Tuesday, September 30, 2008

அன்புமணியும் தம் பிரச்னையும்

சிகரெட் பிடிப்பதா வேண்டாமா என்பதான தீர்மானத்தை நானே எடுத்துக்கொள்கிறேன். எனக்கான நோயை சுய சிந்தனையுடனேயே காசுகொடுத்து வாங்கிக் கொள்கிறேன். எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அறியமுடிகிறவனாக இருக்கிறேன்.

நான்கு மாடி கட்டிடம் கட்டும் தொழிலாளி, பீடி குடித்தால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் என்று நினைக்கிறான்.

மாட்டு வண்டியில், சந்தைக்கு போகும் தாத்தாவுக்கு சுருட்டு, சுகம் தருகிறது.
அவரவர்களுக்காக சுகங்களை அவரவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். யாரும் சொல்லித்தரவில்லை.

இரண்டு விரக்கிடைக்குள் சிகரெட்டையோ பீடியையோ விட்டு, வாயில் இப்படி வைத்து இழுக்க வேண்டும் என்று எந்த ஆசிரியரும் சொல்லித் தந்ததில்லை.

எங்கப்பா சிகரெட் பிடிக்கும் போது, ‘பையன் கெட்டுப்போயிட்டான்’ என்றார் தாத்தா. நான் குடிக்க ஆரம்பிக்கும் போது, ‘கொஞ்சமா...’ என்றார் அப்பா. என் மகன் பிடிக்கும் போது, நான் கண்டுக்காமல் போவதே மரியாதை.

யாரும் எதையும் சொல்லிக்கொடுக்க தேவையில்லை இங்கே.
‘நீங்க குடிச்சு நாசமா போங்க, அதுக்கு நாங்களா கிடைச்சோம். நிக்கோடின் காத்தை நாங்க சுவாசிச்சு, எங்க நுரையீரலை நாசமாக்கணுமா’ என்று கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானதே.

‘இங்க பிடிக்காதே, இது பொதுஇடம், அங்க குடிக்காத; அதுவும் பொதுஇடம்தான். டீக்கடைக்குள்ள குடிக்காதே, வெளியேயும் குடிக்காதே...’ இப்படி குழப்பி கூப்பாடு போகிற அன்புமணி ராமதாஸ் (இவரின் அறிவிப்பை பா.ம.க தொண்டர்களாவது பின்பற்றுவார்களா பார்ப்போம்) கடைகளில் சிகரெட் விற்க ஏன் தடை கொண்டு வரக்கூடாது?

இதை செய்துவிட்டுதானே மற்றதை சொல்லியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?.

டொபாக்கோ முதலாளிகளின் பண மூட்டையை உங்களால் பகைக்க முடியாது. ஆட்சியையும் உங்கள் அமைச்சர் பதவியையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள் அவர்கள். நீங்கள் அங்கே கை வைத்தால் உங்களுக்கான இழப்புகள் ஏராளம் என்கிற பயம்.

புகைப்பிடிப்பவர்களில் அதிகமான சகவிகிதத்தினர் அடிதட்டுமக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம். அம்மக்களின் மீது கைவைப்பது ஆட்சியாளர்களுக்கு கை வந்த கலை. ‘வேறு ஊரில் விலை போகாத நொங்குக்கு உள்ளூரை விட்டால் வேறு கதி’ என்பது மாதிரி, எதற்கும் கைகட்டி, வாய்பொத்தி ‘ஆவ்...’ என்று கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் அடிதட்டுமக்களின் மீது மீண்டும் கை வைத்திருக்கிறார்கள்.

இந்த பாசிச போக்கை எதிர்த்து, நண்பர் ஒருவர் பொதுநல வழக்கு போட இருப்பதாக சொன்னார். அவருக்கு என்னால் ஆன உதவிகளை செய்ய இருக்கிறேன்.

46 comments:

வெயிலான் said...

நெருப்பு.......

கங்கு............

புகை................

சூடு பறக்குது பதிவில!!!!!!

Robin said...

