குருசாமி மகன் வேலுவுக்கு முதன்மைத் தொழில் முடி வெட்டுவது. இரண்டாவதாக ஆடு உரிப்பது. இது இரண்டாவதாக வருவதற்கு தினமும் சோலி இருக்காது என்பது காரணமாகியது.
பிள்ளையார் கோவிலில் இருந்து கருவேலப்பறை செல்லும் வழியில்தான் குருசாமியின் வீடு. ஓர் ஆள் உயரத்துக்குப் படிகளை வைத்து, அந்த காலத்திலேயே உயரமாகக் கட்டியிருந்தார்கள் வீட்டை.
‘அப்பலாம் என்ன மழை அடிக்கும்கியெ... விடாம ஏழெட்டு நாளு பெய்யும். நண்டு நசுக்கெல்லாம் நடமாட முடியாது. அப்படி பெஞ்சா தெருவுக்குள்ள நடக்க முடியுமா சொல்லுங்க? கொளம் கெணக்கதான் இருக்கும். அதுக்காவ, இவ்வளவு ஒசரமா எங்கய்யா வீட்டை கட்டியிருக்காரு' என்பதை, கேட்காவிட்டாலும் சலிக்காமல் சொல்வதை வேலையாகவே வைத்திருந்தார் குருசாமி.
குருசாமிக்கு மூன்று மகன்கள். மூவருக்கும், முடிவெட்டுவது ஒன்றே தொழில். இதில் முதலாமவன்தான் வேலு. ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படாத தேகம் வேலுவுடையது. சிறு வயதிலேயே வயிறும் முன்பற்களும் நீட்டிக்கொண்டு வந்து நின்றிருந்தது. பேச்சும் அவ்வளவு விரைவாக வராது. ஏதாவது கேட்டால் கொஞ்சம் சிரிப்போடு லேட்டாகத்தான் வந்து விழும் வார்த்தை. பெரிய வாருடன் (பெல்ட்) வேட்டியை இறுக்கிக்கட்டி கைகளை பின்பக்கம் வைத்துக்கொண்டு அவன் வருவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். வாரைத் தாண்டி பெரும் பொட்டலம் போன்று வலது பக்க இடுப்பில் வேட்டியைத் துறுத்திக் கொண்டிருக்கும். முகச்சவரம் மற்றும் ஆடு அறுப்பதற்கான உபகரணங்கள் அதில் எப்போதுமுண்டு.
கரடுமுரடனான தலைமுடியுடன் வீட்டில் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஐயமார் தெருப் பிள்ளைகள் அவனிடம் முடிவெட்டப் பயப்படுவார்கள். எல்லாரும் குருசாமிக்கும் அவரது மற்ற மகன்கள் வெட்டவுமே காத்திருப்பார்கள். யாராவது அவசரத்துக்காக, வந்தால் ரெடியாக இருப்பான் வேலு.
‘‘என்ன குருசாமி, லேட்டாவுமோ? கல்யாண வீட்டுக்குப் போணும்''
‘‘செத்த நேரம் ஒக்காரும்யா''
‘‘இல்லை, இன்னா, அடுத்த காருக்கு போணும்டே. பொண்டாட்டிக்காரி கார்சாண்ட்ல நிய்க்கா''
‘‘கால்ல சுடு தண்ணி ஊத்திட்டு வந்துதாம் நிப்பீரு எப்பவும்... ஏல, ஏய் வேலு, அவருக்கு சேவிங் பண்ணிவிடு'' என குருசாமி ஆர்டர் போட்டதும் கத்தியை எடுப்பான். உடலில்தான் சிறு சிறு குறைகளைத் தவிர, அவனது தொழிலில் குறை இல்லை.
திண்ணையில் இருக்கிற மூன்றாவது தூண், வேலுவின் ஏரியா. அவன் உட்கார்வதற்காக, ஒரு மரத் துண்டு இருக்கும். அதில் உட்கார்ந்து தூணில் சாய்ந்துகொள்வான். அந்த மரத்துண்டு அவனது உயரத்தை கூட்ட. எதிரில் உட்கார்பவர்களுக்கு சிறிய மரத்துண்டு. இப்படி வேலைப் பார்த்தால்தான் அவனுக்கு வசதி. கொஞ்சம் வளர்ந்திருக்கிற ஆட்கள் வந்தால் கஷ்டம்தான். மரத்துண்டில் இல்லாமல் தரையில் உட்கார வைத்துக்கொள்வான்.
