் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் காடு எனும் பெரும்பள்ளிக்குள் நானும் வருகிறேன். கவிதையும் அருமை. நன்றி.