அடித்தட்டு மக்களாக இருந்தாலும் மேல்தட்டு மக்களாக இருந்தாலும் புகை பிடிப்பது அவர்களை மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும். புகை பிடிப்பது மது குடிப்பது போன்ற தன்னை தானே அழித்துக் கொள்ளும் பழக்கங்களை சட்டத்தால் கட்டுபடுத்தமுடியுமென்றால் அதை உடனே செய்வது நல்லது. இந்த விஷயங்களில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது. புகையிலை கம்பெனிகளையும் மதுபான கம்பெனிகளையும் மூடுவதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

Robin said...

அடித்தட்டு மக்களாக இருந்தாலும் மேல்தட்டு மக்களாக இருந்தாலும் புகை பிடிப்பது அவர்களை மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும். புகை பிடிப்பது மது குடிப்பது போன்ற தன்னை தானே அழித்துக் கொள்ளும் பழக்கங்களை சட்டத்தால் கட்டுபடுத்தமுடியுமென்றால் அதை உடனே செய்வது நல்லது. இந்த விஷயங்களில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது. புகையிலை கம்பெனிகளையும் மதுபான கம்பெனிகளையும் மூடுவதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

பாபு said...

"புகைப்பிடிப்பவர்களில் அதிகமான சகவிகிதத்தினர் அடிதட்டுமக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம். அம்மக்களின் மீது கைவைப்பது ஆட்சியாளர்களுக்கு கை வந்த கலை"

இதில் அடி தட்டு மக்களின் மீது கைவைக்க என்ன இருக்கிறது??
கம்பெனி-களை ஏன் தடை செய்ய முடிவதில்லை?என்ற உங்கள் கேள்வி ந்யாயம்தான்.அதே நேரத்தில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை என்பது பொதுவாக எல்லோருக்கும் நன்மைதான்.இதில் சந்தேகம் இல்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அன்புமணியும் தம் பிரச்னையும்//

தலைப்பே தவறு.. தம் என்கின்ற ஆங்கிலத் தொடர்புடைய பெயரை தமிழ்க்குடிதாங்கியின் அன்பு மகன் அன்புமணி சம்பந்தப்பட்ட பதிவில் இடலாமா..? தவறில்லையா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சிகரெட் பிடிப்பதா வேண்டாமா என்பதான தீர்மானத்தை நானே எடுத்துக்கொள்கிறேன்.//

பொது இடங்களில் பிடிக்கக் கூடாது என்பதுதான் இந்த அரைவேக்காட்டு அரசியல் சொல்லும் விஷயம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//எனக்கான நோயை சுய சிந்தனையுடனேயே காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்.//

ஆனால் நோய் வந்துவிட்டால் உடனேயே ஓடி வருகிறீர்களே..? அப்போது யார் உங்களைக் கவனிப்பது.. அது வேலையத்த வேலைதானே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அறிய முடிகிறவனாக இருக்கிறேன்.//

அறிய முடிபவரெனில் இந்நேரம் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்ததை விட்டுவிட்டேன் என்று பதிவெழுதியிருக்க வேண்டும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நான்கு மாடி கட்டிடம் கட்டும் தொழிலாளி, பீடி குடித்தால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் என்று நினைக்கிறான்.//

இந்த நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்கிறது.. நோய் வந்த பின்பு என்ன நினைப்பான்..? குடிக்காமலேயே இருந்து தொலைத்திருக்கலாமே என்ற எண்ணம் வருமா? வராதா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மாட்டு வண்டியில், சந்தைக்கு போகும் தாத்தாவுக்கு சுருட்டு, சுகம் தருகிறது.//

போதை முதலில் தருவது சுகத்தைத்தான். கடைசியாகத் தருவதுதான்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அவரவர்களுக்காக சுகங்களை அவரவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். யாரும் சொல்லித் தரவில்லை.//

சுகங்களை யாரும் கணக்குப் போட்டுப் பார்ப்பதில்லை. துன்பங்களை மட்டுமே தலைமுறை தாண்டியும் மனதில் வைத்திருப்பார்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இரண்டு விரல்கிடைக்குள் சிகரெட்டையோ பீடியையோ விட்டு, வாயில் இப்படி வைத்து இழுக்க வேண்டும் என்று எந்த ஆசிரியரும் சொல்லித் தந்ததில்லை.//