எந்த தெருவிலாவது கோயில் கொடை என்றால் அவனைப் பிடிக்க முடியாது. கொட்டு சத்தம் கேட்டதும், இன்னைக்கு என்னக் கிழமை என கேட்பான். செவ்வாய்க்கிழமை என்றால் அவனது வேலை இரவு, வெள்ளிக்கிழமை என்றால் அவனது வேலை அதிகாலை என முடிவு செய்துகொள்வான். பெரும்பாலும் அம்மன் கோயில்களுக்கு செவ்வாய்க்கிழமையும், கருப்பசாமி, சுடலை போன்ற கோயில்களுக்கு வெள்ளிக் கிழமையும் கொடை வைப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை சாமக்கொடையில் ஆடு வெட்டினால் அடுத்த நிமிடமே உரிக்க அழைப்பார்கள். வெள்ளிக்கிழமை என்றால் அதிகாலையில் பார்த்துக் கொள்ளலாம்.
கோயில் கொடைக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் வெட்டப்பட்டு, கோயில் ஓரத்தில் மாலைகளோடு கிடக்கும். நேர்ந்துவிட்டவர்கள் அவரவர்கள் ஆட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போவார்கள். போனாலும் ஆடு உரிப்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு கண்டிப்பாக, வேலு வேண்டும். யார் வீட்டு ஆடோ, அவர்கள் வீட்டுத் தொழுவில், இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் இணைத்து நடுவில் கம்பு கட்டி ஆட்டைத்தொடங்க விட வேண்டும். கழுத்திலிருந்து அடிவயிறு வழியாக கத்தியால் ஒரு இழு. பிறகு அப்படியே தோலுக்குள் கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தென்னி தென்னி இழுத்தால் கால்கள் மட்டும் சிக்கும். கால்களின் மூட்டுகளில் சின்னதாக ஒரு கீறலைப் போட்டால் சரி. பிறகு லாவகமாக இழுத்தால் வெளியே வந்துவிடும் தோல்.
பிறகு வீட்டுக்காரர் மூஞ்சை ஏறிட்டுப் பார்ப்பான். அதுக்கு, ஆட்டைத் துண்டாக்க, கதவு வேண்டும் என்று பொருள். பொருத்தி கழற்றக் கூடிய - அதிகப்படியான வெயிட்டை கொண்ட - மரத்தினாலான வாசல் கதவை கழற்றி கொண்டு வருவார் வீட்டுக்காரர். ஓர் ஆளால் இது முடியாது என்பதால் வீட்டிலிருக்கிற மற்றவர்களும் இதுக்கு ஒத்தாசை செய்வார்கள். அலங்கரிக்கட்டிருக்கும் முன் பக்கத்தை அப்படியே கவிழ்த்து பின்பக்கம் பார்ப்பான் வேலு. பக்கத்தில் இருக்கிற குடத்திலிருந்து தண்ணீரை ஊற்றி வாரியலால் கழுவுவான். கதவின் சிராய்ப்புகளில் அடைந்துகிடக்கிற மூட்டைப்பூச்சிகள் வெளியேறி ஓடும். நன்றாக கழுவி எடுத்துவிட்டு, தொங்கும் ஆட்டை எடுத்து இதில் போடுவான். சிலுப்பி (குடல்), ஈரல், கிட்னி, புடுக்கு உட்பட ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெட்டி எடுப்பான். வயிற்றுப்பகுதிக்குள்ளானவற்றை இப்படி தனியாக எடுத்து கிளீன் செய்ததும் அடுத்து ஒவ்வொரு பகுதியாக வெட்டுவான்.
கால், தொடை உள்ளிட்ட கறிகளை துண்டு துண்டாக்குவான். பிறகு, எத்தனை கூறு வைக்கணும்? என்பதை சைகையால் கேட்பான்.
ஒவ்வொரு கூறுக்கும் பக்கத்து வீட்டில் அல்லது சொந்தக்காரர்களிடம் காசு வாங்கியிருப்பார்கள். எத்தனை பேரிடம் வாங்கியிருப்பார்களோ அவர்களுக்கு ஒரு பகுதியை கூறுவைத்து பிரிப்பான். அந்த கூறுகளில் மற்றவர்களுக்கு கொடுத்ததில் கொஞ்சமும் குறைய கூடாது. ஈரல் ஒரு கூறில் அதிகமென்றால், பிறகு நடக்கிற வெட்டுக்குத்துக்கு வேலுவும் பதில் சொல்லவேண்டும். அதனால் கூறு வைப்பதில் அவனுக்கு அதிக கவனம் உண்டு. கால்களும் தலையும் மச்சினன்மார்களுக்கு. சிலுப்பிக்கு யாராவது வந்து சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
அனைத்தையும் வெட்டிவிட்டு கத்தியை கழுவி உட்காருவான் வேலு. ஆட்டுக்காரர், ‘தோலை நீ கொண்டு போயிரு. கறி வேணுமா? காசு தரவா?' என்பார்.
