Sunday, September 20, 2009

காடு - 2

காதல், ஒரு கடலை கைக்குள் அடைத்துவிடும் சக்தி வாய்ந்தது. மூன்றாவதாக, அவன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாக உணர்ந்தான். காதலிப்பதைவிடவும் காதல் வயப்படுவது சுகமான அவஸ்தை.

நான்காவது தெருவில் இருந்து நெய் விற்க வரும் மூக்கம்மாள், மூக்கும் முழியுமாக இருப்பதாக அப்போது நினைத்தான். இருவரும் பேசத் தொடங்கிய நான்காவது வாரத்தில் அவளுடன் ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்துக்குச் சென்றான்.

அவள் நான்கடி முன்பும் இவன் நான்கடி பின்புமாக சென்று ஊரில் யாருக்கும் தெரியாதவாறு காதல் வளர்த்தார்கள். கல்யாணி சைலப்பரிடம் தங்கள் காதல் கைகூட சிறப்பு அர்ச்சனை செய்துகொண்டார்கள். எல்லாருக்கும் இலவசமாக அருள் பாலிக்கும் அம்மனும் அய்யாவும் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டதாக நினைத்த மறுநாள், இடைகால் அத்தை மகனுக்கு நிச்சயிக்கப்பட்டாள் மூக்கம்மாள்.

விதியின் விளையாட்டுகள் விவரமானவை.

இம்முறை கலங்கவில்லை உச்சிமகாளி. விஷயத்தை உடன் ஆடுமேய்க்கும் அய்யாசாமியிடம் சொன்னதும்தான் அவன் எதையோ கண்டுபிடித்தவனாகச் சொன்னான்.

‘ஏல கவனிச்யா?‘

‘என்னத்த?‘

‘நீ ராசியான பயலே‘

‘என்ன அர்தலி சொல்லுத?‘

‘பெறவு, நீ எந்த புள்ளய காதலிக்கியோ கொஞ்ச நாள்லயே அந்த புள்ளைலுவோளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிருது பாரேன்‘

‘இதென்ன கூத்தா இருக்கு‘

‘நான் சொல்லுதம்னு பாக்காதல. நீயே யோசனை பண்ணி பாரு‘

ஆமா என்ற உ.மா, இந்த விசித்திர நிகழ்வை உணர்ந்து ஆச்சர்யப்பட்டான். கொஞ்சம் சிரிப்பாகவும் வந்தது. அதெப்படி எனக்கு மட்டும் இப்படியொரு ராசி?

பொழுது புலரும் முன்பே எழுந்துவிட்டான். அருணாசலம் டீக்கடையில் பால் சூடாகி கொண்டிருந்தது. இப்போது எந்த வீட்டுக்கும் பால் கறக்கும் வேலை இல்லை. பழகிவிடும் மாடுகள், அவர்களின் சொந்தக்காரர்கள் கைகளுக்கு பழக்கப்பட்டிருந்தது. மாடு மேய்ப்பதில் இப்போது அவனுக்கு ஆர்வம் குறைந்திருந்தது.

இருந்தாலும் இதைவிட்டால் வேறு பிழைப்பில்லை என்பதால் ஏனோ தானோ என்று தொடர்ந்துகொண்டிருந்தான். இனி காதல் வயப்பட ஊரில் அழகான குமரிகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சீக்கிரம் கல்யாணம் ஆகி போக தான் ஒரு காரணகர்த்தாவாக இருந்து விடக் கூடாது என்று முடிவெடுத்தான். அடுத்த வாரம் குள்ராட்டிக்கு செல்லும் கோஷ்டிகளுடன் தானும் ஐக்கியமாவது என தீர்மானித்தான். காடு அவனுக்கு ஆச்சர்யம் தரவும் அவன் காட்டை அனுபவிக்கவும் புறப்பட முடிவானது.

தொடர்வேன்

8 comments:

அ.மு.செய்யது said...

உச்சிமகாளிக்கு எப்பத்தான செட் ஆவும்....???? மூக்கம்மாவும் போயிட்டாளா ??

நல்லா எழுதியிருக்கீங்க..ரசனையான பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நீ எந்த புள்ளய காதலிக்கியோ கொஞ்ச நாள்லயே அந்த புள்ளைலுவோளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிருது பாரேன்‘//
:))

ஆடுமாடு said...

//உச்சிமகாளிக்கு எப்பத்தான செட் ஆவும்....????//

பயலுக்கு செட் ஆகலையே செய்யது!

நன்றி.

ஆடுமாடு said...

:))

நன்றி முத்துலட்சுமி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா நல்லாத்தானிருக்கு காட்டுக்கு போக முடிவெடுத்த காரியம்...

ESMN said...

அண்ணாச்சி,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

கிருத்திகா நன்றி.

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி, நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.