ஆசிரியர்கள் இதையெல்லாம் சொல்லித் தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஜனநாயகம் அல்ல. அதுவெல்லாம் வழி, வழியாக பார்த்து, ரசித்து, பின் பழகியதால் வருவதுதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//எங்கப்பா சிகரெட் பிடிக்கும் போது, ‘பையன் கெட்டுப்போயிட்டான்’ என்றார் தாத்தா. நான் குடிக்க ஆரம்பிக்கும் போது, ‘கொஞ்சமா...’ என்றார் அப்பா. என் மகன் பிடிக்கும் போது, நான் கண்டுக்காமல் போவதே மரியாதை.//

மரியாதை அல்ல பயம்.. பையன் எதிர்த்துவிடுவானோ என்கிற தற்காப்பு யுக்தி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//யாரும் எதையும் சொல்லிக்கொடுக்க தேவையில்லை இங்கே.//

நல்லது எது? கெட்டது எது? என்பதைக்கூடச் சொல்லித் தரக்கூடாது என்பது மனித தர்மமல்ல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//‘நீங்க குடிச்சு நாசமா போங்க, அதுக்கு நாங்களா கிடைச்சோம். நிக்கோடின் காத்தை நாங்க சுவாசிச்சு, எங்க நுரையீரலை நாசமாக்கணுமா’ என்று கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானதே.//

இதற்காகத்தான் இந்தத் தடையுத்தரவு.. புகையை வாங்கும் என் போன்ற அப்பாவிகளின் நிலைமைகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//‘இங்க பிடிக்காதே, இது பொதுஇடம், அங்க குடிக்காத; அதுவும் பொதுஇடம்தான். டீக்கடைக்குள்ள குடிக்காதே, வெளியேயும் குடிக்காதே...’ இப்படி குழப்பி கூப்பாடு போகிற அன்புமணி ராமதாஸ் (இவரின் அறிவிப்பை பா.ம.க தொண்டர்களாவது பின்பற்றுவார்களா பார்ப்போம்) கடைகளில் சிகரெட் விற்க ஏன் தடை கொண்டு வரக்கூடாது?//

இதைத்தான் உங்களது பதிவின் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்.. மாற்றி விட்டீர்கள்..

உங்களது கேள்விக்கு நான் 1000 முறை ரிப்பீட்டு போட்டுக் கொள்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இதை செய்துவிட்டுதானே மற்றதை சொல்லியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?.//

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் அரசு தவிப்பது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே.. அதே போலத்தான்.. மத்திய அரசுக்கு வருகின்ற வருவாயில் 40 சதவிகிதம் இதன் மூலம்தான் வருகிறதாம்.. பிறகு எப்படி விடுவார்கள்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//டொபாக்கோ முதலாளிகளின் பண மூட்டையை உங்களால் பகைக்க முடியாது. ஆட்சியையும் உங்கள் அமைச்சர் பதவியையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள் அவர்கள். நீங்கள் அங்கே கை வைத்தால் உங்களுக்கான இழப்புகள் ஏராளம் என்கிற பயம்.//

உண்மை.. பணம் பத்தும் செய்யும்.. நம் இந்தியத் திருநாட்டில் எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தது பணம். அரசையும், ஆட்சியையும்கூட மாற்றக் கூடியது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//புகைப ்பிடிப்பவர்களில் அதிகமான சகவிகிதத்தினர் அடிதட்டுமக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம். அம்மக்களின் மீது கைவைப்பது ஆட்சியாளர்களுக்கு கை வந்த கலை. ‘வேறு ஊரில் விலை போகாத நொங்குக்கு உள்ளூரை விட்டால் வேறு கதி’ என்பது மாதிரி, எதற்கும் கைகட்டி, வாய்பொத்தி ‘ஆவ்...’ என்று கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் அடிதட்டுமக்களின் மீது மீண்டும் கை வைத்திருக்கிறார்கள்.//