‘ஒங்களுக்கு எது சவுரியமோ அதான்' என்று சிரிப்பான். காசென்றால் காசு, கறியென்றால் கறி. இதற்குள் வேலுவைத் தேடி நான்கைந்து பேர் நிற்பார்கள் அடுத்த ஆடை வெட்டுவதற்கு. வேலுவின் மகனோ, மகளோ வந்து, அப்பாவை பார்த்துக்கொண்டிருபபர்கள். ஆடு வெட்டும் வீட்டில் கிடைப்பதை அப்படியே மகளிடம் கொடுத்து அனுப்புவான். அடுத்த வீட்டுக்கு மகன் வருவான். அதற்கடுத்த வீட்டுக்கு மகள்.
முடியோ, ஆடோ, வெட்டுதல் அவனது தொழிலாகிவிட்டது. அவனது தம்பிகளில் ஒருவன் வீட்டில் துட்டைத் தூக்கிக்கொண்டு யாருடனோ மும்பைக்கு ஓடிவிட்டான்.
‘ஏங் குருசாமி, எவ்வளவு எடுத்துட்டு போனாம்'
‘நெல் வித்து அப்பதாம் எட்டாயிரம் வச்சிருந்தேன்... மூவாயிரத்தை விட்டுட்டு அஞ்சாயிரத்தை தூக்கிட்டுப் போயிட்டாம் செரிக்கியுள்ள' என்றான் குருசாமி. பேசிக்கொண்டிருக்கும்போது வேலு குறுக்கிட்டு, ‘அவன் போறேன்னு கேட்க்கும்போதே இவர் கொடுக்க வேண்டியதானே... கஞ்ச பிசினாறி' என்றான்.
‘யாரை கஞ்சப் பிசினாறிங்கல... உன்னைய பாவம் பாவம்னு நான் பாத்துட்டிருந்தா, துட்டை தூக்கிட்டுப் போனவனுக்கு சப்போட்டால?'
அடுத்தடுத்து நடந்த சொத்துப் பிரிப்பு.
குருசாமி வீட்டுக்கு முடிவெட்ட வருகிறவர்களை யாரும் தடுக்கக் கூடாது. மும்பைக்கு ஓடிப் போனவனைத்தவிர நடுவுள்ளவனுக்கு வீட்டின் பின்பக்கமும், வேலுவுக்கு வீட்டுக்கு எதிரில் இருக்கிற குச்சிலும் முடிவெட்டுவதற்கான இடமாக ஒதுக்கப்பட்டது. வேலு, முடிவெட்டுவதை விட ஆடு வெட்டுவதில் அதிக கவனம் செலுத்தினான். நடுவுள்ளான் கார்சாண்ட் அருகே சின்னதாக சலூன் கடை போட்டான்.
ஊர் இப்போது மாறிவிட்டது. சிமென்ட் சாலைகளாகியிருக்கிற தெருவெங்கும் அவரசத்தின் கால்கள் பதிந்து கிடக்கின்றன. தலையை இப்படியும் அப்படியும் இழுத்து, வளைத்து, நறுக்கி அலைகிற இளசுகளுக்காக நான்கைந்து மாடர்ன் சலூன்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஊரின் ஒதுக்குப்புறத்தில் திறக்கப்பட்ட ஆட்டிறைச்சிக் கடை, இப்போது தினம்தோறுமாக மாறியிருக்கிறது. உடல் இளைத்துப்போன வேலு, அங்கு வலுவோடு ஆட்டின் தோல் உரித்துக் கொண்டிருக்கிறான், வாயில் பீடியை வைத்துக்கொண்டு.
................................................................................................................................ Download As PDF

5 கருத்துகள்:
உங்க ஊரு எவ்வளவோ பரவாயில்லை அண்ணாச்சி.வேலு இன்னும் ஆட்டு தோலு உரிசசிகிட்டு உள்ளூர்லே இருக்காரே . எங்க ஊரு தொழிலாளிங்க எல்லாரும் எளநதாரிக படுத்தின பாட்டுல ஏதேதோ ஊருக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க... :((
ஆமா. நெசந்தான்.
இங்கயும் வேலுமட்டும்தான் இன்னும் இருக்காப்ல.
நன்றி அண்ணாச்சி.
nallaayirukku...
nallaayirukku...
நன்றி ரசிகை.
Post a Comment