ஏனென்று யோசித்துப் பாருங்கள்.. ரேஷன் கடைகளில் மலிவு விலை அரிசி வாங்குவதும் இதே அடித்தட்டு மக்கள்தான். ஆனால் அதில் அரசு கை வைப்பதில்லை. குறைக்கத்தான் செய்கிறார்கள். ஏன் குறைக்கிறார்கள். மக்களுக்கு சோறு இல்லையெனில் ஓட்டு விழாது.. ஆனால் சிகரெட், பீடி இல்லாவிடில் செத்தா போய்விடுவோம் என்கிற மனப்பான்மை இதே ஏழை, எளிய, அடித்தட்டு மக்களிடம் உண்டு. இதை ஒரு குறையாக அவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அனைத்து அயோக்கிய அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இந்த பாசிச போக்கை எதிர்த்து, நண்பர் ஒருவர் பொதுநல வழக்கு போட இருப்பதாக சொன்னார். அவருக்கு என்னால் ஆன உதவிகளை செய்ய இருக்கிறேன்.//

நல்லது.. வழக்கில் நீங்கள் வெற்றி பெற என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

வளர்மதி said...

ஐயய்யோ ... இந்தப் பக்கம் தெரியாம வந்துட்டேன் ...

Anonymous said...

முருகா, உண்மைத்தமிழனுக்கு அன்புமணியே பரவாயில்லை :).

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக்கூடாதாம்! ஐயா, வாகனங்களின் புகையால் ஏற்படும் நச்சு சிகரெட் புகையைவிட பலஆயிரம் மடங்கு அதிகம்!!. யாராது பொது இடத்துல வாகனம் விடக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவாங்கப்பா :)

சரி, போகட்டும். தனியார் அலுவலகங்கள் எப்படிப் பொது இடமாகும்? என் அலுவலகத்தில் நான் மட்டுமே இருக்கும் என் அறையில் சிகரெட் பிடிப்பதால் அடுத்தவருக்கென்ன கெடுதல்?? :(

இன்னுமொரு விஷயம். ஹோட்டலில் புகை பிடிக்கக்கூடாது. ஆனால் 30 அறைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல் என்றால் பரவாயில்லையாம்!! நல்ல காமெடி பண்றாங்கப்பா :)

இருங்க மக்கா, ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன் :)

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

அண்ணாச்சி,
உங்கள மாதிரி ஆளுக,அர்சியல்வாதி நல்லது செஞ்சாலும் தப்பு சொல்லுவீங்க...
செய்யாவிட்டாலும் தப்பு சொல்லுவீங்க..
எந்த ஒரு பிரச்சினைக்கும் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க கூடாது...
அன்பு மணி என்ன உங்கள சிகரெட் பிடிக்க கூடாதுனா சொன்னாரு?
பொது இடத்தில தான் பிடிக்க கூடாதுனு தான் சொன்னாரு..
பொது இடத்துல சிகரெட் பிடிக்க கூடாதுனு சொன்னதற்கே இப்படி குதிக்கிறீங்களே..அவரு மட்டும் சிகரெட் கம்பெனிக்கு தடை விதிச்சிறுந்தா என்ன குதி குதிப்பீங்க.
சிகரெட் வாசனை சிகரெட் பிடிக்கிற பயலுவளுக்கு வேணா நல்லா இருக்கும்.ஆனா சிகரெட் பிடிக்காதவனுக்கு வயித்த குமட்டும்..இவ்வளவு பேசற நீங்க பஸ்ல சிகரெட் பிடிக்ககூடாதுனு தெரியல...
தன் பொண்டாட்டியோட(வாப்பாட்டியோட) வீட்டுக்குள்ள என்ன வேணுமாலும் பண்ணுங்க..
ரோட்டுல பண்ணாதீங்க...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஏங்க இப்படி நியாயப்படுத்திறீங்களே.. உங்க பையன் குடிச்சா கண்டுக்காம போவீங்களா நீங்க..அவன் மேல உங்க அக்கற அவ்வளவு தானா.. :(
உங்க மேல இருக்காம இருக்கலாம் ..

மற்றவர்களுக்கு சிரமம் தரக்கூடாது என்று தோன்றுபவர்கள் தானாகவே செய்யவேண்டிய விசயத்தை சட்டம் போட்டு செய்யவேண்டி இருப்பது பெரிய கொடுமை தான்.

அவர்கட்சி ஆட்களே கேட்கமாட்டார்கள் என்பதற்காக லஞ்சம் பற்றிய சட்டத்தைக் கொண்டுவராமல் இருக்கலாமா.. கார் பஸ் புகை விடுது அதை அடக்கு சின்ன சிகரெட் புகை பெரிசான்னு கேட்கிறாங்களே.. :)
அவனை நிறுத்த சொல்லுன்னு எல்லாரும் சொன்னா எப்படி ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

to clarify few points :

(1) 30 அறைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்கள் - பெரிய ஹோட்டல்கள் - பணக்காரர்கள், அவர்களுக்கு அனுமதி, ஏழைகளுக்கு இல்லை. என்ன மாதிரியான ஓரவஞ்சனை. வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக அவன் ஒரு பீடிகூடப் பிடிக்கக்கூடாதா??

(2) ஏர்போர்டில் புகைபிடிக்கவென அறை இருக்கிறது. அங்கு பிடித்துக் கொள்ளலாமாம். ஏன் பொதுமக்கள்கூடும் அலுவலகங்களிலும் அப்படி புகைபிடிக்கவென அறைகள் இருக்கக்கூடாது? ஏனெனில், விமானத்தில் செல்பவர்கள் பணக்காரர்கள். அதுதான் காரணம்.

(3) தனியார் அலுவலகங்கள் எப்படி பொதுஇடங்களாகும்??

(4) உடல்நலம் கெடும் என்றால். அது என் விருப்பம். அருகில் இருப்பவர் நலமென்றால், அது வாகனங்களில் புகையால் பலஆயிரம் மடங்கு அதிகம். அவ்வளவு பெரிய பிரச்சனையை விட்டுவிட்டு, சிறிய சிகரெட் புகைக்கு வருவானேன்?

they would like to be remembered in history as someone who has done extra ordinary things during their tenure. அவ்வளவே! இதற்கு நாமா கிடைத்தோம்?

அரியாங்குப்பத்தார் said...

பீடி, சிகரேட், மது குடிப்பது போன்ற பழக்கங்கள் ஒரு காலத்தில் கேவலமாக கருதப்பட்டது. இப்போது அதற்கு வக்காலத்து வாங்கும் காலத்தில் சொரணை இல்லாமல் வாழ்வது வெட்கக்கேடு

கரிகாலன் said...

நாட்டில் நல்லதே நடக்கக்கூடாது என முடிவு செஞ்சிட்டீங்களா...

அரசு ஏதாவது நல்ல திட்டம் கொண்டுவந்த அதை பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வளர்மதி said...
ஐயய்யோ ... இந்தப் பக்கம் தெரியாம வந்துட்டேன் ...//

ஏஞ்சாமி.. கமெண்ட் போட்டிருக்கிறது வளர்மதியா..? ஆச்சரியமா இருக்கு.. அவராவது பயப்படறதாவது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக்கூடாதாம்! ஐயா, வாகனங்களின் புகையால் ஏற்படும் நச்சு சிகரெட் புகையைவிட பலஆயிரம் மடங்கு அதிகம்!!. யாராது பொது இடத்துல வாகனம் விடக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவாங்கப்பா:)//

சுந்தர் ஸார்.. எல்லாம் உங்க நன்மைக்காகத்தான் சொல்றாங்க.. சின்னப் புள்ளைக மாதிரி அடம் பிடிக்கக் கூடாது.. வாகனங்களை தடை செய்வது எந்த நாட்டிலாவது முடியுமா? ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதாக நினைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சரி, போகட்டும். தனியார் அலுவலகங்கள் எப்படிப் பொது இடமாகும்?//

பொதுவிடங்கள் என்றாலே மக்கள் பலர் கூடியிருக்கும் இடம்தான்.. அந்த வகையில் தனியார் அலுவலகங்கள் நிச்சயமாக பொதுவிடங்கள்தான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//என் அலுவலகத்தில் நான் மட்டுமே இருக்கும் என் அறையில் சிகரெட் பிடிப்பதால் அடுத்தவருக்கென்ன கெடுதல்??:(//

அங்கே உங்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஒருவர் வேறு வழியில்லாமல் உங்களுடன் அமர்ந்து உங்களுடைய சிகரெட் புகையை உள்வாங்கி நோய்வாய்ப்பட்டால் அந்தப் பாவம் உங்களுக்குத்தான் வந்து சேரும். பொதுவிடங்களைவிட அலுவலகத்திற்குள் புகை விடுவது அதைவிட கொடிய குற்றமாச்சே.. உங்க ஆபீஸ் அட்ரஸ் கொடுங்க.. புகார் செய்யறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இன்னுமொரு விஷயம். ஹோட்டலில் புகை பிடிக்கக்கூடாது. ஆனால,் 30 அறைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல் என்றால் பரவாயில்லையாம்!! நல்ல காமெடி பண்றாங்கப்பா:)//

இதுதான் அரசியல் காமெடி.. அவ்வப்போது நம்மைச் சிரிக்க வைப்பதில் சினிமா காமெடியர்களைவிடவும் வல்லவர்கள் நமது அரசியல்வாதிகள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இருங்க மக்கா, ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன்:)//

இவ்ளோ தூரம் வேலை மெனக்கெட்டு கமெண்ட் போட்டுச் சொல்லிக்கிட்டிருக்கோம்.. அடங்க மாட்டீயாளா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக அவன் ஒரு பீடிகூடப் பிடிக்கக்கூடாதா??//

வாழ்க்கையில் பிரச்சனை இருக்கு என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளச் சொல்கிறீர்களா..? நுவக்ரானை குடித்தால் உடனே சாவு.. பீடி குடித்தால் இருமி, இருமி நெஞ்செலும்பு துருத்தி, ரத்தம் கக்கி சாவு வரும். தேவையா அந்தக் கொடுமை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//உடல்நலம் கெடும் என்றால். அது என் விருப்பம்.//

கூடாது..

வலையுலகின் பின்னவீனத்துவ நாயகர்களில் ஒருவரான ஜ்யோவ்ராம்சுந்தர் இன்னமும் படைக்க வேண்டியவைகள் நிறைய உள்ளன..

அவர் தன்னுடைய எழுத்துக்களால் வலையுலகின் பொதுச்சொத்தாக மாறி ரொம்ப நாட்களாக ஆகிறது..

அவர் உடல் நலன் கெடும் எந்தச் செயலையும் செய்ய அவருக்கே உரிமையில்லை என்பதை அவர் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

Anonymous said...

Smoking in public places is prohibited in many countries
including Canada, USA and most
countries in Europe. In USA most
universities dont permit smoking
in campuses and campus housing.
You cant smoke in trains and during
flights. It is good that India is
also following this.

Anonymous said...

'அவர் தன்னுடைய எழுத்துக்களால் வலையுலகின் பொதுச்சொத்தாக மாறி ரொம்ப நாட்களாக ஆகிறது'

அடப்பாவிகளா, காமக்கதைகள்ன்னு கொஞ்சம் கதையை ஒத்தன் எழுதினா, உடனே அவன்
பொதுச்சொத்தா :). அப்படின்னா அவங்க அவங்க காசுல அவர் கேக்கறைதெயெல்லாம் வாங்கிக் கொடுங்க :). உண்மைத்தமிழன்
தம் செலவை ஏத்துக்குவார்ன்னு
சொல்லிட்டோம் :).

வீரமணி said...

சார் வணக்கம் பேசி ரொம்ப நாளாச்சி உங்க ஊர்லதான் சேவல் ஷு ட்டிங்க்ல இத்தனை நாளா இருந்தோம்..

படைப்புகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.மறுபடியும்பேசலாம்.
அன்புடன்
வீரமணி

நரேஷ் said...

//இன்னுமொரு விஷயம். ஹோட்டலில் புகை பிடிக்கக்கூடாது. ஆனால் 30 அறைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல் என்றால் பரவாயில்லையாம்!! நல்ல காமெடி பண்றாங்கப்பா :)//

இது அந்த சட்டம் நடைமுறைப் படுத்தலில் உள்ள ஒரு தெளிவற்ற அனணுகுமுறையாக இருக்கலாம். அதற்காக அந்த சட்டமே தவறு என்று எப்படி சொல்ல முடியும்?

//(இவரின் அறிவிப்பை பா.ம.க தொண்டர்களாவது பின்பற்றுவார்களா பார்ப்போம்)//

நியாயமான கேள்வி. இந்த கேள்வி எல்லார் மனதிலும் உள்ளது. போகப் போகத்தான் தெரியும். ஆனால் ஒரு விஷயம் கவனிங்க, உங்க கூற்றுப்படி அன்புமணி தன் கட்சித் தொண்டர்களுக்கு எதிராகவே சட்டம் கொண்டு வந்திருக்கிறர் அது அனைவருக்கும் நல்லது என்ற ஒரே காரணத்திற்காக. அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன். இந்த சட்டம் ஒரு வேளை பெரு நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப் படலாம். கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் சற்றே கண்டு கொள்ளாமல் விடலாம். ஆனால் அதற்காக அது இந்த சட்டத்தின் தவறாகி விடாது.

//இந்த பாசிச போக்கை எதிர்த்து, நண்பர் ஒருவர் பொதுநல வழக்கு போட இருப்பதாக சொன்னார்//

உங்க உரிமையைப் பறிச்சுட்டதா, பாசிசப் போக்குன்னு கூப்பாடு போடுறீங்களே, ஏன் நாம புகை பிடிக்கிறோம்னு அடுத்தவனுக்கும் பாதிப்பை உருவாக்குறாமே, அவன் உரிமையை பறிக்கறமேன்னு ஏன் சார் நினைக்க மாட்டேங்கறீங்க?

பொது இடங்களில் அடுத்தவனுக்கு பாதிப்பு வராம நடந்து கொள்ளுங்கன்னு சொல்றதுக்கு கூட சட்டம் கொண்டு வர வேண்டியிருக்கு?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
'அவர் தன்னுடைய எழுத்துக்களால் வலையுலகின் பொதுச்சொத்தாக மாறி ரொம்ப நாட்களாக ஆகிறது' அடப்பாவிகளா, காமக ்கதைகள்ன்னு கொஞ்சம் கதையை ஒத்தன் எழுதினா, உடனே அவன் பொதுச்சொத்தா:). அப்படின்னா அவங்க அவங்க காசுல அவர் கேக்கறைதெயெல்லாம் வாங்கிக் கொடுங்க :). உண்மைத்தமிழன் தம் செலவை ஏத்துக்குவார்ன்னு சொல்லிட்டோம்:).//

அனானி.. அவர் எழுதியவற்றில் ஒரு பிரிவுதான் காமக்கதைகள். முழுக்க, முழுக்க அவர் காமக்கதை எழுத்தாளர் அல்ல.. புரிந்து கொள்ளுங்கள்.. அந்தக் கதைகள் எனக்குந்தான் பிடிக்கவில்லை. போனிலும் சொன்னேன். பதிவிலும் எழுதினேன். கமெண்ட்டும் போட்டேன். ஆனால் எழுத்தாளருக்குப் பிடிக்கிறதே.. என்ன செய்ய..? இந்த ஒரு கதையை எழுதினார் என்பதற்காக நாம் அவரை வெறுக்கக் கூடாது..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கம்பெனி-களை ஏன் தடை செய்ய முடிவதில்லை?என்ற உங்கள் கேள்வி ந்யாயம்தான்.//
yes

ஆடுமாடு said...

கருத்துகளை கொட்டிய, வெயிலான், ராபின், பாபு, உண்மைத்தமிழன்(25 கெமெண்டா?)சுந்தர், வளர், தமிழ் ஒழிக பார்ட்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு நன்றி. நன்றி.

ஆடுமாடு said...

அரியாங்குப்பத்தார், கரிகாலன், வீரமணி, நரேஷ், சதீஷ்குமார் உங்களுக்கும் நன்றிங்கோ.

ஹேமா said...

ஐயோ...ஒரே புகையாய் இருக்கு.தங்கள் ஆயுளைக் கை விரல்களுக்கிடையில் வைத்திருக்கும் அதிஷ்டசாலிகள்.

sankarfilms said...

nalla eazhuthirnga...
vazhthukal
sankar
http://sankarkumarpakkam.blogspot.com/